Friday, July 19, 2013

அந்த நூற்றாண்டு நாயகன் ....!!!


சப்தர் ஹஷ்மி  படுகொலை செய்யப்பட ஆண்டு அவருடைய பிறந்த நாளையொட்டி டெல்லியில்விழா எடுத்தார்கள்! அதில் பங்கு கோள்ளச் சென்றிருந்தேன்!

எனது பால்ய கால நண்பர் மத்திய அரசு தலமைச் செயலகத்தில் பணியாற்று கிறார் ! அவ்ரப்பார்க்க செயலகத்திற்கு நடந்து சென்றேன்! 

உத்திரப் பிரதேசத்தில் இருந்து ஒரு வயதானவர் தள்ளாடிதள்ளாடி வந்து கொண்டிருந்தார்! அவருடைய மகள் 30 வயது ! கடுமையான நோயில் படுத்து இருக்கிறாள் அவளுக்கு  அரசு உதவி கேட்டு வந்திருக்கிறார்! திக்கு தெரியாமல் அலைந்து கொண்டிருந்தார்!பாவமாக இருந்தது! அவரை என்  நண்பரிடம் அழித்துச் சென்று விவரம் கேட்டு அனுப்ப முடிவு செய்தேன்!

நண்பர் under secretory ! முதியவரிடம் விசாரித்தார் ! "ஐயா! குறந்தது மூன்ரு நான்கு மாதம் ஆகும்! விசாரிப்பார்கள் ! நீங்கள் சொல்வது உண்மையா என்று பார்ப்பார்கள்! யாரவது எம்.பி யை தெரிந்தால் அவருடைய சிபாரிசு இருந்தால் விரவு படுத்தலாம்! "       என்றார் !

"கமிஷன் கேட்கிறார்கள்  " முதியவர் !

  நண்பர் என்னைப் பார்த்தார்!
பிரதமரின் அலுவலகத்தோடு தொடர்பு கொண்டார் !

பின்னர் என்னிடம் " இதனை முடிவு செய்பவர்கள் பிதமர் அலுவலகத்தினர் தான்! போலியான கோரிக்கை களை  நிராகரிக்க விசாரணை நடத்துகிறார்கள்!"

"வேறு  வழியே இல்லையா!"

நண்பர் யோசித்தார்!

பெரியவரே ! ஒருகாரியம் செய்யுங்கள்! அசோகா ரோடு 14 ம் எண்ணில் ஒரு அலுவலகம் இருக்கிறது! அங்கு ஒரு எம்.பி இருப்பார் ! அவரிடம் உங்கள் கோரிக்கையை சொல்லுங்கள்! அவர் சிபாரிசு  செய்தால் உடனே கொடுப்பார்கள்! "என்று முதியவரை அனுப்பினார்! 

அது மார்க்சிஸ்டு கட்சியின் பாராளுமன்ற அலுவலகம்! 

அவர் சிபாரிசு செய்தால்  விசாரணை  இல்லாமல் உடனடியாக கொடுக்க பிரதமர் உத்திரவிட்டிருந்தார் !  

அப்போது பிரதமடாயிருன்தவர் V.P.Singh

அந்த எம்பியின் பெயர் சமர் முகர்ஜி!

வீர  வணக்கம்  தோழா!



1 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

1989ல் தஞ்சாவூரில் சஃப்தர் ஹஷ்மிக்கும், க.நா.சு.வுக்குமாக சேர்த்து நடந்த அஞ்சலிக் கூட்டத்தை ப்ரகாஷுக்கு உதவியாக ஏற்பாடு செய்வதிலும், கலந்து கொண்டு பேசவும் வாய்ப்புக் கிடைத்தது நேற்றுப் போல் இருக்கிறது.க்ரிச்சான்குஞ்சு, எம்.வி.வி.யுடன், சே.ராமாநுஜமும் கலந்து கொண்டார்.

ஹஷ்மியின் ஜன நாட்ய மன்ச் தமிழ்நாட்டில் வீதி நாடகங்களுக்கு முன்னோடியாக இருந்தது.

காஸியாபாத்தில் ஹல்லா போல் நாடகத்தை நடத்திக்கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டார்.

தோழர் சமர் முகோபாத்யாயவின் நேர்மையும், எளிமையும் பற்றிப் பேசும்போது, ஹஷ்மியையும் பற்றிக் கொள்வது பொருத்தமாகத்தான் இருக்கிறது தோழரே!

இருவருக்கும் நம் அஞ்சலி.