Tuesday, February 03, 2015

ஏல ! நீங்க இந்து வானது எப்பம்ல ?...!!!





இந்த கேள்விய கேட்டு அதுக்கு பதிலுமுண்டு ! தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ச . தமிழ்செல்வன் அவர்கள் சமீபத்தில் பெரம்பலூரில் பேசி இருக்கிறார்கள் ! முக நூல் ல பதிஞ்சு இருக்காங்க ! கேட்டு பாருங்க !

நீங்க இந்து வானது   1871 ம் ஆன்டு வே ! இத நீங்க மதிக்கிற காஞ்சி சங்கர மடத்து பெரியவர் - பெரியவர்னா -சுப்பிரமணியம் என்ற ஜெயேந்திரர் இல்ல ​ சந்திர சேகர சரஸ்வதி என்ற மகா பெரியவர் சொல்லி இருக்கார் ! அவர் எழுதிய தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தை படிங்க தெரியும் !  

ஆதில நாம் வைஷ்ணவன இருந்தோம் ! சைவனா இருந்தோம் ! சண்டை போட்டுகிட்டோம் ! சைவன் கூட  வீர சைவன் சண்டைபோட்டன் ! வைஷ்ணவனல வடகலை தென்கலன்னு சன்டை போட்டோம் ! ஸ்மார்த்தன், தெலுங்கன் நு சன்டை    போட்டம் ! பிள் ளை வாள்  நும்.! முதலியார் நும் ! போடாத சண்டையா ?

வெள்ளைகாரன் வந்தான் ! நம்மள நிர்வாகம் பண்ண ஏற்பாடு செஞ்சான் ! எத்தன சாதிடா  ? பிரமிச்சு போய்ட்டான் ! யாரு எந்த சாதின்னு கணக்கு எடுக்க பாத்தான் ! 1871ம் ஆண்டு தான் முதன் முதல்லமக்கள் தோகை கணக்கெடுப்பு நடந்தது ! என்ன செய்யறது நு யோசிச்சான் ! அம்புட்டு பேரையும்" இந்து" நு சேத்தான் ! 

யாருடா இந்து  ?

எவன் கிறிஸ்துவன் இல்லையோ,எவன் முஸ்லீம  இல்லயோ ,எவன் பார்சி இல்லையோ ,எவன் சீக்கியன் இல்லையோ ,எவன் சமணன் இல்லையோ ,அவன் பூரா  "இந்து" நான் !

இது தான் நமது அரசியல் சட்டமும் கொடுக்கும் வரையறை !

1871க்கு முன்னால வைஷ்ணவன் இருந்தான் !சைவன் இருந்தான் ! ஸ்மார்த்தன் இருந்தான் ! வட கலை,தென்கலை இருந்தான் ! பிள்ளை மகன் இருந்தான் ! முதலியார் இருந்தான் !

1871க்கு பின்னால தான் வெள்ளைக்காரன் "இந்து" நு பேர் கொடுத்தான் !

இத நான் சொல்லலை பா !

காஞ்சி மகா பெரியவர் சொன்னது !!!


 
(தமிழ்செல்வன் பெரம்பலூர்  பேச்சை தமிழ்நாடு முழுவதும் போட்டு கேக்கணும் ! காட்டுங்க தோழர்களெ !) 




3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

பேச்சைக் கேட்க ஆவல் எழுகிறது ஐயா

மோகன்ஜி said...

நலம் தானே? தெய்வத்தின் குரலில் எப்போதோ படித்த ஞாபகம்... அந்தப் பேச்சை கேட்டுப் பார்த்து விட்டு மீண்டும் விவாதிப்போம்.

'பரிவை' சே.குமார் said...

அப்படியா?