Sunday, September 29, 2013

டெலி பிலிம்:


"ஆத்மி  அவுர் ஔரத் " (1984)


அது மலை மேல் உள்ள குக்கிராமம் .மலைவாழ் மக்கள் வசிக்கிறார்கள் ! ஐந்து மைல்தள்ளி ஒரு சாலை பொகிறது ! அதில் காலை கீழே  இருந்து மேலே இருக்கும் சிற்றுருக்கு ஒரு பஸ் பொகும்.மாலை அதே பஸ் அடிவாரத்திற்கு செல்லும்! அது ஒன்றுதான் போக்குவரத்து !


அங்கு தான் அவன் வசிக்கிறான் ! மகா போக்கிரி! திருடு,பொய்,பித்தலாட்டம் எல்லாமுண்டு ! மகா ஸ்திரீ லோலன் ! காட்டுப்பாதையில் அடிவாரம் சென்று திருடிவிட்டு மேலே வந்து விடுவான் !

 

அந்தப் பெண் பஸ் வர காத்திருக்கிறாள் ! அவள் நிறைமாத கர்பிணி! கணவன் ஊரில் இல்லை! லெசாக இடுப்பு வலிப்பது போல் தோன்றியதால் கீழே இருக்கும் பெற்றொர் வீட்டிற்கு புறப்பட்டாள். ஐந்துமைல் நடந்து சாலைக்கு வர மிகவும்கஷ்டப்பட்டாள். சாலையில் கூட்டமாக இருந்தது !


அவனும் பஸ்ஸுக்காக காத்திருந்தான் ! ஜனங்கள் அவனிட மிருந்து ஒதுங்கியே நின்றார்கள் ! பஸ் வந்ததும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறினார்கள் ! அவனும் ஏறினான் ! பிறகுதான் தெரிந்தது ! அந்தப் பெண் ஏறவில்லை என்று ! முரடன் அல்லவா! பஸ்ஸை நிருத்த சொல்லி இறங்கிவிட்டான்!

 

புறப்பட்ட இடத்திற்கு வந்தான் ! இவன் தூரத்தில் வருவதைப்பர்த்த அந்தப் பெண் ஒளிந்து கோண்டாள் !தன்னந்தனியாக இருப்பது அவளுக்கு சங்கடமாக இருந்தது ! திருப்ப இன்னுமைந்து மைல் நடந்து வீட்டிற்கு போகவா ? அல்லது மலைபாதயில் இறங்கி பெற்றொர் வீட்ட்டிற்கு பொகவா? மலைப்பாதையில்  நடக்க ஆரம்பித்தாள் !


சிறிது தூரம் சென்றது அவன் தோடர்வதை கவனித்தாள் ! பயம் ! தொடர்ந்து நடந்தாள் ! ஒற்றையடிப்பாதை ! புதரும் செடிகொடிகளுகம் நிறைந்த காட்டு பாதை ! அந்தப் பாவி தோடருகிறான் ! பயத்தில் இடறி விழுந்தாள் ! அவளால் நடக்க முடியவில்லை ! அவன் நெருங்கி வந்தான் ! கையில் இருந்த் அரிவாளை எடுத்து அருகிலிருந்த கொப்புகளை வெட்டினான் ! மரப்பட்டைகளை உரித்து நாராக்கி  இழுக்கும்சப்பரத்தை கட்டினான் ! அவளைப் பார்த்தான் ! அவ்ள் அதில் அமர்ந்து கொள்ள மெள்ள இழுக்க ஆரம்பித்தான் ! கட்டுப்பதையில் சிறு ஓடைவந்தது!


இருட்டு நேரம்! சப்பரத்தோடு அவளத்துக்கி  தலையில் வத்துக் கொண்டு மறு கரைக்கு சென்றான் !


அவளுக்கு இடுப்புவலி அதிகமாகியது  !  முனக ஆரம்பித்தாள்   ! அவன் திகைத்தான் ! அருகில் உள்ள சிற்றுருக்கு தூக்கி சென்றான் ! அங்கு மருத்துவமனையில் சேர்த்தான்! இரவு முழுவதும் வேளியே அவள் முனகல் சத்தத்தைக் கெட்டுக்கோன்டே காத்திருந்தான் ! அதிகாலை அவள் வீரிட்டு அலறும் சத்தம்கேட்டது ! செய்வதறியாது தவித்தான் ! அதனோடு "குவா-குவா "என்று புதிய சத்தம் கெட்டது ! விம்மி வீம்மி அழுதான் ! மெல்ல எழுந்து அந்தப் பெண்ணின் பெற்றொர் வசிக்கும் கிராமத்தை  நோக்கி நடக்க ஆரம்பித்தான் !


தபன் சின்கா இயக்கத்தில் தூர்தர்ஷன் தயாரித்த டெலிபிலிம் இது! அந்த போக்கிரியாக அமொல்பாலெகர் அற்புதமாக நடித்த படம் ! அந்த பெண்ணாக மதுவா ராய் சவுத்திரி நடித்தார் ! 

மிகக் குறைந்த வசனம் !  A very good non-narative film !


தமிழ் நாட்டில் நூற்றாண்டுவிழா கொண்டாடினார்களாம்! திரைப்படங்களை இலவசமாக திரையிட்டார்களாம் !  


விழாவை விமரிசித்து "விஸ்-காம்" படித்த இளைஞர்கள் முக நூலில் எழுதி விட்டர்கள் ! 


இந்த படத்தை 1984 அல்லது 85ம் ஆண்டு பார்த்த நினவு !


சில நினவுகள் அழிவதே இல்லை !!!













Sunday, September 22, 2013

"கலவை "

(இந்தியாவந்து  இரண்டு நாள் சென்னையில் தங்கி விட்டுப் போன அமெரிக்க நண்பரின் பதிவிலிருந்து )

என்னதான் சொல்லுங்கள், நாத்திகத்தில் இது போன்ற முட்டாள்தனங்கள் நடக்க வாய்ப்பே இல்லை.

2. சமீபத்தில் நடந்து முடிந்த வினாயக சதுர்த்தியின் விளைவாக நிறைய ஆத்திகர்கள் திருடர்களாக மாறியிருக்கிறார்கள். டைம்ஸ் ஆப் இன்டியாவில் வந்திருக்கும் செய்திப்படி நிறைய இடங்களில் ஆத்திகர்கள் எத்தனையோ ஆயிரம் வாட் கணக்கில் பொது மின்சாரம் திருடி வினாயகப் பெம்மானைக் கோலாகலமாக வழிபட்டிருக்கிறார்கள். திருட்டில் வினாயகருக்கும் பங்களித்திருக்கிறாகள் என்பது தெரிந்து செய்திருக்கிறார்களா? இல்லை 'வினாயகர் தானே,, நேரிலா வரப்போகிறார்?' என்ற சமாதானத்துடன் செய்தார்களா? ஆக மொத்தம் நாட்டுக்கு நஷ்டம். 

விடுங்க, அதைப் பற்றி யாருக்கு என்ன கவலை? அதை மோடி பாத்துக்குவாரு. இப்பத்திக்கு வினாயகரை நல்லா லைட் வச்சு கூட்டிக்கிட்டுப் போய் கடல்லே கரைச்சா போதும். என்னா சொல்றீங்க?

என்னதான் சொல்லுங்கள், நாத்திகத்தில்.. 
கொஞ்சம் இருங்க, யாரோ வேகமா வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றாப்ல இருக்குதே?

    மோடி என்றதும் நினைவுக்கு வந்தது. நரேந்திர மோடி நிச்சயம் வெற்றி பெறுவார் என்கிறார்கள். ந.மோடி வருவதால் இந்தியா "எங்கியோ போவப் போவுது" என்கிறார்கள். "என்ன செய்வார் மோடி?" என்று சிலரிடம் கேட்டேன். எல்லோரும் ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் (குஜராத்?) அப்படி இப்படி சொல்கிறார்களே தவிர, காங்கிரசை விட மோடி எந்த விதத்தில் மேலான ஆட்சியைக் கொண்டு வருவார் என்று யாராலும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஊழலை ஒழிப்பதிலிருந்து இஸ்லாமியரை விரட்டுவது வரை ஆளாளுக்குத் தோன்றியதைச் சொல்கிறார்கள். 

'இந்துக்களுக்கு நல்லது' என்ற காரணத்துக்காக மோடிக்கு ஓட்டு விழுந்தால் வெட்கக் கேடு.







Saturday, September 21, 2013

திரைப்பட நூற்றாண்டு விழாவும் ,

அந்த  மூன்று இளைஞர்களும் .......!!!

திரைப்பட விழா பற்றிய சர்ச்சை தொடங்கி விட்டது ! சுமர் நாற்பது நாற்பத்தி ஐந்து வருடங்களுக்குமுனாபாக தமிழ் திரைப்பட உலகை மூற்றிலும்மாற்றி அமைக்க வேண்டும் என்று கருதி திரைப்பட  உலகிற்குள் நுழைய முன் வந்தனர் மூன்று  இளைஞர்கள் ! 

கமலா ஹாசன்,பாரதிராஜா, லெனின் ஆகியோர்தான் அந்த மூவரும்!
எல்டாம்ஸ் ரோடின் காம்பவுண்டு சுவர்களின்மேல்  உட்கார்ந்து கொண்டு உலக சினிமா பற்றியும், தமிழ் சினிமா பற்றியும் அலசி ஆராய்வார்கள் ! சிலநாட்கள் விடியும்வரை  பேசுவார்கள் !

அவர்களுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது ! அன்றிருந்த நிலையில் திரை  உலகத்திற்குள்  ஆதிக்கம் செலுத்தி வந்த எம்.ஜி.ஆர்,சிவாஜி  ஜெமினி ஆகிய star  களை மீறி எதுவும் செய்யமுடியாது ! இந்த star system  உடைக்கப்படவேண்டும் ! வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார்கள் !

காலம் மாறியது ! கோடம் பாக்கம் குச்சிலுக்குள் இருந்த தமிழ் திரைப்படம் "பதினாறு வயதினிலே "என்ற படத்தின் மூலம் studio system தனை உடைத்துகொண்டு வெளியே வந்தது !

நடிகனின் பெயரை விட இயக்குனரின் பெயர் ரசிகர்களிடையே முதன் முறையாக பேசப்பட்டது !

இயக்குனருக்கு star அந்தஸ்து வந்தது !

பாரதி ராஜா star இயக்குனரானார் !

அதிலிருந்து கீழெ இறங்க மனமில்லாத அவர் அங்கேயே தங்கி அதோடு ஐக்கியமாகிவிட்டார் !

முன்றில் ஒன்று கழிந்தது!

கமலஹாசன்  தொடர்ந்தார் ! திரைப்பட தயாரிப்பின் அன்றய நெளிவு சுளிவு களுக்கு ஏற்ப அவர் தன்னை மாற்றி கொண்டார் ! "சகலகலாவல்லவன் " ஆனார் ! அருகிலேயெ வந்து கொண்டிருந்த ரஜனி கைகோர்த்துக் கொண்டார் ! எம்.ஜி.ஆர்,சிவாஜி க்குபதிலாக கமல்,ரஜனி star system வந்தது ! கமல் அதில் முங்கி முழுகிப்போனார் !

மூன்றில்  இரண்டாவதும் கழிந்தது !

80 ஆண்டுகளில் தா.மு.எ.ச கலைஇரவுகளை நடத்தும்! குறிப்பாக திருப்பரம்குன்றம் கலை இரவு விசேஷ் மாக இருக்கும் ! ஒரு முறை 
லெனின் வந்திருந்தார் ! அவரோடு அருகில் அமர்ந்து பேச வாய்ப்பு கிடைத்து! தமிழ் திரைப்படம் பற்றியும் அதனை கேரளம், மே.வங்கம் , மற்றும் சர்வதேச தரத்திற்கு கொண்டுசெல்வது பற்றியும் அவரிடம் விவாதித்தேன்! அப்போது தான் எலடாம்ஸ் ரோடு இளைஞர்கள் பற்றி குறிப்பிட்டார் !

"தன்னந்தனியாக நான் நிற்கிறேன் ! உங்களைப் போன்ற   முற்பாக்கு எழுத்தாளர்கள் தான் கைகொடுக்க வேண்டும் " என்றார் !

த.மு.எ.க.சாவின் விருது நகர் மாநாட்டில் "முற்போக்கு எழுத்தாளர்கள் " கைகொடுத்து வருகிறார்கள் என்பதை பகிரங்கமாக செயற்படுத்தினார் லெனின் !

இன்று வெறும் அரங்கங்களில்   அடைபட்டுக் கிடந்த திரைப்படத்தை மக்கள்மத்தியில் த.மு.எ.க.ச கொண்டு சென்று கொண்டிருக்கிறது !

லெனின் அவ்ர்களே நாம் கைகோர்த்து நடை போட வேண்டிய தூரம் இன்னும் அதிகம் !

Miles to go ! comrade !!!














 




Thursday, September 19, 2013

"நாத்திகம் " எப்போது தோன்றியது ......?

சீத்தாராம் எச்சூரி விளக்கம் !!!


"நாத்திகம் " எப்போது தோன்றியது என்ற கேள்வியை எழுப்பி அதற்கான விளக்கத்தையும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் சீத்தாரம் எச்சூரி விளக்கம் அளித்துள்ளார் !

"இந்துஸ்தான் டைம்ஸ் " பத்திரிகையில் மூட நம்பிகையை எதிர்த்து போராடிய நரேந்திர தபோல்கர் பற்றி அவர் எழுதியுள்ள காட்டுரையில் நாத்திகம் பற்றி விவரிக்கையில் அதன் தோற்றம் பற்றி விளக்கியுள்ளார் !

"பகுத்தறிவாளர்களையும், மூட நம்பிக்கை எதிப்பாளர்களையும் இவர்கள் கடவுளுக்கு எதிரானவர்கள் என்று பிரச்சாரம் செய்தே மதத்தை தங்கள் ஆளுமையில் வைக்கிறார்கள் ! "நான் மத நம்பிக்கையை எதிர்ப்பவன் அல்ல " என்று தபோலகர் அறிவித்தும் அவரை சுட்டுக் கொன்று விட்டர்கள் ! மக்களிடையே மூட நம்பிக்கையை வளர்த்து அதில்குளிர்காய நினைக்கும்போலி சாமியார்களை  எதிர்த்தே நான் போராடுகிறேன் என்று அறிவித்தவர் தபோல்கர் !

பகுத்தறிவு வாதம் என்பது இந்திய தத்துவ மரபில் இருந்தே வந்துள்ளது ! மாயாஜாலங்கள் மூலம் மக்களை ஈர்ப்பது தவறு என்று புத்தர் கூறியுள்ளார் !
பௌத்தர்களின் வாழ்க்கை முறையை நெறிப்படுத்தும் "பால-விநய- தீபிகா என்ற நூலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது !

புலன் கடந்த அறிவியல் தோன்றிய(Metaphysics ) போதே பகுத்தறிவும் தோன்றியது என்கிறார் " சித்திரம் எச்சூரி ! மேலும்

" மேற்கத்திய தத்துவ ஞானிகள் கி.மு 6 ம் நூற்றாண்டில் துருக்கி நாட்டில் மெலிடஸ் நகரில் வாழ்ந்த " தேம்ஸ் " என்ற அறிஞர்தான் இதன் மூலவர் என்று கருதுகிறார்கள் !

இந்திய வலாற்றாளரான தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா கி.மு 10-7ம்நூற்றாண்டிலேயெ நாத்திகக் கருத்துகள் உருவாகிவிட்டதாக கருதுகிறார்!
 இதற்கு சான்றாக "சத் பத  பிரம்மனா " என்ற நூலை சுட்டிக்காட்டுகிறார் ! இந்த நூலில் "உட் டலக அருணி " என்ற அறிஞர்   பற்றி கூறுகிறார் ! இவர் அறிவுக் கோட்பாட்டை உருவாக்கியவர் ! எந்த ஒன்றையும் "உற்றுநோக்கி " அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான் அறிவியல் கோட்பாடு !

புத்தர் காலத்திற்கு முன்பே நாத்திகக் கருத்துகள் இருந்தன என்றும் அதற்கு சான்றாக "சந்தோக்கிய " உபநிஷத்தை சுட்டிக் காட்டுகிறார் சட்டோபாத்தியாயா!  "என்று சீத்தாராம் எச்சூரி  கூறியுள்ளார் !!

(முழுமையான கட்டுரையின் தமிழாக்கம் தீக்கதிர் பத்திரிக்கை 19-9-13 ல் வந்துள்ளது )









Friday, September 13, 2013

மோகன் பகவத் என்ற  கால்நடை  மருத்துவர்....!!! 

ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கத்தின் தற்போதைய தலைவர் மோகன் பகவத் !
இவர் ஆரம்ப காலத்தில் அகோலாவில்  உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்தார் !    நிறுத்திவிட்டு மக்கள் சேவை செய்ய .ஆர் .எஸ். எஸ் இயக்கத்தில் சேர்ந்தார் !

இன்று இந்தியாவின் சகல பிணிகளையும் போக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் ! அடுத்து மிகவும் உத்தமமான ஒருவரை இந்தியாவின் பிரதமராக்குவது என்று தீர்மானமாகச் செயல்பட்டு வருகிறார் ! 

அவர் சொல்லும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்பவர் யாரானாலும் அவர்களை பிரதமராக்குவேன்  என்று அறிவித்துள்ளார் ! அவருடைய நான்கு நிபந்தனைகள்  என்ன?

1. பிரதமரானதும் பிரும்மாண்டமான   அளவில் அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட வேண்டும் !

2.முஸ்லிம்,கிறிஸ்துவன், இந்து என்று பாரபட்சமில்லாமல் சட்ட திருத்தமாக பொது சிவில் சட்டம்கொண்டுவரவேண்டும் .

3. மத்திய பிரதேசத்து தேஷ்முக் கேரளத்தில் வியாபாரம் செய்யலாம் ! அங்கு சம்பாதித்து கேரளத்தில் வீடு கட்டிக் கொள்ளலாம் ! அதே தேஷ்முக் காஷ் மிர் சென்றால் அங்கு சொந்தமாக வீடு வாங்க முடியாது ! இதற்கு காரணம் காஷ்மீர் மக்களூக்கு 1947ல்   கொடுத்த  வாக்குறுதி ! அரசு சட்டத்தில் உள்ள அந்த 370 சரத்தை நீக்கி விட !வேண்டும் 

4. பகத் கால்நடை மருத்துவர் என்று சொன்னேன் ! அவருக்கு பசுக்கள் என்றால்  கொள்ளைப் பிரியம் !ஆகவே பசு வதை தடை   சட்டத்தை  கொண்டு வரவேண்டும் !

இதனை எற்றுக் கொள்பவர்களை பிரதமராக்குவேன்  என்றார் !

நரேந்திர மூதி சரி  என்கிறார் ! இன்று மாலை அவரை பிரதமர் வேட்பா:ளராக அறிவிப்பார் என்று சொல்கிறார்கள் !

பா.ஜ.க வில் பெரிய வக்கீல்கள்,டாக்டர்கள், பேராசிரியர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் ஆகியோர் இருக்கிறார்கள் ! 

"நீ யாருய்யா ? நீ ஏன் வர ! முதல்ல ஒங்க ஆர்.எஸ் .எஸ் ஆபிஸ்ல ஒரு ராமர் படத்தை மாட்டு ! பொறவு கோவிலுக்கு வா ? நு   சொல்ல அவங்களுக்கு தைரியமில்ல !   

அத்வானி கோயில் கட்ட தயார் ! எல்லா நிபந்தனையும் ஏற்க தயார் ! நரேந்திர மூதி வந்தா பா .ஜ.க வையும் அழிச்சுடுவரு!.

இந்தியாவையும் அழிச்சுடுவாரூ !" நு நினைக்கிறார் ! 

அத்வானிக்கு தவறான வழி காட்டப்படுகிறது ! அவரை சுத்தி பலர் இருக்காங்க ! அவங்க சொல்றத கேக்காரு ங்காங்க !

அதுலயும் குல்கர்னி நு ஒத்தரு இருக்காறாம் ! அவரு மத்திய பிரதேசத்துக்காரர்! ஆனாலும் முப்பது வருசத்துக்கு முன்னால மார்க்சிஸ்கட்சில இருந்தாராம் !












Wednesday, September 11, 2013

அடிமைத்தனம் என்றால் என்ன ?...!!

(சிக்காகோவில் வாழும் அப்பாதுரை அவர்களின் பதிவிலிருந்து )





    'இளமையில் சுதந்திரம்' என்ற அமைப்பின் சார்பில் என்னை உள்ளூர் உயர்நிலைப்பள்ளியின் கோடை விழாவில் பேச அழைத்திருந்தார்கள். பெரும்பாலும் பத்து-பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் நிறைந்த அரங்கு. சற்று கனமான கருத்துடன் தீட்டப்பட்டிருந்த என் உரையை முறையாகத் தொடங்குமுன் மாணவர்களைச் சற்றே ஈர்க்கலாம் என்று எண்ணி ஒரு கேள்வியை அவர்கள் முன் வைத்தேன்: "அடிமை என்கிறோமே.. அப்படியென்றால் என்ன தெரியுமா உங்களுக்கு?"


முன் வரிசையில் ஒருவரையொருவர் பார்த்தார்கள். என் கேள்விக்குப் பதில் சொல்ல முன்வரவில்லை. கேள்வியை சற்று விளக்கி மீண்டும் அவர்கள் முன்வைத்தேன். "கறுப்பர்கள் வெள்ளையருக்கு அடிமைகளாக இருந்தார்கள் என்று படிக்கிறோம். லின்சி லோகன் போதைப்பொருளுக்கு அடிமையானார் என்கிறோம். நம் நண்பர்கள் மற்றும் சுற்று வட்டத்தினர் சிகரெட் மது போன்ற பழக்கங்களுக்கு அடிமைகள் என்கிறோம். ஏன் அப்படிச் சொல்கிறோம்? தெரிந்தோ விரும்பியோ தானே சிகரெட் பிடிக்கிறார்கள்? உடல் நலத்தைக் கெடுக்கும் என்று தெரிந்து தானே போதை மருந்தை நாடுகிறார்கள்? எனில் அடிமை என்றால் என்ன? அடிமைத்தனம் என்பது என்ன? செய்கையா? உணர்வா? பாதிப்பா? பயமா? அல்லது குணமா? எங்கிருந்து வருகிறது? நாம் ஒருவருக்கோ ஒரு பழக்கத்துக்கோ அடிமையாக இருக்கிறோம் என்பதை எப்படி உணர்வது? "நீ என் அடிமை" என்று சொன்னால் மட்டுமே அறியப்படுகிற உண்மையா?". 


அரங்கில் சில கைகள் மெள்ள உயரத் தொடங்கின. எனக்கும் புத்துணர்ச்சி பிறந்தது. "சொல்லுங்கள்" என்றேன்.


"அடிமைத்தனம் என்பது.. ஏன் செய்கிறோம் என்றச் சிந்தனையில்லாமல் ஒரு செயலில் திரும்பத் திரும்ப ஈடுபடுவது.." 


"எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்"


"ஏனென்று கேட்டால் தண்டிக்கப்படலாம் என்ற ஒரு வித அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன் உடன்படுவதாகும்"


"ஒரு விருப்பத்தை நிறைவேற்றினால் அதிகாரமுள்ளவர் மனமிரங்கி ஏதாவது பலன் வழங்குவார்கள் என்றக் கீழ்த்தட்டு எதிர்பார்ப்பே அடிமைத்தனமாகும்"


"விருப்பத்துக்கு மாறாக நடந்தால் தண்டனை கிடைக்கும் என்றத் தீராத பயம்.."


"தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளை இனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."


"பயனில்லை என்று தெரிந்தும் ஒன்றை மீண்டும் மீண்டும் நாடும் மனப்பாங்கு"


"மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாத முறைக்குட்பட்டு நடப்பது.."


"அறியாமல் செய்த தவறை, அறிந்தே தொடர்ந்து செய்வது.. செய்யத்தூண்டுவது.."


அனைவருக்கும் நன்றி சொல்லி என் உரையைத் தொடங்கினேன். அன்றைய பேச்சு வெற்றிகரமாக முடிந்தது என்றே சொல்ல வேண்டும். இருபது நிமிடங்கள் கொடுத்திருந்தார்கள். 'சுதந்திரமாக சிந்தித்துச் செயல்பட வேண்டிய அவசியம்' என்ற பரந்த தலைப்பென்பதால் நிறைய பேச முடிந்தது. என்னுடைய பேச்சின் அடித்தளம், 'பிறர் சொற்படி கேட்டுச் சீரழிகிறோம், நம் எண்ணப்படி இயங்காமல் வாழ்வில் தோல்வியடைகிறோம், நம் முன்னோர்கள் உற்றார் நண்பர் சுற்றங்களின் பழக்கம் என்பதால் கண்ணை மூடி நாமும் பின்பற்றிப் பின்தங்குகிறோம்' என்ற கருத்துக்களில் அமைக்கப்பட்டிருந்ததால், என் நாத்திகச் சிந்தனைகளை சற்றுச் சுலபமாக அவர்கள் முன் வைக்க முடிந்தது. நான் எதிர்பாராத வரவேற்பு கிடைத்தது மிகவும் நிறைவாக இருந்தது. ஆத்திக ஆதிக்கமும் வெறியும் மிகுந்த அமெரிக்க நகரமொன்றில் அறிவை நாடும் இளைய சமுதாயத்துடன் உரையாடிய அனுபவத்தை நான் மறக்கப் போவதில்லை. 



அடிமைத்தனம் என்பது செய்கையா ? பயமா ?பாதிப்பா ?உணர்வா ? குணமா ? போதைகளை  நாடுவது போல கடவுள் நம்பிக்கையும் ஒருவகை அடிமைத்தனமா ?


   












Monday, September 09, 2013

பாரதியின் 

மரணம் அவனைக் காப்பாற்றியது ......!!!!

இந்திய சதந்திரப் போராட்டத்திலும், கங்கிரஸ் கட்சியின் வரலாற்றிலும்"சூரத் " நகரில் நடந்த மாநாடு மிக முக்கியமானது !
படித்த மத்தியதர மக்களுக்கும் ,சட்டம் பயின்ற இந்தியர் (natives ) களுக்கும் அர்சுபதவி,முன்சீப்பு,மாஜிஸ்டிரேட் , நீதிபதி பதவிகளை தரவேண்டும் என்று தீர்மானம் போட்டுக் கொண்டிருந்த மகாசபைதான் காங்கிரஸ் !

"முட்டாள்களே! இது  நம்நாடு ! எதற்கு வெள்ளைக் காரனிடம் கெஞ்சவேண்டும் ! என் நாட்டை நானே ஆண்டு கொள்கிறேன் ! சுதந்திரம் என் பிறப்புரிமை அதனை வாங்குவோம் !" என்று சூரத் காங்கிரஸில் கர்ஜித்தார் பாலகங்காதர திலகர்!

இதனை  ஆதரித்து திலகரோடு நின்றவர்கள்  வ.உ.சிதம்பரம் ,பாரதி ஆகியோர்  மாநாட்டில் இவர்கள் குரல் எடுபடவில்லை ! படித்த காங்கிரஸ் தலைவர்கள் இவர்களை ஆதரிக்கப் பயந்தார்கள் ! எற்கனவே தீவிர வாதிகள்,மிதவாதிகள் என்று இருந்தது வெளிப்படையாக வெடித்தது !

சுதந்திரம் கேட்டவர்கள் தீவிர வாதிகள் !!!

கேட்டால் ஆட்சியாளர்களின் கோபத்திற்கு ஆளொவோம் ! பதவியோ பட்டமோ கிடைக்காது ! ராவ் பகதூர்,திவான் பகதூர் ஆகமுடியாது ! முன்சீபு,மாஜிஸ்டிரேட் கனவு நனவாகாது !என்று வாயை பொத்திக்கொண்டிருந்தவர்கள் பெரும்பான்மையினர் !

அதுமட்டுமல்ல ! சுதந்திரம் வேண்டியவர்களை "தீவிரவாதிகள் என்று ஒதுக்கி வைத்தனர் ! இதுதானே பிரிட்டிஷ் அரசுக்கு வேண்டும் !

சுதந்திரம் வேண்டியவர்களைபிரிட்டிஷ் அரசு பலவகையிலும் துன்புறுத்தியது ! அவர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ,தேச விரோத நடவடிக்கையில ஈடு பட்டார்கள் என்று வழக்கு போட்டது ! 

பாலகங்காதர திலகர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டது !
காங்கிரஸ் வக்கில்கள் யாரும் அவருக்காக வாதாட முன்வரவில்லை !பயம் ! "பிடிச்சு  உள்ள போட்டுட்டான்ன்ன !"

அப்போது தைரியமாக  திலகருக்காக ஒரு இளைஞர் வாதாட வந்தார்! 
அவர் தான் முகம்மது அலி ஜின்னா !!!

 தமிழ்நாட்டில் சுதந்திரம் என்பிறப்புரிமை என்று கர்ஜித்தவர்களிம் வ.உ.சி,பாரதி, சிவா ஆகியோர் ! 

வ.உ.சி.மீதும் தேசத்துரோக வழக்கு போடப்பட்டது ! சிவா மீது வழக்கு ! பாரதி தப்பி பாண்டிச்சேரி சென்றுவிட்டார் !

சிவாவும், வ.உ.சி.யும் தண்டிக்கப்பட்டனர் ! வ.உ.சியின் பட்டம் பறிக்கப்பட்டது ! இரன்டுகப்பலுக்கு சொந்தக்காரரான அவருடைய கப்பல் கள் ஏலம்போடப்பட்டன  ! சிறையிலிருந்து வந்த வ.உ.சிக்கு நிற்க நீழலிலை ! நெல்லை மாவட்டத்திற்குள் போகாக்கூடாது என்று உத்திரவு !

இரண்டு குழந்தைகளோடும்,மனைவியோடும் சென்னை வந்த வருக்கு சோறு போட ஆளில்லை !
பலசரக்கு சாமான்களை வாங்கி வீடுவீடாக விற்று ஜீவனம் !
ஒருகட்டத்தில் தள்ளு வண்டியில்  "மண்ணெண்ணை " விற்றார் !

மைலாப்பூர் காங்கிரஸ் வக்கீல்கள் எவரும் எட்டிப்பார்க்கவில்லை !

நீதிக்கட்சிக்காரரகள் அவர் மகனுக்கு அரசு வேலை  தர ஆசைகாட்டினார்கள் ! 
தேச துரோக குற்றத்தில் சிறை சென்ற என்மகனுக்கு பிரிட்டிஷ் அரசு உத்தியோகமா ? என்று வியந்தார்  வ.உ.சி.! பெரியாருக்கு கடிதம் எழுதுங்கள் ! எல்லாம் நல்லபடியாக முடியும் என்று ஆலோசனை சொன்னார்கள் !

எழுதினார் ! சேலத்தில் நடக்கும் மாநாட்டில் வந்து பேசுங்கள் ! என்றர் பெரியார் ! சேலம் போனார் ! மாநாட்டில் பேசச்  சொன்னர்கள் ! " இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது  ! அப்படியே கொடுத்தாலும் dominian அந்தஸ்து மட்டும்கொடுங்கள்  " என்று அவர்களுடைய கொள்கையை ஆதரித்து பேசினார் !

நல்லகாலம் ! பாரதி இல்லை !

இருந்திருந்தால் ஐந்தாம்  ஜார்ஜ் மீது  பிள்ளைத்தமிழ் பாடி காலில் விழச் 
செய்திருப்பார்கள் !

இந்த அவலத்திலிருந்து பாரதியின் மரணம் அவனைக் காப்பாற்றியது ! 










































































Thursday, September 05, 2013

உண்மையும் ,கருத்தும் .....?

உண்மை - கருத்து  ! இரண்டும் ஒன்றா ? வெவ்வேறா ?
நெருப்பு சுடும் ! இது உண்மையா ? இல்லைகருத்தா ?
என்னைக் கேட்டால்  உண்மை என்பேன் !

" நெருப்பு இருக்கிறது ! தொட்டேன் ! சுட்டது !" அதனால்   உண்மை என்பேன் ! சின்னப் பையனிடம் கேட்டாலும் உண்மை என்பான் ! அதை விளக்கச் சொன்னால் விழிப்பான் ! "ம்ம் ..எங்க அம்மா அப்பா சொன்னாங்க ! தாத்தா சொன்னாங்க ! என்பான் ! அவனுக்கு அவர்கள் சொன்ன கருத்து அது !

இரண்டும் இரண்டும் நான்கு ! இது உலகம் எற்றுக் கொண்ட உண்மை ! பல கணித  விதிகளுக்கு   உட்பட்டு தர்க்க ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று ! சின்ன பையனிலிருந்து பேராசிரியர் வரை ஏற்றுக்கொண்ட உண்மையான கருத்து !

ஒரு கருத்து தர்க்கரீதியாக எல்லாராலும் எற்றுக் கொள்ளப்பட்டதால் உண்மையாகிவிடுமா ?

ஒரு உண்மை நிரூபிக்கப் படாததால் கருத்து என்று ஒதுக்கப்படுமா ?

சென்னையில் நாத்திகத் திருவிழா நடந்தது !

"கடவுளில்லை !கடவுள்  உண்டு என்பவன் முட்டாள் !" என்று பதாகை களோடு ஊர்வலம்வந்தார்கள் !

உலகம் பூராவிலும் உள்ள நாத்திகர்களுக்குமிவர்களுக்கும் வித்தியாசமுண்டு ! இவர்களுக்கும் ஆத்திகர்களுக்கும் அடிப்படையில்வித்தியாசமில்லை ! இருவருமே கடவுளை அவருடைய இருத்தலை நம்புகிறார்கள் !

கடவுள் இல்லை என்பது உண்மை ! அதனை   நிருபிக்க சங்கடப்படுகிறது ! அதனாலேயே அதனை  கருத்து என்று பெரும்பாலானவர்கள்   ஒதுக்குகிறார்கள் ! 

நம்ம ஊர் கருப்புச்சட்டை நாத்திகர்கள்  அறிவியல் ரீதியில் கடவுள் இல்லை என்பதை நிறுவ முற்படுவதை விட கடவுள் எதிர்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் !

உண்மையான நாத்திகனுக்கு கடவுள் எதிரி அல்ல ! கடவுள்   இல்லை
  என்பவனுக்கு இல்லாத ஒன்று எப்படி எதிரியாக முடியும் ? 

( நண்பர் அப்பாதுரை எழுதி வரும் கலர் சட்டை நாத்திகம் என்ற இடுகையிலிருந்து எடுத்த பகுதியோடு நான் எழுதியதும் , ! சுட்டி naathikan . blog spot )


















































Wednesday, September 04, 2013

அந்த பேராசிரியர் ........!!!


இந்திய சுதந்திர வேள்வியில் மாணவர்கள் குதித்திருந்த நேரம் ! பனாரஸ் இந்து பலகலைகழகம்.இந்த மாணவர்களின் யாகசாலையாக    இருந்தது !

சைமன் கமிஷனுக்கு எதிராக கங்கை ஆற்றினுள் நீந்திச்  சென்று பி.ராமமூர்த்தி சகமாணவர்களொடு கறுப்புக் கோடி கட்டிய பல்கலையும் அது தான் !

அங்குதான் அவர் பெராசிரியராக    இருந்தார் !

பிரிட்டிஷ் போலிஸ் மோப்பம் பிடித்துவிட்டது ! பல்கலை வளாகத்தைச் சுற்றி வளைத்து மாணவர்களை பிடிக்க விரும்பியது !  துணை வேந்தராக இருந்தவர் தான் அந்த பேராசிரியர் ! பல்கலை வளாகத்திற்குள் போலீசார் வரக்கூடாது என்று கூறிவிட்டார் !

சுதந்திர வேட்கையில் திளைத்திருந்த மாணவர்களை பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்க மாட்டென் என்று அறிவித்து விட்டார் !

அவரை மிறி போலிஸ் நுழைந்தால் ...?

மாண்வர்கள் துணைவேந்தரை சந்தித்தார்கள் ! நிலைமையை அவரும் பரிசீலித்தார் ! 

"நீங்கள்வளாகத்தில் இருக்கும் வரை உங்களுக்கு நான் பாதுகாப்பு ! என்னையும் மீறி போலிஸ் நுழைந்தால் .... கவலைபடாதீர்கள் ! இரவோடு இரவாக  கிராமப்புறங்களுக்கு ஓடிவிடுங்கள் ! அந்த கிராமத்து மக்கள் உங்களை போலீசிடமிருந்து காப்பாற்றுவார்கள் !" என்றார் அந்த துணைவேந்தர் !

மறுநாள் போலீஸ் நுழந்த பொது அவர்கள் தேடிவந்த மாணவர்கள்   அங்கு இல்லை ! 

அந்த துணைவேந்தர் தான் பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் !
 
இந்தியாவின் தூதுவராக மாஸ்கோ சென்று ஸ்டாலினை சந்தித்த ஒரே இந்தியர் !!!





 





2013 பால்ராஜ்  சஹானியின் நூற்றாண்டு .....!!!



1913ம் ஆண்டு மே மாதம் முதல் தேதியில் பிறந்த  பால் ராஜ் சஹானியின் நூற்றாண்டு இது ! கேன்ஸ் விழாவில் சிற்ந்த நடிகருக்கான விருது பெற்ற அவரைப்பற்றி ஓசைப்படாமல் இருந்து விட்டது இந்திய திரைப்பட உலகம் !

ராவல் பிண்டியில் பிறந்த  பால்ராஜ் ஆங்கில இலக்கியத்தில் எம்.எ படித்தவர் ! காந்தியின் ஆலோசனையின் பேரில் பி.பி.சி யில் பணியில்செர்ந்தார் ! பிரிவினக்குப்பின் இந்தியா வந்தார் ! கம்யுனிஸ்ட் கட்சியோடு நெருங்கியிருந்தார் ! அகில இந்திய வாலிபர் சம்மேளனத்தை கட்டி அமைத்தார் ! அதன் முதல் தலைவரும் அவரானார் !

மும்பை திரைத்துறை அவரை வரவேற்றது ! அன்றய இடது சாரி கலைஞர்களான கே.ஏ .அப்பாஸ், குருதத், திலிப் குமார் ,தேவானந்த் ,ஆகியோரோடு இணந்து இந்தி  துறைக்கு அடையாளமாக திகழ்ந்தார் !

இந்திய மக்கள் நாடக மன்றம்  உருவான போதும் பின்னர் அதன வழி நடத்திய கலைஞர்களில் அவரும் ஒருவர் !திரைப்படத்துறையில் இடது சாரிகளின் பிடியை சகிக்காதவர்கள் இவர்களைஓரம்கட்ட ஆரம்பித்தார்கள் ! ஆட்சியாளர்களும் இதற்கு தாளம் போட்டனர் ! பால்ராஜ் சஹானி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் !

கம்யூனிஸ் கட்சியிலிருந்து விலகி விடுமாறு அவருக்கு ஆலோசனை என்ற பெயரில் மிரட்டல்விடுக்கப்பட்டது ! பாலராஜ் மசியவில்லை !

நீதிமன்றத்தை  நாடி அவர் நடிக்கும் படங்களின் முதலீடுகருதி அவரை நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று முதலாளிமார்கள் கேட்டுக் கொண்டனர் !

சிறையிலிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு போலிஸ் வாகனத்தில் காலை  8 மணிக்கு வரலாம் ! படப்பிடிப்பு முடிந்து மாலை 5 மணிக்கு மீண்டும்போலீஸ்
 வாகனத்தில் சிறையில் அடைக்கப்படவேண்டும் என்று நீதி மன்றம்
உத்திரவிட்டது !

சிறையிலிருந்து கொண்டே  நடித்துக் கொடுத்த அந்த கலைஞன் பிறந்த நூற்றாண்டு   இது !

நமக்கென்ன !

 ரசனி இருக்காரு !
கமல் இருக்காரு !!
அசித் இருக்காரு !!!
விசய் இருக்காரு

அப்புறம் வேறென்ன வேணும் !




































































































































































 !!!!