Thursday, March 16, 2017






பி.ராமமூர்த்தி அவர்களின் ,


திருமண  சிலவு ,


ரூ 9 /- தான் .....!!!






அண்ணல் காந்தி அடிகளின் அறைகூவலுக்கு இணங்க ஏராளமான இளை ஞர்கள்  சுதந்திர போராட்டத்திற்க்குதித்தனர்>தங்கள்  படிப்பு தொழில் ஆகியவற்றை தூக்கி எறிந்து விட்டு தங்களையே இந்த வேள்வியில் ஆகுதியாக தர முன்வந்தனர்.பலர் குடும்பம்,பந்தம் ஆகியவற்றை துறந்து வந்தனர்> குடும்ப வாழ்க்கை  போராட்ட வாழ்க்கைக்கு பொருந்தாது என்று நினைத்தனர்.திருமண வாழ்க்கையை புறந்தள்ளினார்.பலர் சுதந்திரம் கிடைத்தபின் தான் திருமணம் என்று சப்தம் செய்தனர் .பின்னாலிலிவர்களில் பலர் கம்யூனிஸ்ட் ஆகினார்.. 


பி.ராமமூர்த்தி அவர்கள் காங்கிரஸ் கடசியில் இருந்தார். திருமணம் பற்றி சிந்திக்கவே இல்லை. பி. ஆர் காங்கிரசில் இருந்தாலும் பெரியாருக்கு அவர்மேல்ப்பிரயம் அதிகம்.பல சமூக சீர்திருத்த நடவடிக்கைகளில் இருவரும் ஒத்த கருத்தை கொண்டவர்கள்.


1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது .1952ல் சட்டமன்ற   தேர்தல் மதராஸ் மாகாணத்திற்கு நடந்தது> காங்கிரஸ் ஆடசி கம்யூனிஸ்டுகளை நரவேட்டை ஆடிய காலம் அது. பிஆர் அவர்கள்   சிறையில் இருந்தார். அப்போது தான் தேர்தல் நடந்தது. பெரியாரும் திராவிடர் கழகமும்  பி.ஆரை வெற்றிபெற முனைப்பாக செயல்பட்டது . சிறையில் இருந்தபி  ஆர் வெற்றி பெற்றார்.


மொழி வாரி மாகாணபிரிவினை நடந்து மதராஸ் மாநில சட்டமன்றமாக மாறிய பொது பி ஆர் எதிரக்கட்சி  தலைவரானார். 


பெரியாரின் செல்லப்பிள்ளை பி ஆர் என்று அப்போது குறிப்பிடுவார்கள். நாற்பது வயதிற்கு மேல் தன செல்லப்பிள்ளைக்கு திருமணம் செய்விக்க பெரியார் விரும்பினார். "உங்கள் இஷடம் " நீங்கள் என்ன சொல்கிறீர்களா அதனை கேட்கிறேன். அனால் என்னிடம் காலணா கூட கேட்கக்கூடாது"என்று  பிஆர் கூ றி இருக்கிறார். 


பின்னாளில் தீக்கதிர் பத்திரிகை ஆசிரியராக இருந்த கே.முத்தையா அவர்களின் மனைவி யமுனா அம்மையார்.அவருடைய தங்கை அம்பாள். கம்யூனஸ்ட குடுமபம். அடக்குமுறையின் பொது சில வருடங்கள்   மும்பை ஏ.ஐ  டி யு சி அலுவலகத்தில் பணியாற்றியவர்கள். 


பெரியார் தலைமையில் அம்பாள்,பி ஆர் திருமணம் நடந்தது> மிக எளிமையான திருமணம். திருமணம் முடிந்ததும் அவரவர் அவரவர் வீட்டிற்கு உணவருந்த செல்லவேண்டும் என்பது நிபந்தனை.எல்லாரும் கிளம்பினர்.  


கிளம்பும் சமயத்தில் " ராமமுர்த்தி இங்கவா " என்று பெரியார் அழை த்தார். "இந்தாப்பா" என்று ஒரு ரூ பாயை நீட்டினார். 


"ஓரு ரூ தான் மொய்யா ? "என்று கேட்டிருக்கிறார் பி ஆர்.


" எண்ணிக்கிடா  மொய்  எழுதினேன்," கல்யாண சிலாவுக்குத்முடியாதுனு சொல்லிட்டே> ஓங்கலையானத்துக்கு நான் செலவழிக்கவா. அதான்அம்பாள் ட  கேட்டேன் .பத்து ரூ கொடுத்தது .உனக்கு ஒன்னு. அம்பாளுக்கு ஒன்னு .தலைமை வகித்த எனக்கு ஒன்னு .மூணு ரோஜா மாலை வாங்கினேன். 9 ரூ மிசசம் ஒரு ரூ .அம்பாள் ட  ஞாபகாமா கொடு " எ ன்றார் பெரியார்.


9 ரூ பாய் சிலவில் எதிர்க்ட்சி  தலைவர் திருமணம் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன .


அந்த பி ஆரை தான் "பஞ்சாபகேசய்யர் மகன் தானே " என்று ஏசினார் முரசொலி மாறன்.


1 comments:

இராய செல்லப்பா said...

சாதியைச் சொல்லி மற்றவர்களின் சாதனைகளைத் தாழ்த்திப் பேசுவது திராவிடக் கட்சிகளின் இயல்பு. அதிலும், தேர்தலில் தோற்றுப்போனால் உடனே அந்த ஆயுதத்தைக் கையில் எடுப்பார்கள். தமிழகத்தில் இதுதானே அன்றாட ஜோக்!

- இராய செல்லப்பா (தற்போது) நியூஜெர்சி