Tuesday, September 09, 2014

ஜனாப் ஹாஜி முகம்மது பக்கீர் செட்  அவர்களை 

உங்களுக்குத் தெரியுமா ........?


ஜனாப் ஹாஜி முகம்மது பக்கீர் செட் அவர்களை உங்களுக்கு தெரியுமா ? இந்தக்க் கேள்வி இக்கான விடை எனக்கு இன்று காலைதான் தெரிந்தது !

அது மட்டுமல்ல ! செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களைப்பற்றிய குறிப்புகளை படித்துக் கொண்டிருந்த போது அவர் பற்றிய இடுகை ஒன்றை படித்துக்கொண்டிருந்தேன் ! 

அந்த இடுகைக்கான பின்னூட்டத்தில் ஒரு நண்பர் மிகுந்த வருத்ததோடு "வ.உ.சி அவர்களோடு பணியாற்றிய முகம்மதியர்களைப் பற்றி ஒரு வார்த்தை எழுத மாட்டென் என்று சாதிக்கிறீர்களே! " என்று மிகுந்த ஆதங்கத்தோடு எழுதியிருந்தார் !

அவரும் எந்த பெயரையும் குறிப்பிடவில்லை !    

எனக்குத் தெரிந்த வரலாற்றுத் தரவுகளை தேடினேன் ! எதுவொன்றிலும் குறிப்பு எதுவும் கிடைக்கவில்ல !

இணையத்தை புரட்டிப் பார்த்தேன் ! சில குறிப்புகள் கிடைத்தன !

வ.உ.சி அவர்கள் தாலூகா அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணியாற்றி  உள்ளார் ! பின்னர் அவர் தந்தை உலகநாத பிள்ளை அவரை சட்டப்படிபிற்காக திருச்சிக்கு அனுப்பியுள்ளார் ! வஉசி அவ்ர்களுக்கு விவேகானந்தர்   மீது அளவு கடந்த பக்தி உண்டு ! ஒருமுறை சென்னை சென்றிருக்கிறார் ! ராமகிருஷ்ணா மடத்தில் அப்போது பொறுப்பில் இருந்த ராமகிருஷ்ணானந்தர் என்ற துறவியைச் சந்தித்து இருக்கிறார் !

"அடுத்து என்ன செய்யப் போகிறாய் " துறவி  அவரிடம் கேட்டிருக்கிறார்  !

"உன் தந்தை பணக்காரகளுக்காக வாதாடுபவர் ! நிறைய வசதியை உருவாக்கி கொண்டவர் ! நீ ஏழை எளியவர்களுக்காக வாதாடு ! இந்த தேசத்திற்காக எதாவது செய் ! " என்று ஆலோசனை கூறியுள்ளார் ! 

இந்த சமயத்தில் தான் சுப்பிரமணிய சிவா ,சுப்பிரமணிய பாரதி ஆகியோரோடு தொடர்பு ஏற்பட்டது !

இதன் பிறகு தான் பொது வாழ்க்கையில் வ.உ.சி ஈடுபட ஆரம்பித்துள்ளார் !

பிரிட்டிஷ் ஸ்டீம் நாவிகேஷன் கமபெனி  செய்யும் அக்கிரமத்தை எதிர்த்து கம்பெனி ஆரம்பிக்க சிந்தித்ததும் இதன் பிறகு தான் ! 

கப்பல் கம்பெனி ஆரம்பிக்க முடிவு செய்தார் ! வசதி மிக்க குடும்பம் ! தன சொத்துக்களை விற்று முதலாக்கினார் ! 

கம்பெனிக்கு என்று தனி கப்பல்வாங்க மிகுந்த பணம் தேவை ! இந்திய கம்பெனி பயன்  படுத்தும் வாடகை கப்பலை திடிரென்றுபிடிட்டிஷாரின் நிர்ப்பந்தத்தால்   தர மறுத்தனர் ! கம்பெனி பங்குகளை அறிவித்து மூலதனம் சேர்க்க முடிவு செய்தார் ! பங்கு 25 /​ - ரூ வீதம் 40 ,000 பங்குகளை அறிவித்தார் ! 10,00,000 ரூ பாய்க்கான் பங்குகளை விற்க வேண்டும் ! இன்றய மதிப்பில் இது சில ஆயிரம்கோடிகளாகும் !

பிரிட்டிஷாருக்கு பயந்து வாங்குவாரில்லாமல் போய்விடலாம் ! இந்தியா பூராவும் சுற்றி விற்கவேண்டு ! initial capital வேண்டும் !

இந்த இக்கட்டான நிலையில் வந்தார் ஒருவர் !" 8000 பங்குகளை நான் வாங்கிக் கொள்கிறேன் ! இந்தாருங்கள் ரூ 2,00,000 /-இரண்டுலட்சம் ! " என்றார் !

அவர்தான் ஜனாப் ஹாஜி முகம்மது பக்கீர் சேட்  !

ஜனாப் சேட் அவர்கள் பற்றி தகவல்கள் எதுவும்கிடைக்கவில்லை  !   












2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

எப்பேர்பட்ட மனிதர்
இவரைப் போன்ற மனிதர்கள்
பாராட்டப்பட வேண்டியவர்கள்
போற்றப் படவேண்டியவர்கள்
இவரைப் போன்றவரை
அடையாளம் கண்டு
வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தத்
தங்களைப் பாராட்டியே ஆக வேண்டும் ஐயா
நன்றி

சிவகுமாரன் said...

சிலிர்க்க வைக்கும் நெகிழ்வு . பகிர்வுக்கு நன்றி அய்யா.