Saturday, August 12, 2017




மாநிலங்கள் அவையிலிருந்து ,

சீத்தாராம் எச்சூரி

விடை பெற்றார்...!!!



12 வருடங்களாக மாநிலங்கள் அவை  உறுப்பினராக இருந்த சீத்தாராம் எச்சூரி அவர்கள் மாநிலங்கள் அவையிலிருந்து விடைபெற்றார் .அவர் விடைபெறும் பொது ஆற்றிய உரையின் இறுதி பகுதி ;


"என்னைப்போன்றவர்கள் பல லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள். 

நான் சென்னையில் பொது மருத்துவமமனையில் ஒரு தெலுங்கு பேசும் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவன். என் தாத்தா ஒரு நீதிபதியாக இருந்ததால், சென்னையில் இருந்த ஆந்திர அமர்வாயத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். பின்னர் குண்டூருக்கு மாற்றலாகிச் சென்றார். நான் 1952இல் பிறந்தேன். 1956இல் ஹைதராபாத்திற்கு புலம்பெயர்ந்தேன். என் பள்ளிப்படிப்பு, ஹைதராபாத்தில் நிஜாம் மன்னர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த ஒரு இஸ்லாமியக் கலாச்சாரப் பள்ளியில் தொடர்ந்தது. பின்னர் தில்லிக்கு வந்தேன். இங்கே படித்தேன். 

பின்னர் திருமணம் செய்துகொண்டேன். அவரது தந்தை ஒரு இஸ்லாமிய மதத்தில் சுஃபி பிரிவைச் சேர்ந்தவர். அவரது தாயார் மைசூரிய ராஜ்புத் இனத்தைச் சேர்ந்தவர். அங்கிருந்து எட்டாவது நூற்றாண்டில் புலம்பெயர்ந்து வந்தவர். இப்போது நாம் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு என் மனைவியானவர் தந்தைக்கும் தாய்க்கும் பிறந்தவராவார். தென்னிந்திய பிராமணன் ஒருவன் இந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறேன். என் மகனை எப்படி விளிப்பது? அவன் யார்? அவன் பிராமணனா? அவன் முஸ்லீமா? அவன் இந்துவா? அவன் யார்? அவனை இந்தியன் என்று சொல்வதைத் தவிர வேறெப்படியும் அழைத்திட முடியாது. இதுதான் நம் தேசம். இதுவே என் எடுத்துக்காட்டு. நான் என்னை ஓர் உதாரணமாக உங்களிடம் சொல்லி இருக்கிறேன். இதுதான் இந்தியா. இத்தகைய இந்தியாவைப் பாதுகாக்க வேண்டிய அவையில் நாம் வீற்றிருக்கிறோம். இத்தகைய இந்தியாவை நாம் பேணிப் பாதுகாத்திட வேண்டும். இது நடைபெறும் என்று நாம் நம்புவோம். இந்த வாய்ப்பை நல்கியமைக்காக நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன். "



  

0 comments: