Thursday, February 25, 2016

(மீள் பதிவு )






Tuesday, May 26, 2015

அந்த போர் வீரன்

INSURENCE WORKER

பத்திரிகையை

முத்தமிட்டான்.....!!!

எங்கள் ஆயுள் காப்பிட்டுக் கழக மதுரைகோட்ட சங்கத்தின் செயலாளராக பலமுறை இருந்திருக்கிறார்! தலைவராகவும் இருந்திருக்கிறார் ! ஆங்கிலத்தில் நிரம்ப புலமை உள்ளவர் ! பள்ளிப்படிப்பை அன்றய "சிலோனில்" முடித்தவர் ! பின்னர் M.A பட்டம்  பெற்றார் !

மிகச்சிறந்த மனிதாபிமானி !

சங்க கூட்டம் ஒன்றீர்க்காக நானும் அவரும்  நகர பேருந்தில் வந்தோம் ! மதுரை வெளிவீதியில் உள்ள கற்பகம் ஓட்டலிம் காபி குடித்தோம் ! "நீங்கள் போய்க்கொண்டு இருங்கள்1 ரயிலடியில் ஒரு நண்பரை பார்த்து விட்டு வருகிறேன்" என்றார் !

ரயிலடியில் ஒரு சிறு பேப்பர் கவர் கிடைத்திருக்கிறது ! அதற்குள் புதன் கிழமை அதிகாலை ரயிலுக்கான டிக்கெட் உள்ளது ! ரிசர்வெஷன் செய்யப்பட்ட அட்டை டிக்கட் ! அதன் பின்னால் 5 பெருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கண்டிருந்தது ! மதுரையிலிருந்து பாட்டியாலா செல்லும் பயண சீட்டூ

நண்பர் யோசித்தார் ! நேரடியாக ரயிலடியில் உள்ள ரிசர்வேஷன் அலுவலக அறைக்கு சென்றார் ! அங்குள்ள அதிகாரிகள்  மூலம் பயணியின் முகவரியைபெற்றார் !

முகவரியில் மேலூர் அருகே உள்ள ஒரு சிறு கிறாமம் ! தகவல் அனுப்பி அவர் வந்து டிக்கட்டை பெற்றுக்கொண்டு பயணிப்பது முடியாத காரியம் ! நேரடியாக அருகில் உள்ள ஆர்.எம்.ஏஸ் அலுவலகம் சென்று ஒரு கார்டுவாங்கினார் !

"ஐயா 1 நீங்கள் புதன் காலை பயணம் செய்யவேண்டிய டிக்கட் என்னிடம் உள்ளது ! நீங்கள் எந்த கவலையும் படாமல் மதுரை ரயிலடிக்கு வாருங்கள் ! நான் டிக்கட்டோடு நீங்கள் ஏறவேண்டியகோச்சின் அருகே நின்று கொண்டிருப்பேன்! பயனத்தை தொடருங்கள் ! வாழ்த்துக்கள் ! என்று

 எழுதி தபாலில் செர்த்து விட்டார் !

அதே போல  புதங்கிழமை அதிகாலை எழுந்து ரயிலடிக்கு சென்று காத்திருந்தார் ! அந்தப்பயணி அவருடைய மனைவி ,தாயார்,இரண்டு குழந்தைகளுடன் வந்து செர்ந்தார் ! பாடியாலாவில் ராணுவத்தில் பணியாற்றுகிறார் !

அவரும் அடையாளம் கண்டு டிக்கட்டை பெற்று நெக்குருக அணைத்துக் கொண்டார் ! "நன்றி,நன்றி" என்ற அவருடைய வார்த்தைக்கு எங்கள் தலைவர் " இந்த தேசமே உங்களுக்கு கடமை பட்டிருக்கும் போது எனக்கு எதற்கையா நன்றி "என்றார்!

அடையாளமாக  என்தலைவர் கையில் வத்திருந்த   "insurance worker  " அந்த போர்வீரன் வாங்கிகண்ணீல் ஒத்திக் கொண்டு முத்தமிட்டான் !

ஓய்வு பெற்றபின், சென்னையில் பத்தாண்டுகளூக்கும் மெலாக insurance worker அலுவலகத்தி அந்த பத்திரிகையை  வளர்த்து வந்த  K. David தன் அந்த தலைவர் !

2 comments:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

நல்லது தோழர்
உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
இன்றைய எனது பதிவைப் படிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்
http://valarumkavithai.blogspot.com/2016/02/blog-post_26.html

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு ஐயா..