Wednesday, April 13, 2016

மதுவிலக்கும் ,

கரும்பு விவசாயமும் ...!!!


மகராஷ்டிரா ,மத்தியபிரதெஅசம் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில்  சர்க்கரை ஆலைகள் அதிகம். இந்த ஆலை முதலாளிகள்  கூடவே மது ஆலைகளை வைத்திருப்பார்கள் . 

சர்க்கரை ஆலைகளின் கழிவுகளிலிருந்துகிடைக்கும் "மொலசஸ் " தான் மது ஆலைகளின் கச்சாபொருள் .இதனைக்கொண்டு தான் இவர்கள் indian made foreign liqor தயாரிக்கிறார்கள்.     விவசாயிகளின் கரும்புக்கே பணம் கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கும் இந்த முதலாளிகள் கரும்புச்சாறி \ன் கழிவிற்கா பணமகொடுக்கப்போகிறார்கள்.? பூராம் முதலில்லாத வியாபாரம்தான்.

மத்திய   அமைச்சர் கத்காரி மிகப்பெரிய தொழிலதிபர்."பூர்த்தி " குழுமம் அவருடையது. கரும்பு ஆலைகள் உண்டு. அதன் காரணமாக மது ஆலகளுமுண்டு . 

தி.மு.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கரும்புக்கு டன்னுக்கு 3600 ரூ கொடுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது அதேசமயம்  தஞ்சையில் விவசாயிகள் "கரும்பு தொகையை "  கையில் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தார்கள். அவர்கள் " ஆலை முதலாளிகள் எங்களிடம் வாங்கிய கரும்புக்கான பாக்கியை கொடு" என்று  . கோஷமிட்டுகொண்டு சென்றார்கள். அந்தப்பகுதி விவசாயிகளுக்குமட்டு 36 கோடி ரூ கொடுக்காமல் ஆலை நிர்வாகம் வைத்திருக்கிறது.

கரும்புக்கே பணம் கொடுக்காமல் இருக்கும்  இந்தமுதலாளிகள் கழிவுக்கு பணம் கொடுப்பார்களா ? தமிழ் நாட்டில் சென்ற ஆண்டுமட்டும் இந்த கரும்பு கழிவுகளைபயன்படுத்தி விற்பனையான மதுவின் மதிப்பு 25000 கோடி ரூபாயாகும்.இது அத்துணையும்  கரும்பு விவசாயிக்கு போகேண்டியவை. அத்துணையையும் ஆலைமுதலாளி"அபேஸ்" செய்கிறான் இது தமிழ் நாட்டில்மட்டும்.

அகில இந்திய அளவில் .......??

 தி.மு.க.வும் அதிமுகவும் மதுவை ,படிப்படியாகவோ ,செங்கல் செங்கலாகவோ  குறைக்க போவதாக கூறுவார்கள் .செய்ய மாட்டார்கள்.ஏனென்றால் இவர்கள் மது ஆலைமுதலாளிகளுக்கு வேண்டியவர்கள்.

கரும்பு விவசாயிளுக்கு நியாயமாக சேரவேண்டியதை வாங்கிக் கொடுத்தாலே போதும்.

இவர்களால் முடியாது !!

  



 

1 comments:

சரவணன் said...

கரும்பு விவசாயம் பண்ணிவிட்டு வறட்சி, வறட்சி என்று கூக்குரல் இட்டால் என்ன அர்த்தம்? இந்தியா முழுவதும் கரும்பு விவசாயத்தைத் தடை செய்நுவிட்டு சர்க்கரையை இறக்குமதி செய்து கொள்ளலாம். குறிப்பாக பாகிஸ்தான், கியூபா ஆகியோரிடம் வாங்கலாம்.