Sunday, November 15, 2015

கெட்டவார்த்தை சொல்லி ஏசணும் போல இருக்கு அண்ணே !!! 





ஓம் .....ஸ்வாஹா !!!


அண்ணன்மார்களே இத படிச்சிட்டு கோபப்படாதிங்க !!!
சம்ஸ்கிருதத்தில மந்திரம் சொல்லுதான் ம்லா ! அத ஆரம்பிக்கும் போது "ஓம்"  நு சொல்லி அராம்பிக்கான். முடிக்கும் பொது "ஸ்வாஹா"  நு முடிக்கான் . 
என் தெரியுமா ?

உலகம் எப்படி இருக்கு நு தெரியுமா ? அடிதடி, வீரம் போன்ற குணம் உடையவர்கள் இருக்கிறார்கள்.இவர்கள் எது கொடுத்தாலும் திருத்தி அடியாம இன்னும் இன்னும் நு கேட்கிரவங்களாம்.(ரஜத் குணம் )

அடுத்து .இதுவே போதும்.  என்று கிடைத்ததை வைத்து திருப்தி அடைபவர்களாம். (சத்வ குணம்.)

அதற்கு அடுத்தவங்க இருட்டுல இருக்கிறவங்க.எதுவமே தெரியாத அப்பாவிங்க .( தமோ குணம்)

இந்த மூன்று குணத்தையும் சார்ந்து குறிக்கிற ஒற்றைச் சொல் தான் "ஓம் "
என்ற பிரணவ மாம்.
(எனக்கு தெரியுது அண்ணெ உங்களுக்குகோபம் வருது என்பது )



அப்பம் முடிக்கும்போது எதுக்கு" ஸ்வாஹா " நு கேட்டேன் .

ஒரு காலத்துல தேவ லோகத்துல தேவர்கள் எல்லாம் கஞசிக் கில்லாம சிங்கி அடிச்சிக்கிட்டு இருந்தாங்களாம். ஒடிப் போயி பிரும்மா கால விழுந்தாங்களாம். அவன் மூக்கப்பிடிசிக்கிட்டு தியானம் பண்ணினான். 
'ஏய் பசங்களா ! பூலோ கத்துல சோத்த மனிதர்கள் யாக குண்டத்துலபோடுதாங்க> அத பக்குவமாஎடுத்து உங்களுக்கு "பார்சல்" பண்ணி அனுப்புஅச்சொல்லுதேன்." அப்படின்னாராம்.

"அண்ணெ ! அது முடியாது "  அக்னி சொல்றான்.
"ஏண்டெய்? "
"ஏண்ணெ ! எனக்கென்ன பெண்டாட்டியா இருக்கா ? சமைக்க ? "
பிரும்மா திரும்ப தியானம் பண்ணினார்.
"அப்பம் பொம்பள சாமி வந்து என்ன வேணும் டேய் ? நு கேட்டிருக்கு.
"அக்னிக்கு பொண்டாடி இல்ல ? நீ வேணும் நா போயி....." 
"சரிப்பா " நு சொல்லி அந்தம்மா அவன் வீட்ல போய் வாழ ஆரம்பிச்சுடுச்சு.
"அந்தம்மா பேரு "ஸ்வாஹா" .எவன்லாம் ஸ்வாஹா" நு சொல்லி மந்திரத்தை முடிக்கானோ அவனுக்கு சோருகிடக்கும் நு பிரும்மா சட்டம் போட்டாரு..

இத மார்க் கண்டுபிடிச்ச facebook ல போட்டு உலகம்புரா அனுப்பீருக்கான் 
அண்ணெ ?

கேட்ட வார்த்தை சொல்லி ஏசணும் போல இருக்கு !
உங்களுக்கும் அப்படித்தான அண்ணெ ?

யார ஏசறது ???

0 comments: