Monday, November 23, 2015

த.மு .எ .க.சங்கத்தின் முதல் மாநாடு !!!









Monday, July 07, 2014

நினைந்து 
        நினைந்து 
              நெஞ்சம் ......!!!

1975ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி தமிழ்நாடு  முற்போக்கு       எழுத்தாளர் சங்கம் துவங்கியது ! வரும் 12ம் தேதி 39 ஆண்டுகள்   கழிந்து    40 ம்  ஆண்டுக்குள் புகுந்து கொள்ள விருக்கிறது !

மதுரையில் எழுத்தாளர் சங்க முதல் மாநாட்டை நடத்த சில எழுத்தாளர்கள் !  -அப்போது  அவசர நிலை அறிவிக்கப்படவில்லை  -  தமுக்கம் கலை அரங்கில் நடத்த முடிவாகியது ! ஆனால் ஜூன் மாதம் 25 ம் தேதி அவசர நில  பிரகடணம் வந்தது !

இந்தியா முழுவதும்   முடங்கியது !  எழுத்தாளர்  சங்கமோ கருத்தரங்கம் ,  சொற்பொழிவு ,கவியரங்கம் ,நாடகம் என்று சமூக பிரச்சினைகளை தோட்டு தன நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு இருந்தது !

நினைக்க நினைக்க நெஞ்சம் விம்மத்தான்  செய்கிறது !

முதல் மாநாட்டில் எப்பேற்பட்ட ஆளுமைகள்  பங்கெடுத்தார்கள் !

அந்த மாபெரும் தீரர் சங்கரய்யா முழுமையாக இருந்து நடத்திக் கொடுத்தார் !

இந்த எழுத்தாளர் படைக்கு தளபதியாக இருந்து தோழர் கே முத்தையா அவர்கள் வழிநடத்தினார் !

 பூனே நகரத்தில் பிறந்து புகழ்பெற்ற ப்ஃர்கூசன் கல்லூரியில் பயின்று தன வாழ்நாள் முழுவதையும் "ஒர்லி " மலைவாழ் மக்களுக்காக அர்ப்பணித்த கோதாவரீ அம்மையார்  துவக்கிவைத்தார்  !

மராட்டிய ம்மொழியின் மிகச்சிறந்த  எழுத்தாளரான அவர் " மனிதன் விழிதெழுந்தபோது " என்ற நூலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர் !

கேரளத்தின் இலக்கிய விமரிசகர்  கோவிந்த பிள்ளை சிறப்புரை !

" பிரசண்ட விகடன்" ஆசிரியர் நாரண துரைகண்ணன்     , ' கண்ணன் " பத்திரிக்கை ஆசிரியர் ஆர்.வி ஆகியோர் வந்திருந்து வாழ்த்திப் பேசினர் ! 

வடக்கே சென்னையிலிருந்து ஜானகி   காந்தன்,தெற்கே நெல்லையிலிருந்து புலவர் கந்த சாமி ,மேற்கே போடியிலிர்ந்து  புத்தூரான் ,  கிழக்கே பரமக்குடியிலிருந்து கந்தர்வன் , ஜான்சன் என்ன்று தமிழகத்தின் நான்கு   திசைகளிலிமிருந்து  110   பேர் வந்திருந்தனர்  !

 மாநாடு     முடிவில் நாடகம் ! கே முத்தையா அவர்கள் எழுதிய "புதிய தலைமுறை " நாடகம்- மதுரை பீப்பிள்ச் தியேட்டர் குழுவினர் நடத்தினர் !

சாஸ்திரிகள் ஒருவர் புரோகிதராக வாழ்கிறார் ! அவர் மகன் பரந்தாமன் என்பவனுக்கு மந்திரங்ககளை கற்றுக் கொடுத்து அவனையும் புறோகிதனாக்குகிறார் !   பக்கத்து வீட்டில் வசிக்கும் வக்கீலின் விதவை  மகளொடு பரிச்சியம் ஏற்படுகிறது பரந்தாமனுக்கு   ! இருவரும் நகரம்  சென்று புதிய வாழ்வைத்தேடுகிறார்கள் !

கே.எம் ,அவர்கள் இந்த நாடகத்தில \காஞசி   மகான்    பெரியவர  போன்று சாஸ்திரிகளைச் சித்தரித்திருப்பார் ! மதுரை மில தொழிலாளி துறை ராஜ் நடித்தார் ! பர்ந்தாமனாக காஸ்யபன்  நடித்தார் ! அவரே நாடகத்தை இயக்கினார் !

நாடகத்திற்கு டிக்கட்டு ரூ 1 ,2 ,3, 5 என்று இருந்தது ! மிகவும் அதிகம் என்று பேச்சும் வந்தது ! நாடகம் மூலம் 2800 ரூ மிச்சம் ! அதனை தமுஎச பண்டில் கொடுத்துவிட்டார்கள் !

மாநாட்டிற்கு வரும் சார்பாளர்கள் ,பார்வையாளர்கள் கட்டணம் 5/- ரூ ! மாநாட்டில் பலர் பேசும்    பொது   அதிகம் என்று பேசினர் !            

முதல் மாநாட்டிற்கான  சிலவு 30,000 /-ரூ !

மாநாட்டிற்காக   பி,எம். குமார்,வீரபத்திரன்,கார்மேகம், பூச்சி  போன்ற மூத்த  தோழர்களீன் பணி  மறக்க முடியாதது !

0 comments: