Friday, May 22, 2015

"நேர்மையான அரசியல்வாதிகளும் ,

நேர்மையான அதிகாரிகளும் ,

இந்தியாவில் இருக்கத்தான் செய்தார்கள்......."



நாளை செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்கப் போகிறார் ! ஐந்தாவது முறையாக பதவி ஏற்கிறார் ! 

இதனை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது! உச்சநீதி மன்றமல்ல-சர்வெத அளவில் விசாரணை வைத்தாலும் எதுவும் நடக்கப்போவதில்லை ! சட்டத்தில்  ஓட்டை ! விசாரணையில் ஒட்டை ! விசாரித்த் அதிகாரிகளே எங்கு ஓட்டை இருக்கிறது என்று சொல்லும் வாய்ப்பும் உள்ளது ! விசாரித்த அரசியல் தலைமை வழக்கை விட அதனால் ஏற்படும் அரசியல் லாபத்தைகணக்கில் கொண்டதும்  காரணம் !

எல்லாவற்றையும் விட செல்வி ஜெயலலிதாவின் சொந்த வாழ்க்கைப்ற்றிய வெகுஜன நம்பிக்கை ! காமராஜருக்கு குடும்பமில்லை ! பணம் சேர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை ! தனி நபர் !

செல்விஜெயலலிதாவும் தனி நபர் ! யாருக்காக அவர் சொத்து சேர்க்க வேண்டும் !  அவரை சுற்றி இருப்பவர்கள் சம்பாதித்தால் அவர் எப்படி பொறுப்பாகமுடியும் என்ற  பொதுப்புத்தி அவரை எப்பொதுமே காப்பாற்றும் சக்தியாக மக்களீடையே பதிந்துள்ள ஒன்று !   


இந்திய வரலாற்றில் மோசடி செய்த முதலாளி ஒருவர் தண்டிக்கப்பட்டார் என்றால் அது ஓரே ஒருமுறதான் நடந்தது !


ராம்கிருஷ்ண டால்மியா இன்சூரன்ஸ் துறையில் செய்த மோசடியில் சிக்கினார் ! இதனை நாடாளுமன்றத்தில் எழுப்பியவர் ஃபெரோஜ் காந்தி ! அப்பொது நிதி அமைச்சராக இருந்தவர் சி,டி தேஷ்முக் ! இருவருமே அப்பழுககற்ற நேர்மையான அரசியல் வாதிகள் ! 


இன்சூரன் கட்டுப்பாட்டு துறையில் பணியாற்றிய ராஜகோபாலன்,காமத் ,போன்ற அதிகாரிகளின் நேர்மை !

இவர்களீன் நேர்மையின் மிது நம்பிக்கை வைத்து அவர்கள் முடிவுகளீல் தலயிடாத பிரதமர்  எல்லமாக செர்ந்து டால்மியாவை சிறையில் தள்ளீயது !


அன்றய பிரதமருக்கே  தேரியாமல் இன்சூரன்ஸ் துறையை தேசீயமயமாக்கியதும்,அதனை பிரதமர் ஏற்றுக்கொண்டதும் ஒரு ஹாலிவுட் thriller படம்போன்ற நிகழ்வாகும் !


அந்த நேர்மையும், நியாமும் இன்னமும் மிச்சமிருக்கத்தான் செய்கிறது ! 


நாம் அதனை இளையதலைமுறைக்கு எடுத்து சொல்வோம் ! 


அவர்கள் சாதித்து விடுவார்கள் !!!


3 comments:

msuzhi said...

எங்கே இருக்கிறது நேர்மை? கனவுகளில் கூட இல்லை.

சரவணன் said...

/// இந்திய வரலாற்றில் மோசடி செய்த முதலாளி ஒருவர் தண்டிக்கப்பட்டார் என்றால் அது ஓரே ஒருமுறதான் நடந்தது ! ///

அப்ப சத்யம் ராமலிங்க ராஜு, சஹாரா சுப்ரதோ ராய், சுரங்க அதிபர்கள் ரெட்டி சகோதரர்கள் இவர்கள் எல்லாம் தொழில் அதிபர்கள் இல்லையா?

சிவகுமாரன் said...

இளைய தலைமுறை திரையரங்குகளிலும் டாஸ்மாக்கிலும் விழுந்து கிடக்கிறது அய்யா.