Thursday, November 10, 2016









"ஜார் "  மன்னனின் 

அரண்மனை வாசலில் ....!!!




அந்த பிரும்மாண்டமான அரண்மனையில் தான் "ஜார் " மன்னன் வசித்தான்.அரண்மனையை சுற்றியுள்ள சாலைகளிலும்  சந்து பொந்துகளிலும்  மக்கள் வசித்தனர். அவர்களுக்கு உண்ண உணவில்லை. வேலை இல்லை. குழந்தைகள் பெண்கள் பட்டினி . மன்னனோ அரண்மனைக்குள் உல் லாச வா ழ்க்கை    வாழ்ந்தான் .

இதனை அந்த பாதிரியாரால் கண்டு கொண்டு சும்மாயிருக்க முடியவில்லை . அந்தமக்களிடையே சென்று அவர்களை ஒன்று திரட்டினார்.அரண்மனை வாசலில் "எங்களுக்கு சோறு போடு " என்று கோஷம் எழுப்பினார் .

"ஜார் " மந்திரியிடம் என்ன "சத்தம்" என்று கேட்டான். மந்திரி விளக்கியதும், அந்த மக்களுக்கு தினம் கோதுமை மாவை கொடுக்கவும் உத்திரவு போட்டான்.

சிலமாதங்கள் சென்றன .     பாதிரியார் தலைமையில் ஆர்ப்ப்பாட்டம் நடந்தது."ஜார்" மந்திரியை அனுப்பினான்."மழை காலம் வருகிறது. எங்களுக்கு வசிக்க கூ றையுடன் கூடிய இருப்பிடம் வேண்டும் "என்று கேட்பதாக  .அமைச்சர் சொன்னார் .

" நம்மிடம் அவர்களுக்கு உதவ தளவாடங்கள் இருக்கிறதா  ?"

"இருக்கிறது அரசே "

"அப்படியானால்  அதனை செய்துகொடுங்கள் "ஜார் மன்னன் உத்திராவிட்டான்.

சில மாதங்கள் சென்றன . மீண்டும் ஆர்ப்பாட்டம் . "மன்னா !  குளிர் வருகிறதுகிழிந்த துணிகளூடன் இருக்கிறோம். எங்களுக்கு கம்பளி ஆடை வேண்டும் "என்று கேட்கிறார்கள் என்கிறார் அமைசர். ஆடைகளை  கொடுக்க மன்னன் உத்திரவிட்டான்.

சில மாதங்கள் சென்றன .மீண்டும் ஆர்ப்பாட்டம் . அமைசசரை அழைத்த "ஜாரி"டம் "மன்னா !'  அந்த மக்கள் தங்கள் குழைந்தைகள் படிக்க பள்ளிக்கூடங்கள்  வேண்டு மென்கிறார்கள். உண்ண உணவு,இருக்க இருப்பிடம்,உடுக்க  உடை என்று ஆண்டுமுழு வதும் கொடுக்கும் கொடைவள்ளல் நீங்கள். பள்ளிக்கட்டிடம் ஒருமுறை கட்டினால்போதும் அதனால் பள்ளிக்கட்ட உத்தரவிட்டு விட்டேன் " என்று விளக்கினார் . 

 கோபம் கொண்ட ஜார் மன்னன் " தளபதியை அழைத்து அமைசரின் தலையை வெட்டுமாறு உத்தரவிட்டான். அந்த   பாதிரியாரை பாதாள சிறையில் அடையுங்கள் . ஆர்ப்பாட்டம் செய்ப்பவர்களை  சுட்டு தள்ளுங்கள் "என்று உத்திராவிட்டான்,

"முட்டாளே ! உணவு கொடுத்தால் என்னை வாழ்த்துவார்கள் . இருக்க இடம்கொடுத்தால் அவர்கள் சந்ததிகள்முதற்கொண்டு என்னை விசுவாசிப்பார்கள். உடுக்க உடை கொடுத்தால்தலைமுறைக்கும் நன்றியோடு இருப்பார்கள்."

"கல்வி கொடுத்தால் ?"அமைசார் குறுக்கிட்டார் .


."அறிவு வளரும்.அறிவு வளர்ந்தால் சிந்திப்பார்கள். நான் ரோட்டிலும் ஜார் மன்னன் அரண்மனையிலும் ஏன்  இருக்கிறான் என்று சிந்திப்பார்கள். அதன் பிறகு பிரளயம்தான் ! எதை வேண்டுமானாலும் கோடு ஆனால்மக்களுக்கு கல்வியை மட்டும்    கொடுக்காதே " என்றான் "ஜார்" மன்னன் .


(மதுரை கோட்ட இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் தோழர் தண்டபாணி அவர்கள் கல்வியாளர்களிடையே பேசும் பொது குறிப்பிட்டது.)



0 comments: