Wednesday, February 15, 2017







"சசிகலா 

டர்வல் தோஷி "

நேற்று (14-2-17 ) காலை பத்துமணிக்கு தொலைக்காட்ச்சி பேட்டி முன் அமர்ந்து விட்டேன். சன் ,கலைஞர் , என்று யாருக்கும் ஜெயலலிதா என்ற அம்மையார் வாழ்ந்ததும் ,இறந்ததும் பற்றி தெரியாதவர்களாக மாறிப்போய் இருந்தார்கள். தமிழ் அலைவரிசைகள் இந்தியிலிருந்து "டப் " செய்யப்பட உளுத்துப்போன தொடர்களை ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.

இங்கு கேபிள் டிவி யில் இந்தி.மராட்டி,குஜராத்தி ,தெலுங்கு ,அலைவரிசைகள் கிடைக்கும் .மாற்றி மாற்றி சுற்றியும் எதுவும் தகவல் கிடைக்கும் வழி தெரியவில்லை. செய்திகளை பெறமுடியாது என்று ஆகிவிட்டது.

மீண்டும் தமிழ் அலைகளில் தேடினேன்.ஜெயலலிதாவையேமறந்த தமிழ ர்கள் சசியை நினைவில் கொள்வார்களா ? (!)

வேறு வழியில்லாமல் மீண்டும் மாற்று மொழிக்கு தாவினேன். மராட்டி அலையில் " சசிகலா டர்வில் தோஷி " என்று scroll ஓடிக்கொண்டிருந்தது.

அர்த்தம் புரியவில்லை.முத்து மினாடசி கடைக்கு சென்றிருந்தார்.பக்கத்து வீட்டுமனிதரிடம் ஓடினேன்  . 'சசிகலா குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது " என்று கூறினார்.அது மட்டுமல்ல ."கியா ரே துமாரே கஜகம் " என்று ஏளனமாக சொல்லிக் கொண்டே பார்த்தார்.

"மதராசிகள் " செயல் திறனும் ,செய்நேர்த்தியும் கொண்டவர்கள் " என்று வடநாட்டில் நினைப்பவர்கள் அதிகம். என்ன செய்ய ?

இதே மனிதரிடம் பதினைந்துநாட்களுக்குமுன் "காலரை "தூக்கி விட்டுக்கொண்டு ஜம்பமாகப்பேசினேன்.

அது மெரினாவில் மாணவர்கள் நடத்திய போராட்டம்.இந்தியா முழு மையும், என் உலகமே கண்டு வியந்த போராட்டம்.அந்த "சின்னஞ்சிறுசுகள் "   நடந்து கொண்ட விதம்,மேய் சிலிர்க்க வைத்தது . ஆயிரம் ஆயிரமாய்,லட்சம் லட்சமாய் ஆண்களும்,பெண்களும்,குழந்தை குட்டிகளோடு  வந்து "ஆஜர்" கொடுத்த பொது  நெஞ்சம்  விம்ம உற்சாகம்   கொப்புளிக்க   நின்றேன்.

இன்று 

இது  முடிவல்ல !

ஆரம்பமே !!

புதிதாக ஆரம்பிப்போம் !!!



0 comments: