Saturday, October 31, 2015



சின்னய்யா காசி அவர்களின் 

நிலைத்தகவலை முன்வைத்து....!!!




அருமைத் தோழர் சின்னையா காசி  அவர்கள்  "விஸ்வரூபம் " படத்தில் "கதக்." நடன படபிடிப்பு பற்றி காட்சி வடிவத்தில் பதிவிட்டிருந்தர்கள். நடிகர்கள்,நடிகைகள், நடன மாஸ்டர்கள், பாடகர்கள், வாத்தியம்வாசிக்கும்கலைஞர்கள், புகைப்பட கலைஞர்கள், லைட்மேன் கள், எடிட்டர்கள் , என்று உயிரைக்கொடுத்து காட்சிகளை உருவாக்குகிறார்கள்.நாம் அதன பார்த்து ரசிக்கிறோம்.அல்லது குப்பை என்று துக்கீ எரிகிறோம்.இது அந்த கலைஞர்களின் உழைப்பை அவமானப்படுத்துவது என்றே நான் கருது கிறேன்.


1979-80ம் ஆண்டுகளில்திரைப்படத்தில் நடிக்க நானும்போனேன். தோழர்கே.முத்தையாஅவர்கள்"உன்னை கட்சி அனுப்புகிறதுஅங்கு பொய் கட்சிக்கிளைஅமைக முடியுமா என்று பார் " என்று சொல்லியனுப்பினார்


துணை இயக்குனர்கள்லட்சுமினாராயணன், காசி,துனை புகைப்படகலைஞர்கள் கோபால் , போன்றவர்களை சுரண்டி பார்த்ததில் கொஞ்சமெளிச்சம் கிடைத்தது .அவர்களிடம் சொவியத் திரைப்படங்கள், கதைகள்  நாவல்கள்,என்று இரவு முழுவதுவும் பெசுவோம்.விவாதிப்பொம். 


Ballard of a soldier,Fall of  Berlin, Moscow distrust tears ,Blue Mountain என்று படங்கள்பற்றிபெசுவோம்.".ஸொவோ கலர்"   படச்சுருளுக்கும் , கோடாக்,கெவா சுருளுக்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றி விவாதிப்போம். இவை அவர்களை என்பால் நெருக்கம் கொள்ள வைத்தது.  இதெபோல் , தையற்கலைஞர்கள், லைட்பாய்ஸ், துணை நடிகர்கள் ,நடிகைகள் ஆகியோர் படும்பாட்டினை நேரில் காண முடிந்தது.


நானும் துணை இயக்குனர் இரண்டு பெரும் விடுதியில்தங்கி இருந்தோம் . இரவு 10 மணி இருக்கும். குளியலறையில் சத்தம் கேட்டது. நான் ஏ.சியறை ஆதலால்   நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தேன். ஜன்னலில் உள்ள திரைச்சிலையை காணவில்லை .  அதனை சரிசெய்ய எழுந்தேன்.  விளக்கை போட்டென். "சார் ! சார் !சார்!" என்று அலறல் சத்தம் கேட்டது.

துணை  இயக்குனர் ஒருவர் திரைச்சிலையை உடுத்திக்கொண்டு படுத்திருந்தார்.


மறு   நாள் படப்பிடிப்பிற்கு  போக உடை இல்லை. அவரிடம் இருந்த ஓரே பாண்ட்,சட்டை, உள்ளாடைகளை தோய்த்து உணர்த்தியிருந்தார்  அதற்காக மின் விசிரியை போட்டிருந்தாற் ஏ.சி ரூம் . குளிருக்காகவும், அம்மணத்தை மறைக்கவும் திரைச்சிளைய பயன்படுதி இருக்கிறார்

"ஏன்யா ? வீட்டுக்கு போய் துணியை எடுத்து வரவேண்டியது தானே ? "

"வீடு எங்க இருக்கு ?"

"ரூமிருக்கு இல்லையா?" 

"நாங்க என்ன எல்.ஐ.சி   லயா வேலை பாக்கோம்."


பேச்சை நிறுத்தினேன்.


( அடுத்த இடுகையில் லைட்பாய்பற்றி எழுதுகிறேன்.)