Sunday, February 04, 2018





தோழர்  ராஜனுக்கு,

இது பதில் அல்ல !!!




புரட்ச்சி என்ற வார்த்தை தமிழகத்தில் மலினப்பட்டு இருந்தாலும் எல்.ஐ.சி ஊழியர்களை புரட்ச்சிப்படை என்று வர்ணித்திருந்த ராஜன் அவர்களுக்கு நன்றி !

+2 மாணவர்களின் பாடத்திட்டத்தில்" இன்சூரன்ஸ் "  பாடத்தை சேர்த்து இன்சூரன்ஸ் துறைக்கு சேவை செய்வதாக மாய்மாலம் காட்டினார்கள் .சென்னையில்உள்ளபத்மாசேஷாத்ரிபள்ளிஇதனை பயன்படுத்தி  மாணவர்களை சேர்க்க ஆரம்பித்தது. இந்த மாணவர்களுக்கு எல்.ஐ.சி யில் வேலை வாய்ப்புக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் காரியங்கள் நடந்தன .பல மாணவர்கள் " அப்ரசண்டி"களாக நியமிக்கப்பட்டனர்.இதன் பின்னணியில் உள்ள சதியையும் நோக்கத்தையும் புரிந்து கொண்ட அகில இந்தியாய் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இதனை வெற்றிகரமாக நிறுத்தியது .

1994ம் ஆண்டு மண்டல கமிஷன் விவாதம் வந்தது அதற்கு பல ஆண்டுகள்முன்பாகவேஏ.ஐ.ஐ.இ.ஏ  சங்கமபிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டினை கேட்டு போராடி வந்துள்ளது .இட ஒதுக்கீடு ரோஸ்டரை தனியாகாதயாரித்து நிர்வாகத்தோடு மோதியது இந்த சங்கம். தோழர்  பாஸ்கரன் இந்த ரோஸ்டரை தயாரிப்பார்.(மதுரை ) . நிர்வாகம் பல சந்தர்ப்பங்களில் தன தவறை பாஸ்கரனின் பட்டியலோடு ஒப்பிட்டு திருத்திக்கொண்ட காலம் உண்டு.

மண்டல்  கமிஷன் உத்திரவை இந்திய அளவில் பலர் எதிர்த்த பொது. உடனடியாக அதனை நடைமுறைப்படுத்த போராடியவர்கள் இன்சூரன்ஸ் ஊழியர்கள்.

பொதுத்துறை யில் முதன்முதலாக மண்டல் கமிஷன் உத்திரவு நடைமுறைப்படுத்தப்பட்டது எல்.ஐ.சியில்தான்.

இதனை எதிர்த்து பா ஜ.க தலைமையில் குஜராத்தில் போராட்டம் நடந்தப்போது   பாஜாகாவை எதிர் த்து போராடி தாக்குதலுக்கு ஆளானவர்கள் எல்.ஐ .சி ஊழியர்கள்.

இன்றைய நிலைமை என்ன என்பதை ராஜன் கேட்கிறார் எத்தனை சதம்  பிற்படுத்தப்பட்டவர்கள், மற்றவர்கள் எத்தனை  என்பதை சொல்லுங்கள் என்று கேட்கிறார்.

தெரியவேண்டியதை தெரிந்து கொள்ளும் நெருக்கமான இடத்தில் இருக்கும் ராஜன் இதனை ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் தெரிந்து கொள்ளமுடியும் !

பொதுவெளியில் தான் விவாதிக்க வேண்டும் ......???!!!

0 comments: