Monday, December 04, 2017






"com . N .S "





"com N S  ! வாழ்த்துக்கள்  !"

"வாங்க ! comrade ! 12 th இல்லையா இந்தவருடம் ! எப்படி தயாரிப்பு இருக்கு"

வாழ்த்து சொன்னவர்  மாணவர் அமைப்பை சேர்ந்த  12th மாணவர் .18 வயது இருக்கலாம். 


96 வயது ! கல்லூரியில் படிக்கும் பொது பிரிட்டிஷ் பொலிஸாரால் கைது செய்யப்பட சுதந்திர போராட்ட வீரர் . பல ஆண்டுகள் சிறை வாசம்> பல ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை ! மாவட்ட செயலாளர் 1 மாநில செயலாளர் ! மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் . ஓய்வாக இருக்கிறார். அவருடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து  சொல்கிறான் அந்த சிறுவன் ! அல்லது மாணவன் ! அதனை ஏற்று அவனோடு பரிவான விசாரிப்புகளை தருகிறார் தோழர் சங்கரய்யா !


ஒரு கம்யூனிஸ்டு கடசி உறுப்பினர்களிடையே தவிர வேறு எங்கும் இத்தகைய விசாரிப்புகள் கேட்கவோ காணாவோ  முடியாது.  


மதுரைக்கு வரும் போதெல்லாம் தீக்கதிர் அலுவலக மாடியில் தான் தங்குவார். அவரோடு பல சந்தர்ப்பங்களில் பேசவும் விவாதிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது . கூட்டம் முடிந்ததும் "எப்படி இருந்தது ? சரியாக பேசினேனா ?" என்று  என்போன்றவர்களிடம் கூட அபிப்பிராயம் கேட்பார் 


மிகசிறந்த ரசிகர்> கலை இலக்கியத்துறையில் கரைகண்டவர் .பலசந்தர்ப்பங்களில் இலக்கியம் பற்றி அவர் ஆசிரியர் குழுவில் பேசி இருக்கிறார் .

செம்மலர் கதைகளை பற்றி விமரிசிபார் . "செம்மலருக்கு மற்ற வெகுஜன பத்திரிகைகளுக்கு எழுதும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பை அனுப்புவது பற்றியும் விமரிசிப்பார். அவர்கள் குமுதத்திற்கும் எழுதுவார்கள். கல்கி கும் எழுதுவார்கள் செம்மலரு க்கும் எழுதுவார்கள். அந்ததந்த பத்திரிகையின் எடிட்டோரியல் பாலிசிக்கு தகுந்த மாதிரி தங்கள் எழுத்தை சரிசெய்து கொள்வார்கள்."

".நாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் . தொழிலாளர்கள்,சாதாரண மக்கள், உழைப்பாளிகள் ஆகியோரை சித்தரித்து அவர்கள் பாடுகளை விவரிக்கிறோம் ! ஏழை எளிய மக்களின் சிரமத்தை,கஷ்டங்களை எழுது  கிறோம். அந்த மக்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்ச்சி , கொண்டாட்டம் இருக்கும் என்பதை சொல்ல மறுக்கிறோம். தை  மாதம் மினாடசி அம்மன் கோவிலில் நடக்கும் திருமணத்தை பார்த்திருக்க்ற்றீர்களா ?  சாதாரண மக்கள், அத்தக்கூலிகள் . ரிக்ஷ தொழிலாளிகள்  திருமணம் நடக்கும்> மலிவான பட்டு வேட்டி சட்டை அணிந்து மணமகனாகவும், பட்டு சேலையில் அவளும் முகம் மலர வருவார்களே ! அதனை ஏன் சித்தரிக்க மறுக்கிறீர்கள்,, ! அவர்களை சைக்கிளில் வைத்து அவன் சேக்காளிகள் இழுத்து வருவார்களே ! அவன் நண்பர்களின் கிண்டலையும்,கேலீயையும் தலையை  குனிந்து கொண்டு நமட்டு சிரிப்போடு அந்த மணமகள் ரசிப்பாள் ! அதனை எழுதுங்களேன் !   "

விருந்துக்காக கோவில் எதிரிலிருக்கும் ஷண்முக விலாசம் சாப்பாட்டு  டிக்கெட்டுக்காக உறவினர்கள் மொய்ப்பார்களே ? எவ்வளவு சுவாரசியமான நிகழ்வு ! அதனை சித்தரியுங்களேன் !"

N S  வெறும் அரசியல் தலைவர் மட்டுமல்ல !


எழுத்தாளர் சங்கத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்கெடுத்தவரும் கூட !!! 


0 comments: