Tuesday, December 19, 2017






சம்ஸ்கிருத இலக்கியத்தில் 

"அனிதா " ...!!!







மருத்துவம் படிக்க விரும்பிய மாணவி அனிதா பற்றி எழுதாத ஏடுகள் இல்லை . வடநாட்டில் உள்ள பத்திரிகைகள் கூட அந்தமாணவியின்    மரணம் பற்றி  எழுதி இருந்தார்கள்.

சிறு வயதிலிருந்து மருத்துவராக வேண்டும் என்ற கனவை நன வாக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் இமாலயம் போன்றது. ஏழ்மையும் குடும்பத்தின் இயலாமையும் அவரை கட்டிப்போட வில்லை . விடாத அவருடைய முயற்சி தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண்கள் கிட்டத்தட்ட மருத்துவ கல்லூரியின் கதவை தட்டும்   நிலைக்கு கொண்டுவந்தன .

அவருடைய பாடுகளைப்பற்றி தமிழ் இலக்கியத்தில்பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

சம்ஸ்கிருத இலக்கியத்தில் அவர் கவிதையாக மலர்ந்திருக்கிறார்.

"அனிதாவா அநித்யாவா "

என்ற கவிதை கோழிக்கோட்டிலிருந்து வரும் "ரசனா " என்ற சம்ஸ்கிருத மொழி பத்திரிகையில் வந்துள்ளது.

கதைகளை கவிதை  வடிவிலும், கவிதை  களை  கதை வடிவிலும் எழுதும் மரபு சம்ஸ்கிருத இலக்கியத்தில் உண்டு.

அனிதாவின் மரணத்திற்கு பிறகு அனிதாவின் தாயும் தந்தையும் படும்வலியையும் வேதனையையும் சித்தரிப்பதாக அந்த கவிதை  உள்ளது. 

"சில வினாடிகள் "வலி "த்ததும் நீ மரணித்துவிட்டாய் மகளே "

நாங்கள் சாகும் வரை வலிக்குமே அம்மா "



என்ற கவிதை  வரிகள் அந்த எளிய பெற்றோர்களின் வலி யை மட்டுமல்லாமல்  இந்த சமூகத்தின் வலியையும் கூறுவதாக அமைந்துள்ளது.

மொழிபெயர்ப்பாளர் முத்து மீனாட்ச்சி இந்த சம்ஸ்கிருத கவிதையை எழுதியுள்ளார் .

.

1 comments:

'பரிவை' சே.குமார் said...

அனிதாவின் இழப்பு பேரிழப்பு...
கவிதையின் கடைசி வரிகளாய் தாங்கள் சொல்லியிருப்பது வருத்தமாக இருக்கிறது.