Monday, November 30, 2015

அப்போது கருணாநிதி அவர்கள் 

தி.மு.க வில் இல்லை !!!.

நீதிக் கட்சியின் நடைமுறை பிடிக்காததால் பெரியார் அவர்கள்  திராவிடர் கழகத்தை ஆரம்பித்தார்கள். 

திராவிடர் கழகத்தின் முக்கிய தலவர்கள் பெரியாரின் நடைமுறையோடு முரண் பட்ட போது அவர்களுக்கு சி.என்.அண்ணாத்துரை அவர்கள் தலைமை தாங்கினார். பெரியார் தன்னைவிட மிகவும் வயது குறை ந்த பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய சொத்துக்கும்,கட்சிக்கும் வாரிசாக அந்த பெண்ணையே நியமித்தார் .அது வரை கட்சிக்குள் .இ.வி.கே சம்பத் அவர்கள் தான் பெரியாருடைய வாரிசாக வருவார் என்ற கருத்து மேலோங்கி நின்றது


கட்சியின்  மூத்த தலவர்கள் இது பற்றி  ஆலோசித்தார்கள்..


1949ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம்தேதிராயபுரத்தில் இருக்கும் ராபின்சன் பூங்காவில்புதிய கட்சியை ஆரம்பித்தார்கள்.


அண்ணாதுரை தவிர அப்போது தி.கவிலிருந்து வெளியே வந்தவர்கள் ஐந்து பேர்..

1.இரா .நெடுஞ்செழியன் 

2.இ.வி.கே. சம்பத் 

3 மதியழகன் 

4 அன்பழகன் 

5 என்.வி.நடராசன் .



குடந்தையை சேர்ந்த நீலமேகம் என்பவர் கட்சிக்கு "திராவிட முன்னேற்ற கழகம் "என்ற பெயரை சூட்டினார்.


திருவாரூரைச்  சேர்ந்த இளைஞர் மு.கருணாநிதி என்பவர் திராவிடர் கழகம் நடத்தி வந்த பத்திரிக்கை அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்தார்.



0 comments: