Tuesday, August 09, 2016



"சரக்கு வரி "



சட்டம் இயற்றப்பட்டதாக 


போய் சொல்லி


12000 கோடி அபேஸ் ...!!!




சரக்கு வரி சட்டம் கொண்டுவர அடிப்படை சட்டம் திருத்தப்பட்ட வேண்டும் . எட்டு வருசமாக காங்கிரஸ்-பாஜ.க இதில் கண்ணா முசசி ஆடிவந்தது . மக்களவையில் நிறைவேறியது. மாநிலங்களவையில் காங்கிரஸ்  தயவை வேண்டி பாஜக யாசித்தது.இப்போது மாநிலங்கள் அவையிலும் நிறை வெறியுள்ளது .

அதாவது அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய நிறை வெறியுள்ளது.இது மீண்டும் மக்களவை செல்லவேண்டும். பின்னர் குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு பிறகு மாநிலங்கள் பெருவாரியானவை அங்கீகரிக்க வேண்டும்.. அதன் பிறகுதான் சரக்கு வரி பற்றி  முடியும்.

ஊடகங்கள் சரக்குவரி மசோதா நிறைவேறிவிட்டதாக ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி விட்டன.

நேற்றய செய்திப்படி டி .சி.எஸ்  கம்பெனி பங்கு மட்டும் 5000 கோடி லாபம் அடைந்துள்ளது .இன்னொரு கம்பெனி 6000 கோடி. பங்கு சந்தை  எகிறுது .

அதற்குள் ஆழ்வார்திருநகர்  அய்யங்கார் குதிக்கிறார். சீத்தாராம் எசசுரி  ,இடதுசாரிகள் என்று ஓப்பாரிவைக்க ஆரம்பித்து விட்டார்கள். குழைக்காதர் பெருமாள் கோவில் மதிலில் "நம்பிகள் " முட்டிக்கொள்வதை நாம் தடுக்கப்போவதில்லை.

"சாமிகளே ! சரக்கு வரி மசோதாவை மார்க்சிஸ்ட் கடசி வரவேற்கிறது. அதன் மூலம் சரக்கு விலை குறையும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த பாவிகளின் நோக்கம் அதுதானா  ? மசோதாவை பார்த்துத்தான் சொல்ல வேண்டும்."

1069ம் ஆண்டு வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. பி ராமமூர்த்தி அவர்களிடம் கேட்ட பொது " இதனை ஆதரிக்கிறோம்.அதேசமயம் nationalaisation for whom ? by whom ? என்ற கேள்வியும் இருக்கிறது "என்றார் அந்த தீர்க்க தரிசி .

ஒரே சரக்கின் மேல் மாநிலம்,மத்திய அரசுகள் வரிகளை  போடுகின்றன.சரக்கு வரி மசோதா மூலம் இந்த இரட்டை  வரிக்கு முடிவுகட்டப்படும் என்கிறார்கள் .

மாநிலங்கள் தங்கள் நிதி ஆதாரங்களை இழக்க  வாய்ப்பு அதிகம். பஞ்சாயத்துகள் கூட வரி போட முடியாத நிலைமையை உருவாக்கி விடுவார்கள் .  கவனமாக  இருக்க வேண்டிய தருணம் இது .

0 comments: