Monday, June 30, 2014

" புதிய அடிமைகள் "


ஆதிகாலத்திலிருந்து மனிதனுக்கு மாடுகள்  பயன் பட்டது போல எந்த  ஒரு மிருகமும்பயன்பட்டதில்லை  ! அதுவும் விவாசாய நாகரீகம் உ ருவான பின் அவற்றை மிகத்திறமையாக பயன்படுத்தினான் ! 

அவற்றிர்க்கென்று தனியாக  தொழுவங்களை  அமைத்தான் ! மிகவும் சுத்தமாக அவற்றை பராமரித்தான் ! அவற்றி ற்கான தீனி யை கொண்டுவந்து கொடுத்தான். தன வீட்டில் களையும் அரிசியின் கழிவு நீரக்கூட அதன் அருகில் உள்ள தொட்டியில் இட்டான் ! அதன்  குளம்புகளைக்கூட அடிக்கடி பரிசோதித்து அதற்கு நோய் நொடி வராமல் பாது காத்தான் ! மிருக வைத்தியர்களின் உதவியை நாடி அவற்றிற்கு  மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்தினான் ! வயல் வெளிகளில் உழுவதற்கும் , பாரம் சுமப்பதற்கும் அவனுக்கு இத்தகைய கால்   நடைகள் மிகவும்  பயன்பட்டன ! ஒருவன் எத்தனை மாடுகளை வைத்திருக்கிறான் என்பதை பொறுத்து அவனுடைய மதிப்பும் ,சமூக அந்தஸ்தும் மதிப்பிடப்பட்டன ! தன்னிடம் உள்ள மாடுகளை பிறருக்கு உழைக்கக்  கொடுத்து  தனியாக   வாடகை பெற்றுக் கொள்ளவும் முடிந்தது ! 
-----------------------------------------------------------------------------------------------------------     கிறிஸ்து பிறப்பதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே ரோமாபுரி மிகப்பெரும்சாம்ராஜ்யமாக உருவானது ! ரோம சக்ரவர்த்திகளுக்கு ஈடாக பிரபுக்கள் செல்வாக்கோடு இருந்தனர் ! ஏராளமான அடிமைகளை  வைத்து  நாட்டின்     பாதுகாப்பையும்  அதற்கான பணிகளையும் செய்து  வந்தனர் ! இந்த அடிமைகளுக்கான தனி குடியிருப்புகளை உரூவாக்கினர் !  ஓடாதபடி அவர்கள் கழுத்தில் அடையாளங்களையும் இட்டனர் ! அவர்களுக்கு  மிகவும் போஷாக்கான உணவை அளித்தனர் ! அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்காக மருத்துவ ,சுகாதார வசதிகளையும் செய்து கொடுத்தனர் ! மற்றவர்கள் பணியினைச் செய்வதற்காக தங்களிடம் உள்ள அடிமைகளை நட்பு நகரங்களுக்கு அனுப்பி வாடகை வாங்கும் பழக்கமும் இருந்தது !

-----------------------------------------------------------------------------------------------------------
இந்திய இளைஞர்களுக்கு வளமான வழ்வினை   அளிக்க அவர்களுக்கு மிகச்சிறந்த கல்வி அளிக்கப்படவேண்டும் ! வெளிநாட்டினர் ஆச்சரியப்படும் அளவிற்கு இயற்கையிலேயே புத்தி  கூர்மையான இளைஞர்களுக்கு
  தோழிற்கல்வி அளித்து அவர்களை பொறியாளர்களாக ஆக்க இந்திய அரசு முடிவு செய்தது ! ஏராள மான பொறியியற் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன ! இதில்  கணீனிக்கல்விக்கு முக்கிய இடம்கொடுக்கப்பட்டது ! எராளமான இளைஞர்கள் இந்த தோழில் நுட்ப டத்தை கற்றுக்கொண்டானர் ! இவர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்ள அந்நிய நாட்டுக்  கம்பெனிகள் இந்தியாவில் தொடங்கப்பட்டன ! அவர்கள் பணி செய்யுமிடங்கள் மிகவும் நவீன மாக்கப்பட்டன ! புதுமையான நாற்காலிகள் மேசைகள் கொடுக்கப்பட்டன ! அவர்களுக்கு இருக்குமிடத்திலேயே சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன் ! மதிய உணவு உயர்தரமான உணவு கொடுக்கப்பட்டது ! எல்லாம் இலவசம் ! அவர்கள் தங்கு மிடத்திளிருந்து பணியிடத்திற்கு வந்து போக வாகன வசதி செய்யப்பட்டது ! பணியிடங்கள் முழுவதும்  A / C செய்யப்பட்டு அவர்கள் சோர்வடையாவண்ணம் பாதுகாகாப்பட்டது ! மாதம் 50,000 லிருந்து ஆரம்பத்திலேயே ஊதியம் கொடுக்கப்பட்டது ! நல்ல முறையில் நிர்வாகத்தின் நன்மதிப்பை பெற அவ்ர்களுக்கு அவ்வப்போது வகுப்புகள் எடுக்கப்பட்டன ! அலுவலகத்திற்கு in time வருவது  on  time வரூவது என்பது பற்றி போதிக்கப்பட்டது ! வேறெந்த சித்தனையும் இல்லாமல் பணி செய்ய அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது! இவர்களும் எந்த  வித தொந்திரவுக்கும் ஆட்படாமல் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றானர் 
----------------------------------------------------------------------------------------------------------    
 
( இவர்களிடையே "ஸ்பார்ட்டகஸ் " தோன்றுவானா ? தோன்றுவான் ! தோன்ற வேண்டும் !! தோன்ற வைப்போம்!!!)











 












  

0 comments: