Friday, May 05, 2017







சபாஷ் ! ஹன்ஸா அவர்களே ...!!!




நிர்பயா வழக்கில் தீர்ப்பு வந்து உள்ளது.. இது பற்றிய விவாதங்களும் நடந்து வருகின்றன. 5-5-17 அன்று தந்தி தொலைக்காட்ச்சியில், "ஆயுத   எழுத்து " நிகழ்ச் சியில்  பாலியல் வன்முறை பற்றி விவாதம் நடந்தது.

நெறியாளர் அசோகா வர்ஷினி யோடு திலகவதி (ஒய்வு )IG , நடிகர் (?) பாண்டு ,சாமானியர் ஜெயந்தி, மற்றும் அட்வகேட்  ஹன்ஸா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாலியல் வன்முறைக்கு திரைப்படங்கள் தான் காரணமா ?என்ற கேள்வியை முன் வைத்து விவாதம்நடந்ததும். பாவம் ! பாண்டு ! சமூகம் பற்றியும்,திரைத்துறை பற்றியும் அவருடைய அறியாமை மட்டுமே பளிச் சென்று வெளிவந்தது.

திலகவதி அவர்களிடம் அதிகமாக எதிர்பார்த்தேன்.  என்ன செய்ய ? அந்த மாபெரும் தலைவர் ops அணியோடு ஐக்கியமாகிவிட்ட பிறகு எதிர்பார்த்தது தவறு என்பதை நிரூபித்தார்.

சாமானியர் ஜெயந்தி அவர்களின் பேச்சு  சாமானியமானது அல்ல. பாண்டு திணறிய கேள்விக்கு "அப்பா " போன்ற படங்களை சுட்டிக்காட்டியதிலிருந்து விஷய ஞானமுள்ளவர் என்பதை நிரூபித்தார் 

அட்வாக்ட் ஹன்ஸா  விவாதத்தின போது மிகமுக்கியமான விஷயத்தை குறிப்பிட்டார்.

" பாலியல் வன்முறை இரண்டு வகையானது. தனக்கு விரோதமான குழு,மதம்,இனம் ஆகியவற்றின் மீது ஒரு பயத்தை ஏற்படுத்துவதற்காக பாலியல்வன்முறையில் ஈடுபடுவது, மற்றோன்று பாலியல் வக்கிரத்தின் காரணமாக ஈடுபடுவது. இவற்றை வேறுபடுத்தவேண்டும் "  என்கிறார்.

கோத்ரா சம்பவத்திற்கு பிறகு குஜராத்தில் நடந்த சம்பவம்.பில்கிஸ் பானு என்ற ஆறுமாதகர்ப்பிணி பெண் கூட்டு வன்புணர்வுக்கு ஈடுபட்ட வழக்கின் தீர்ப்பும் வந்துள்ள நேரத்தில் இதுவிவாதத்தின் மிக முக்கியமான பொருளாகும்.

நெறியாளர் அசோகா வர்ஷினி இதனை மறந்தாரா ?மறைத்தாரா?


சபாஷ் ! ஹன்ஸா  அவர்களே ...!!!

0 comments: