Tuesday, January 12, 2016

திருநாள்குண்டச்செரியும் 

அலங்கா நல்லூரும் ....!!!



அலங்காநல்லூர் -மதுரை சாலையில் உள்ள சாந்தி நகரில் நான் சொந்தமாக வீடு கட்டி 32 வருடங்கள் வாழ்ந்தேன்.

எங்கள் குடும்பங்களில் கலியாணம் போன்ற  வீசெடங்கள் நடந்தால் என்னை  அலங்கானல்லூரை அடுத்த பாலமேடு கிராமத்திலிருந்து "பால்கோவா " வாங்கி வரச்சொல்வார்கள்.. 

பங்களுரு.சென்னை, டெல்லி ஏன் அமேரிக்கா செல்பவர்களுக்கு கூட வாங்கி சென்றிருக்கிறேன்.

அதிலும் இனிப்பு சேர்த்தது. இனிப்பு சேர்க்காதது என்று இரண்டு வகை உண்டு .

அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு நடக்கும
.இன்றுமாதிரி எல்லாம் கிடையாது .

திமுக ஆட்சி க்கு வந்த பிறகு ஜல்லிக்கட்டு பிரபலமானது.மதுரை மத்திய தொகுதியில் எம்.எல், எகோவிந்தராஜன் என்பவர்   முற்சியால் தான் .(1967 )
ஜல்லிக்கட்டுபிரபலமாகியது.
நாங்கள் சைக்கிளில்சென்று (8 கிமீ)  பார்த்து வருவோம்.

சுற்றுலா பயணிகளை குறிப்பாக வெளிநாட்டு பயணீகளைகவர அரசு முன்முயற்சி எடுத்தது.. விளம்பரத்தில் தமிழர்களின் பாரம்பரிய விர விளையாட்டு என்று எழுதி இருந்தார்கள்.

அங்குள்ள கோவில் அறங்காவலர்கள், பூசாரிகள்வியாபாரிகள் இதற்கு ஒரு தெய்வீக சாயம் பூசினார்கள்..

இதேசமயம் அலங்காநல்லூர் ரோட்டில் பொங்கலுக்கு மறு  நாள்  
பொதும்பு விலக்கிலிருந்து சலவத்தோழிலளர்கள் கழுதை பந்தயம் நடத்த ஆரம்பித்தனர்.

உவர் மண் அதிகமாக கிடக்கும் அந்தப்பகுதியில் மூட்டையாக கட்டிய மண் கழுதைகளின் முதுகில் ஏற்றி விரட்டி வருவார்கள். இது கழுதை களை வளர்த்து விற்கும் வியாபாரிகள் செய்து வந்தனர்

ஒருபுதிய பாரம்பரியம்-பண்பாடு உருவாகியது.
தமிழர் பண்பாடு, பாரம்பரியம் என்பது பற்றி நமதுமுன்னோர்கள் குறிப்பாக அயோத்திதாசர் தமிழார் பண்பாடு  என்பது சாதிகளற்ற 
வாழ்வுமுறை என்கிறார் தமிழர்கள் பௌத்த பண்பாட்டை கொண்டவர்கள் என்கிறார். அவர்களிடையே சாதிபாகுபாடு இருந்ததில்லை என்கிறார்.

தன இறுதி நாட்களில் பௌத்தமதத்திற்கு மாறினார். 

ஜல்லிக்கட்டு வேண்டுமா வேண்டாமா என்பது வேறு.

அது என்னவோ பாரமபரியம் என்றும் தெய்வீகமானது என்பதும் வேறூ.

எந்தவித பாகுபாடுமில்லாமல் வாழ்ந்த சமுகத்தில் சாதிய பாகுபாடுகளை புகுத்தியது எந்த பண்பாடு?

எநத பாரம்பரியம்?

எண்பது வயதி கிழவரின் பிணத்தை அவர் தலித் என்பதற்காக போதுப்பாதையின் செல்லக்கூடாது \ன்று கூ றுவதுஎந்த  பாரம்பரியம்,?
பண்பாடு ?
அலங்காநல்லூர் இருக்கட்டும் !

திருநாள் குண்டச்செரிக்கு எநத நீதிமன்றம் பதில் சொல்லப்போகிறது !!!




0 comments: