Monday, February 02, 2015

விமானப்படையில் கட்சிக்கிளையை 

ஆரம்பித்தவர் அப்துல் வஹாப் ...!!!





கம்பம் நகரில் வசித்துவரும் முது பெரும் தோழர் அப்துல் வஹாப் அவர்களுக்கு இன்று 92 வயதாகிறது !

கம்பம் -தேனி வட்டாரத்தில் மிகவும் செல்வாக்கும் வசதியும் உள்ள குடுமப்த்தில் பிறந்தவர் அவர் ! இளம் வயதிலேயே கம்யுனிஸ்ட் கட்சியோடு தோடர்பு கொண்டவர் ! பின்னாளில் "தீக்கதிர் " பத்திரிகையில் பொதுமேலாளராக பணியாற்றினார் !

முதுமையின் காரணமாக அவர் ஒய்வு பெற  விரும்பினார் ! ஏற்கனவே சோவியத் நாடு சென்ற பொது இதய நோய் பாதிப்பும் இருந்தது ! அவர் ஒய்வு பெரும் முன்பாக அவரிடம் ஒரு நேர்காணல வாங்கி அதனை வண்ணக்கதிரில் வெளியிட்டோ ம் !

அதனை பதிவிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது ! "நான் கம்யுனிஸ்ட் கட்சியில் சேர்ந்ததை   என் குடும்பத்தினர் ஒப்பவில்லை ! என்னால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ! ஒருகட்டத்தில் நான் வீட்டை விட்டு வெளியேறினேன் ! நேராக பங்களூர் சென்றேன் ! அப்போது இரண்டாவது உலக யுத்தம் நடந்து கொண்டிருந்தது ! பிரிட்டிஷ் ராணுவத்தில் ஆளெடுத்துக் கொண்டிருந்தார்கள் ! அதில் சேர்ந்தேன் ! அங்கு என்னோடு ஒரு மலையாள நண்பரும் வந்து சேர்ந்தார் ! அங்கு புதிதாக சேர்ந்த வர்களிடம் பேசிப்பழகினோம் ! ( நினைவிலிருந்து எழுதுவதால் அவர் சொன்ன பெயர் தட்ட வில்லை ) மாதம் ஒரு தேர்வு நடத்துவார்கள்  ! அதில் பாசாகிவிட்டால்  பயிற்சிக்கு அனுப்பிவிடுவார்கள் ! அங்கிர்ந்தவர்களை ஒழுங்கு படுத்தி ஒரு கட்சிக்கிளையை உருவாக்க விரும்பினேன் ! ஆகவே ஒவ்வொரு மாதமும் தேர்வில் "பெயில்" ஆவதற்காகவே படிப்பேன் ! ஒருகட்டத்தில் நான் அங்கு இருக்கமுடியாத நிலை  எற்பட்டது ! இதற்கிடையே என் குடுமபத்தினர் நான் விமானப்படையில் இருப்பதை அறிந்து தேடி வந்து வீட்டார்கள் ! விலகி நான் ஊர்  வந்து சேர்ந்தேன் " என்றார் நாங்கள் "அத்தா " என்று அன்போடு அழைக்கும் அப்துல்வஹாப் அவர்கள்!

பின்னர் கட்சி கூறியபடி திருச்சியில் ரயில்வே தொழிற்சங்கத்தில் பணியாற்றினார் ! ரயிவே ஊழியர்கள் ஊர்வலத்தின் பொது போலீஸ் ஸ்டேஷன் மீது "குண்டு " வீசியதாக தேடப்பட்டார் ! "போலீஸ்  கண்களில் படாமல் நண்பர் வீட்டு மொட்டை மாடியில் கடும் வெய்யிலில் படுத்தே இருக்க வேண்டியதாயிற்று ! மாடி கைப்பிடிச்சுவர் முன்று அடி உயரம் தான் இருக்கும் ! படுத்துக் கொண்டே சாப்பாடு என்று சகலகாரியங்களும் செய்ய வேண்டியதிருந்தது !" என்று பெட்டியில் குறிப்பிட்டார் !

"அத்தா" பெரியகுளம்நாடாளுமன்றதேர்தலில்ஒருமுறை போட்டியிட்டார்

பரபரப்போ , அவசரமோ காட்டாத அழுத்த்மான  செயல்பாடு கொண்டவர் "அத்தா "! அவர் கோபப்பட்டு நான் பார்த்ததில்லை ! மென்மையான பேச்சு !

அவர் காலடியில் அமர்ந்து செய்லபட முடிந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம் !

"அத்தா"  நீங்கள்  நூறாண்டு வாழ வேண்டும் !!!! 































முதுமையின் காரணம

0 comments: