Monday, August 25, 2014

த.மு. எ .க .சங்க நண்பர்களுக்கு 

ஒரு வேண்டுகோள் ........!!!


கம்பம் நகரில் ஒருவாரம் நடத்திய உலக திரைபட விழா மிகவெற்றிகரமாக நடத் தியதை தெரிந்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை !

அரசாங்கம் செய்ய வேண்டியதை சிறு  குழுவாக சாதித் துள்ளீர்கள்  !

கர்நாடகாவில் "கொப்பல் "என்ற கிராமாம் ! அந்த கிராமத்து மக்களுக்கு "அகிரா குரசோவா"வின் படைப்புகள் தெரிந்த அளவுக்கு ராஜ்குமாரை தெரியாது ! "ரோஷமான் கேட்  "படத்தை அக்கு வேரு அலகு  வேறாக பேசி விவாதிப்பார்கள் ! கோதார்டும், ஐசண்டைனும் அவர்களுக்கு நல்ல பரிச்சயம் ! கர்நாடக திரைப்பட கழகத்தின் சாதனைகளில் அதுவும் ஒன்று !

அதோடு அவர்களுக்கு காசரவள்ளீயை , கிரீஸ் கர்நாடை ,கராந்தை,ஜி.வி அய்யரை ,கௌ தம் கோஷ,சத்தியஜித் ரே அவர்களை தெரியும் !

உலகத்திரைப்பட விழாவோடு இந்தியதிரைப்பட விழாவையும் நடத்துங்களேன் !

கௌதம் கோஷின் 

பார் (இந்தி )  

மா பூமி (தெலுங்கு)

ஜெயகாந்தனின் 

உன்னைப் போல் ஒருவன் (தமிழ் )

கிரீஸ் கர்னாடின் 

சலுவி (கன்னடம் )

சம்ஸ்காரா (கன்னடம் )

ஸ்யாம் பெனிகலின் 

நிஷாந்த் (உருது)


ஆகிய படங்களை என் ஆலோசனையாக வைக்கிறேன் ! 

வரும் ஆண்டுகளில் நீங்கள்  தேர்ந்தெடுக்கப் போகும் நகரத்தில் இதனைச் செய்ய முற்சி செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் !  

வாழ்த்துக்கள்  தோழர்களே  !!!



































உன்னைப் போல் ஒருவன் (தமிழ்)

1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

எனது வாழ்த்துக்களும்...