Tuesday, August 09, 2016

"நாடகம் "




"செவ்வானம் " 

நாடகத்தை முன் நிறுத்தி ...!!!




எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான தோழர் சுப்பாராவ்  ஆசிரியர் கே ,முத்தையா அவர்கள் பற்றி எழுதி இருந்தார்.    "செவ்வானம் " புதிய தலைமுறை "ஏரோட்டிமகன் " என்ற நாடகங்களைப்பற்றியும் குறிப்பிட்டிருந்தார். செவ்வானம் ,புதிய தலைமுறை ஆகிய இரண்டு நாடகங்களையும்   மதுர பீப்பிள்ஸ் தியேட்டர் சார் நடத்தினர். அந்த இரண்டு நாடகங்களையும் இயக்கம் வாய்ப்பு எனக்கு கொடுக்கப்பட்டது.

செவ்வானம் நாடகம் நூலாக வந்திருந்தது. கே.எம் அவர்கள்  என்னிடம்  அதனைக்கொடுத்து படிக்க   சொன்னார். மொத்தம் 90 சீன் .இரண்டு இரவும் ஒரு பகலும் வேண்டும் . 

"கே.எம் .நாடக இயலுக்கு சம்மந்தமே இல்லாமலிருக்கிறதே ? "என்றேன்.

"இந்த பாரும் யா! எங்களை பூரா ஜெயில்ல அள்ளி  போட்டுட்டான். .தோழர்கள் சோர்ந்து விடாம இருக்க ,பாட்டு போ ட்டி,பேசசு  போட்டி னு நடத்துவோம். ஒரு ஆளு நாடகம் போடுவோம் நாறு .ஒரு சின்ன நாடகம் அப்போ எழுதினேன் யாருக்கு தெரியும் உங்க நவீன dramatics எல்லாம் "

"அப்படியா ?" 

"வெறும் அப்படியா இல்லை ! இந்த நாடகத்துல பி ஆர் நடிசார் ".

பிஆரின் 60ம் ஆண்டு விழாவை  மதுரையில் நடத்தினார்கள். அப்போது செவ்வானம் நாடகம் போட முடிவு செய்யப்பட்டது.

மாசிவீதியில்  அப்போது புத்தன்  ஓவியக்கூடம்  இருந்தது.அதன் முக்கியஸ்தர் புத்தன் இயக்கத்தில் தமுக்கத்தில்  நாடகம் அரங்கேறியது. 

"மதுரை கருடா சீட் பண்ட்ஸ் " உரிமையாளர் ராதாகிருஷ்ணன் கதாநாயகனாக நடித்தார். அவரோடு எல்.ஐ .சி ஊழியர் தனபால் பாண்டியனும் நடித்தார். 

"கே.எம். இப்படியே போட்டால் எடுபடாது. !"

"என்னால எழுத முடியாது. இந்தாப்பாரும் . நிறு இத சுருக்கும் .கதையவும் வசனத்தையும் மாத்தாதையும் " என்றார்  .

சீன் களை வெட்டி,இணைத்து மொத்தம் 21 சீன் களாக்கி கே ம் அவர்களிடம் காட்டினேன். ஏற்றுக்கொண்டார்>.

இந்த நாடகத்தில் எல்.ஐ சி ஊழியர் ராஜ குண சேகர் கதாநாயகனாக நடிக்க தமிழக  மெங்கும்  சென்றோம். 

கீழ் வானில் செம்பரிதிக் கோலம் ,
       இது கிழக்கெல்லாம் சிவப்பாகும் காலம் !
தாழ்வான மனித குலம் வெல்லும் -மக்கள் 
       தர்மத்தின் கை ஓங்கி நில்லும் !!  

என்ற தணிகையின் புகழ்  பெற்ற  பாடல் அந்த நாடகத்தின் ஹைலைட் ஆக அமைந்தது.

சேகரின் தொழிற்சங்க பொறுப்பின் காரணமாக அவர்க்கு பதிலாக வேறு நடிகரை தேடினோம்.அமெரிக்கன் கல்லூரிமாணவர் குமரேசனும் ,திருமலை ராஜனும்கிடைத்தார்கள்.குமரேசன் கதாநாயகனாக நடித்தார். கல்லூரி படிப்பு முடிந்ததும், சென்னை நடிப்பு கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்ற குமரேசன், திரைப்படங்களில் "சக்கரவர்த்தி " என்ற பெயரில் கதாநாயகனானார். "பொண்ணு ஊருக்கு புதுசு " என்ற R .செல்வராஜ் இயக்கிய படம் அவருக்கு

 பெரும் புகழை தந்தது.

புதிய தலைமுறை ( தொடரும் )

.

 








0 comments: