Friday, May 17, 2013

யார் அந்த கிருஷ்ணன் .......?

சிவந்தி பட்டி என்ற சிறு கிராமம் திருநெல்வேலியிலிருந்து 13 கி.மீ தூரத்தில உள்ளது! தினம் அந்த கிராமத்து மக்கள் திருனெல்வேலி வந்து போவார்கள் கட்டபொம்மன் போக்குவரத்து கழகம் தான் அங்கு செல்ல்கிறது!

பாளையங்கோட்டை பள்ளிகள்,கல்லூரிகள் ,தவிர மக்களும் தங்கள் விளை பொருட்களான  காய்கறி போன்றவைகளையும் கொண்டு செல்வார்கள் !

பேருந்து முதலில் பாஞ்சாயத்து அலுவலகம் முன் நிற்கும்! அடுத்து அம்மன் கோயில்! கடைசியாக அரிசி மில் நிறுத்தம் ! அதேபோல் அரிசிமில்லிருந்து  புறப்படும்! 

அந்த பஞசாயத்து தலைவராக இருந்தவர் கொலை  செய்யப்படுகிறார்! அவர் மேல்சாதி! அதனால் கலவரம் வந்தது!பேருந்து சேவை நிறுத்தப்பட்டது!

பல முறையிட்டுக்குப் பிறகு மீண்டும் சேவை வந்தது! ஆனால் பேருந்து  
அரிசிமில் வராமல் பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்து புறப்பட ஆரம்பித்தது ! அரசி மில் பகுதியில் வாழ்ந்த மக்கள் சமார் இரண்டு கி.மீ நடந்துந்தான் பேருந்தை பிடிக்கவேண்டும் !

இதனை  மாற்றி அரிசிமில் வரை வர பலமுறை மனு கொடுத்தும்  பயனில்லை !

விவசாயப் பெருங்குடி மக்கள் அதனால் அவதிக்குள்ளாகினர் ! புறப்படும் இடம் மாற்றப்பட்டதற்கான காரணமும் அதிகாரிகள் சொல்லவில்லை!

திருநெல்வேலியில் வழக்கறிக்ணராக இருந்த வக்கீல் கிருஷ்ணன் பொதுநல வழக்கினை போட்டர்! உயர்  நீதி மன்றம் விசாரித்தது!கோப்புகளை வரவழைத்து பரிசிலித்தது!

அப்போதுதான் அந்த உண்மை தெரியவந்தது! "அரிசிமில் அருகில்தான் தலித் காலனி உள்ளது! பேருந்து அங்கிருந்து புறப்பட்டால் தலித் பயணிகள் இருக்கைகள்  முழவதும் அமர்ந்து கொள்கிறார்கள்! பஞ்சாயத்து  , அம்மன் கோவில் நிறுத்தத்திலிருந்து ஏறும் மேல்சாதி பயணிகள் நிற்க வேண்டி வருகிறது! அதனால் பேருந்து பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்து புறப்பட வேண்டும் என்று காவல் துறை ஆணையர் போக்குவரத்துக்கு கழகத்திற்கு உத்திரவிட்டிருந்தார்!

இந்த நவீன தீண்டாமையை அனுமதிக்க மறுத்த உயர் நீதி மன்றம் மறுபடியும் அரிசி ஆலையிலிருந்து புறப்பட வேண்டும் என்று உத்திரவிட்டது! 




வக்கீல் கிருஷ்ணன் வசுதேவ நல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ! நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் ஆவார்!
















2 comments:

”தளிர் சுரேஷ்” said...

அட எப்படியெல்லாம் வருகிறது தீண்டாமை! கொடுமை!

கரந்தை ஜெயக்குமார் said...

கொடுமை அய்யா. சுதந்திரம் பெற்று, ஆண்டுகள் அறுபதுக்கு மேல் கடந்தும், இதுதான் நமது நாட்டின் நிலை என்னும் போது, நெஞ்சம் பதறுகிறத அய்யா