Tuesday, March 08, 2016



"மது விலக்கு"




நெல்லை நகராட்சி ஆரம்பபள்ளியில் அப்போதுநான் படித்துக் கொண்டிருந்தேன். எங்களை ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள்.பெரிய மைதானம் அங்கு வைக்கப்போரில் ஒரு பெரிய பொம்மை இருந்தது. 

பெரியவர்கள் எல்லாம் பேசினார்கள்.பின்னர் அந்த பொம்மைக்கு தீ வைத்தார்கள்.மது அரக்கன் ஒழிந்தான் என்று எல்லாரும் கத்தினார்கள்.

நெல்லை டவுண் பக்கத்தில் தான் "பாட்டப்பத்து "கிராமம். எங்கள் வீ ட்டிற்கு அடுத்து மாரி நாடார் தோப்பு. தோப்புஎன்பதை விட" பனங்கொல்லை " என்றுதான் சொல்வோம் 50-60 பனைமரமிருக்கும். பனை ஏறிகள் மார்பில் தோலால் ஆனா உறை அணிந்து மரமெறுவார்கள்.சிறு குடுவையில் கள்ளை இறக்குவார்கள். அவர்கள்விட்டு பெண்கள் வாய் குறுகிய 'சால் " களில் அவற்றை விடுவார்கள் .வெள்ளை வெளேரென்று  நுரையாக இருக்கும். நான்கு நாள் புளித்த மோர் வாசம் வரும்.

என் சிறுவயதில் குடி பற்றிய அனுபவம் வள்ளிசாக இல்லை என்றே கூறலாம்
எங்கள் தெருவில் ராமய்யர் என்று ஒருவர் இருந்தார். அவர் கல்யாணவீடுகளூக்கு சமையல் செய்ய போவார். சில சமயம் அவர்வீட்டி வாசல் தின்னையி மதிய நேரத்தில் கத்திக் கொண்டு இருப்பார்அவர்வீடு பக்கத்து எதிர்வீடுகளீல் கதவை அடைத்துக் கொ ண்டு உள்ளே இருப்பார்கள்.

"ராமன் கள்ளு குடிச்சுட்டு வந்து கத்தறான் .அங்கபோகாத அம்பி " என்று பாட்டி எச்சரிப்பாள். திண்ணையிலிருந்து எட்டி பார்த்துவிட்டு பயந்துஓடி
விடுவேன்.
ஆரம்பப்பள்ளி,நடுநிலைப்பள்ளி ,உயர்நிலைப்பள்ளி, கல்லுரி என்று முடித்து வரும் வரை மது பற்றி அதிகம் தெரியாதவனாகவே இருந்து விட்டேன்.

நான் எல்.ஐசி யில் வேல கிடைத்து ஹைதிராபாத்தில் சேர்ந்தேன் . "கிங்க்ஸ் வே" " அபிட்ஸ் " ஆகிய பஜர்களில் பத்து கடைக்கு ஒன்று "ஒயின் ஷாப் " என்று இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்..கண்ணாடி அலமாரிகளில் பாட் டில் களை வைத்திருப்பார்கள். பலர் கூச்ச நாச்சமின்றி வாங்கிச் செல்வார்கள். நிஜாம் ஆட்சியில் இருந்ததால் இங்கு மதுவிலக்கு அமலில் இல்லை என்றார்கள்.

அறை  நண்பர்கள்  இரவு நேரங்களில் குடிப்பார்கள். என்னையும் குடிக்க கேட்பார்கள்.நான் மறுத்து விடுவேன்.

என் ஆபத் நண்பன் ராகவனுக்கு திருமணம். அவன் குமபகோனத்து ஐயங்கார். கல்யாணம் கும்பகோணத்தில் எங்களுக்கு விருந்து வைத்தான்.
நண்பர்கள் பாட்டில்களை உடைத்தார்கள். என்னையும் நண் பனை வாழ்த்த குடிக்கச்ச்சொன்னார்கள். மறுத்தேன்.பின்னர் ராகவனுக்காக கொஞ்சுண்டு குடிக்க சம்மதித்தேன். கொடுத்தார்கள். ஆறுமுகம் பிள்ளை நாகர்கொவில் 
காரன்."இது dm பிராந்தி வே .எறும்பு கடிச்மாதிரி இருக்கும்" என்றான்.குடித்தேன்

அன்று இரவு முழுவதும் தூக்கம்வரவில்லை என் அம்மாவின் முகம   அ டிக்கடி வந்தது.ஒரே துவர்ப்பு. அழுகியபழ்வாடை ஏப்பமாக வந்தது.
இரவு எப்போதுடா விடியும் என்று காத்திருந்தேன் ,ஆறு மணிக்கு எழுந்துகுளித்து ஆறுமுகம் பிறையில் வத்திருந்த்முருகன் படத்தினடியிலிருந்த  விபூதிய பூசிக்கொண்ட பிறகு தான் ஓரளவு மனம் சமாதானமாகியது.1962 வரை ஹைதிராபாத்தில் இருந்தேன். சாதாரணமாக குடிக்க பழகிவிட்டேன்.
" நான் habitual drunkard இல்லை. ஆனாலும் குடிப்பேன் "

மதுரைக்கு மாற்றலாகி வந்து விட்டேன். இங்கு குடிக்க temtation  இல்லை..
1967ம் ஆண்டு தேர்தல் வந்தது. காங்கிரசை எதிர்த்து ஏழு கட்சி கூட்டணீ அமைந்தது.தேர்தல் பணியிலீடுபட்டேன். cn அண்ணாதுரை முதலமைசரானார் நல்லமனிதர் தமிழக மக்கள் தாங்களே முதல்வரானது மாதிரி மகிழ்ந்தார்கள். 

அப்பாவி மனிதர் நோய்வாய்பட்டு 1969ல் மறந்தார் அவருக்கு பிறகு கருணாநிதி முதல்வரானார்.

1970ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30ம் தேதி கருணாநிதி  மதுவிலக்கை ரத்து செய்தார்.

தமிழகத்து தெருக்களில் சாராயமும் மதுவும் ஓட ஆரம்பித்தது.சமீபத்தில் என்மாமா வீட்டுக்கு சென்றிருந்தான் தாகமாக இருந்தது.fridge ஐ திறந்தேன்.
கழுகு மூக்கு போன்ற பாட்டிலிருந்தது . " அத்தான் ! அது ஷீவாள்ரேகல்.சிங்கபூர் சரக்கு. ரண்டு மடக்கு உள்ள தள்ளரெளா  "என்றான் மாமாவின் மகன்.

"சாமா ! முன்னல்லாம் காதுகுத்து,பிறந்தநாள்,சடங்கு என்றால்முந்துன  நாள் வீட்டை மொழுகி மாக்கோலம் போட்டு அழகு படுத்துவார்கள்> இப்பம் முந்தின நாள் இரண்டுமுன்று full வாங்கி fridge ல வச்சுடுவானுங்க " என்றான் ஆறுமுகம் பிள்ளை .
என்னுடைய 80 பிறந்த நாள் . என்மகன் ,பேரன்,மைத்துனன், சகலர் என்று ஸ்டார் ஹோட்டலில் கொண்டாட்டாம் கேக் வெட்டுவதற்கு முன்னால் விஸ்கி பாட்டில் உடைபட்டது.அருகில் இருந்த்முத்துமிணாட்சி என்னை குடிக்க விடவில்லை.பின்னர் என் மைத்துன னின் சிபாரிசில் இரண்டு மடக்கு  பீர் அருந்த அனுமதித்தார்..


இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மதுவை காணாத தமிழ்நாட்டில் மதுவை மீண்டும் அறிமுகப்படுத்தியவர்  கருணாநிதி.

இன்று மீண்டும் மதுவிலக்கை கொண்டுவருவேன் என்று மக்களிடையே பிரச்சாரம் செய்து வாக்கு கேட்கிறார்.

என்ன தைரியம் ???



1 comments:

சரவணன் said...

கலைஞர் மதுவிலக்கை 1970ல் நீக்கினார்தான். ஆனால் அவரது ஆட்சியிலேயே மீண்டும் கொண்டுவந்து விட்டார். ஆக தவறு அப்போதே திருத்தப்பட்டுவிட்டது. குடி என்பதே தெரியாமல்தான் அப்போதைய தலைமுறை வளர்ந்தது. அப்படி இருந்த தமிழ்தாட்டில் சாராயமும், பிராந்தியும் ஆறாகப் பெருக்கெடுத்து ஓட வைத்தவர் எம்.ஜி.ஆர். ஆண்டு 1980. இதை மட்டும் எல்லோரும் மறந்துவிடுகிறீர்களே ஏன்? நான் கருணாநிதி கட்சிக்காரன் இல்லை. திமுக, அதிமுக இரண்டுமே இந்த விஷயத்தில் தவறு செய்தவைதான். இதில் அதிமுக அதே பாதையில் தொடர்ந்து போவோம் என்கிறது. திமுக மதுவிலக்கைக் கொண்டுவருவோம் என்கிறது. அப்ப யார் பரவாயில்லை? (இந்தக் குறிப்பிட்ட விஷயத்தைப் பொறுத்தவரை)