Thursday, May 07, 2015


POSTS RSS

CONTACT

LOG IN

Thursday, May 09, 2013


வடக்கே  புத்தன் சிந்தன்

V P C.....!!!

அப்பபோது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மதுரையில் செயல் பட்டு வந்தது !அங்கு சென்று சிறு சிறு பணிகளை ச் செய்வது உண்டு !

மாநில அளவில் நடை பெறும் நிகழ்ச்சி ஒன்றிற்கான எற்பாடுகளைச் செய்ய தலைவர்கள் வந்திருந்தார்கள் !தீர்மானங்கள் ,அறிக்கைகள் ஆகியவற்றை அவர்கள் சொல்லச்சொல்ல எழுதி கொடுக்க வேண்டும் .


சென்னையிலிருந்து வந்த அவர் சொல்லிக்கொண்டு வந்தார்! நான் எழுதி கொடுத்துக் கொண்டிருந்தேன் ! கிட்டத்தட்ட மதியம் 11 மணிக்கு பசித்ததால் உணவருந்த விரும்பினேன் ! "சரி ! எங்க போய் சாப்பிடப் போற ?" என்று கேட்டார் !

என் பையில் நான் கொண்டுவந்த தை சொன்னேன்! "நானும் சாப்பிடலாமா ?" 

நடுத்தர குடும்பம் ! நான் என்ன பஞ்ச பரமான்னமா கொண்டு வந்திருப்பேன் ! வெட்கமாக இருந்தது ! அவர் எவ்வளவு பெரியதலைவர்! 

பிரித்தேன் ! நான்கு கோதுமை பரோட்டா ! வெஞசனமாக தேங்காய் கலந்த கீரைக் கடைசல் !

 அவருக்கு இரண்டு,எனக்கு இரண்டு என்று பகிர்ந்தோம் ! 

"உன்மனைவி என்ன மலையாளப் பக்கமா?"என்று கேட்டார் !

"இல்லை தோழர் ! நான் நெல்லை மாவட்டம் ! ஆழ்வார்குறிச்சி ! திருவனந்தபுரத்து தொடர்பு உண்டு "என்றேன்!

"எங்கள் ஊர் காரர்கள் செய்வது மாதிரியே கீரை இருந்தது அதனால் தான் கேட்டேன்!"என்றார் !

நான் காப்பி குடிக்க சென்றேன்! அவர் காப்பி குடிக்க மாட்டார்! என்னுடன் காலாற நடக்கலாமென்று வந்தார்! மதுரை 1 ம் நம்பர் சந்திலிருந்து திரும்பி சித்திரை வீதியில் நடந்தோம்! அதன் முக்கில் தான் நகர் காங்கிரஸ் அலுவலகம் இருந்தது ! பலர் அவருக்கு வணக்கம் சொன்னார்கள் ! எனக்கு பெருமை தாங்கவில்லை ! முக்கில் உள்ள கோபி ஐயங்கார் கடைஅருகில்  காபி அருந்தினேன்  ! அவர் எதுவும் சாப்பிட மறுத்து விட்டார்! 

"ஆமா ! நீ என்ன பண்ற ?"

சொன்னேன் !

"கட்சில மேம்பராயிட்டயா?"

"இல்ல "  

"ஏன் ?"

என் வாய்க் கொழுப்பு ! 

"I  don't have any objection " என்றேன்!

கனமான கண்ணாடிக்குள் இருந்து  with a sharp look and broad smile 

"நீ பாதி உறுப்பினராகத்தான்முடியும் " என்றார்!

"ஏன் ?" 

"மறு பாதி கட்சிக்கு உன்னை உறுப்பினராக்க objection இருக்கக் கூடாதல்லவா!"  

எழுந்து செல்லமாக என்தலையில் குட்டி" வா! போகலாம் " என்றார்!

அவர் குட்ட வில்லை !

என்னை ஆசீர்வதித்தார் !என் கொழுப்பு கரைய !!

 இந்த ஆண்டும் என் உறுப்பினர் பதிவினை புதுப்பித்து விட்டேன் தோழா!

என்னை ஆசீர்வதியும்!!!


1 comments:

www.eraaedwin.com said...

நெகிழ்ந்தேன் தோழர்