Wednesday, September 14, 2016




சம்ஸ்கிருதத்தை 

பா.ஜ.க வால் ,

நட்டமாக நிறுத்தமுடியாது !!!



தொன்மையான மொழிகளில் இரண்டு இந்தியாவில் உருவானது என்பது பெருமைக்குரியதாகும். ஒன்று தமிழ் .மற்றோன்று சமஸ்கிருதம் . சம்ஸ்கிருதம் பேசசு    வழக்கற்று போனது.  "சீரிளமை" தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது. "தமிழா ! நீ பேசுவது தமிழா !"என்ற மறைந்த திருவுடையானின் கம்பிரக் குரல் மனதை அலைக்கழித்துக் கொண்டுதான் இருக்கிறது.

வேத காலத்தில் சம்ஸ்கிருதம் பேசப்பட்டு வந்ததா ? என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். மானுடவியல்,மொழியியல்,வரலாற்று அறிஞர்களே இதற்கான விடை தேடிக்கொண்டு  இருக்கிறார்கள்.

12 ம் நூற்ரான்டில் இளங்கோ அடிகள் "தேரா மன்னா " என்று எழுதினர்   அப்போது வாழ்ந்த முநிசாமியும் ,முப்பிடாத்தியும் இதே மாதிரி பேசி இருப்பார்களா ?

டாக்டர் சிவத்தம்பி இதைப்பற்றி த.மு.ஏ.ச கருத்தரங்கில் குறிப்பிட்டுள்ளார் . 'சாங்க கால தமிழ் இறு க்கமாகஇருந்தது.பக்தி இலக்கிய காலத்தில் அதே தமிழ் இளகி நேகிழ்சசி யோடு   அமைந்திருந்தத்த்து.   அதனால் தான்  அது இன்றும் வாழ்கிறது "என்கிறார். 

கிறிஸ்து பிறப்பதற்கு முன் 3 - 5 ம் நூற்ராண்டு வாக்கில் மக்கள் பிராகிருதம்,பாலி , ஆப்பிரிக்க அரேபிய மொழிகளின் கலப்பில் கோச \சை மொழியை  பேசிக்கொண்டு இருந்தனர்.இன்றைய பாகிஸ்தானில் உள்ள தக்க சிலத்தில் பல்கழகம்  இருந்தது.அதன் அருகில் இருந்த கிராமத்து அறிவாளி இந்தமொழிகளை சீராக்கி புதியதாக சம்ஸ்கிருதமொழிக்கான கட்டுமானம்,இலக்கணம்,இலக்கியம், ஆகியவற்றை அளித்தார். அவர் பெயர் பாணினி..

இதற்கான சான்றாக ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் பார்க்கலாம். ராமன் அவதரித்த பிண தான் கிருஷ்ணாவதாரம். ராமாயணம் சிறந்த சம்ஸ்கிருதத்தில் உருவாக்கி உள்ளது>மகாபாரத செய்யுள்கள் கொசசையாக உள்ளன காரணம் ராமாயணம் எழுதப்பட்ட  காலத்தில் உள்ளதை பின்னாளில்   வளர்சசி பெற்ற மொழியில் திருப்பி எழு தினர் . மகாபாரதத்தை அப்படி எழ்த்தவில்லை ..

மதுரையில் உள்ள முற்போக்காளர்களுக்கு டாக்டர் தா.ச ராசாமணி அய்யாவை தெரிந்திருக்கும். சிறந்த மார்க்சியவாதி தமிழ் அன்பர். கலப்பில்லாதசுத்தமான இலக்கிய தமிழைத்தான் பேசுவார். "ஐயா! அஞ்சல் அட்டை அனுப்பி இருந்தேனே ?'என்று கேட்பார். நாங்கள் அவருடைய பேசசுக்கு அடிமை சுவையாகவும் பிமிப்பாகவும் இருக்கும்.இருந்தாலும் இது யதார்த்தமா? என்ற கேள்வி இருக்கும். எதோ ஒரு "அந்நியத்தனம் " இருப்பது போல் நினைப்பு வரும்.

இதற்கு உதாரணமாக காளிதாசனை குறிப்பிடலாம். அவனுடைய "சாகுந்தலம்  " நாடகத்தில் துஷ்யந்தன் , சகுந்தலை,கன்வர், ஆகியோர் சம்ஸ்கிருதத்தில் பேசுவார்கள். தோழிகள் ,விதூஷகன், பணியாட்கள் ஆகியோர் பிராகிருத்தால் பேசுவார்கள். காளிதாசனின் யதார்த்தமான படைப்பில் ஒன்று சாகுந்தலம்.

(தொடரும் )

.  

0 comments: