Monday, May 19, 2014

கவலைப் படாதே  தோழா !!!

'84 ப் போல இதுவும் கடந்து போகும் .....!!!



1984 ம் ஆண்டு இந்திராகாந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்டார் ! அதனை அடுத்து ராஜீவ் காந்தி பிரதமரானார் !

உடனடியாக மக்களவைத் தேர்தலுக்கு உத்தரவிடப்பட்டது ! 

அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் 404 இடங்கள் கிடைத்தன ! அதன் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து 414 இடங்களில் வெற்றி பெற்று அசுர பலத்தோடு ஆட்சிக்கட்டிலில் ஏறியது காங்கிரஸ் !

பின்னால் திரும்பிப் பார்த்தால்  வெகு துரத்தில்  என்.டி . ராமராவ் அவ்ர்களின் தெலுங்கு தேசம் கட்சி 30  இடங்களோடு   கண்ணைச் சிமிட்டிக்கொண்டு நின்றது !

அதற்கு அடுத்து 22 இடங்களைப் பெற்று மார்க்சிஸ்ட் கட்சி இருந்தது ! இன்றய ஆளும்கட்சியான "பா.ஜ.க " இரண்டு இடங்களோடு நிறுத்திக்கொண்டது !

ராஜீவ் காந்தி நினைத்திருந்தால் எந்த சட்டத்தையும் ,ஏன் அடிப்படை அரசியல்சட்டத்தையும் திருத்தியிருக்கமுடியும் ! அன்று காங்கிரஸை எதிர்த்து நின்ற மார்க்சிஸ்டுகளும், தெலுங்கு  தேசமும் பலவீனமாகவே இருந்தார்கள் ! அவ்ர்களை புற்க்கணிபது என்பது அன்றய  ஆளும்கட்சிக்கு   பெரிய விஷயமல்ல !

எதிர்ப்பு இல்லாத பலவீனமான அரசியல்  களத்தில் அன்றய ஊடகங்கள் எதிர்க்கட்சிகளின் பணியை சிறப்பாக செய்தன ! குறிப்பாக  "Indian express " மற்றும்  "The  Hindu " பத்திரிகைகள் மிக சிறப்பாக அப்பணியினைச் செய்தன  !

"போபர்ஸ் "  ஊழல் வெளிப்பட்டதும் அப்போது தான் !

ஐந்து ஆண்டுகள் கழித்து நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 140 இடங்களையே பெற்முடிநதது ! வி.பி. சிங் தலைமையில் ஐக்கிய முன்னணிஆட்சி அமைந்தது !

நரேந்திர தாமோதர் மோடி பிரதமராகப் போகிறார் ! நமக்கு வருத்தமில்லை !
முழுக்க முழுக்க ஒரு ராஷ்ட்ரிய சங் பிரசாரகர் ஆட்சிகட்டிலில் அமரப் போகிறார் !

அந்த ஆர்.எஸ் எஸ் காரரை  இந்தியாவின் தலைவராக மாற்றுவது எதிக்கட்சிகளின் கடமை ! பலமான எதிர்க்கட்சி இல்லாத நிலைமையில் அந்த கடமையை ,ஊடகங்கள்  செய்ய வேண்டும் !

செய்வார்களா ?

நம்புவோம் !.

 







0 comments: