Sunday, March 24, 2013

"தேநீர் " நாவலும் 

"ஊமை ஜனங்கள் " திரைப்படமும்...!!!


மதுரைமாவாட்ட  த.மு.எ.ச முதல்மாவட்டச்  செயலாளராக மறந்த மருத்துவர் தா.ச. ராசாமணி இருந்தார்! அவரால்செயல்படமுடியாத நிலையில் என்னை மாவட்ட செயலாளராக ஆக்கினார்கள் 1 என் பணியின் அழுத்தம் காரணமாக வையை செழியனை (ப.ரத்தினம்) அவர்களை போட்டார்கள்! 
அப்போது மதுரை மாவட்டம் என்பது மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து ராமேஸ்வரம் கடல் வரை வடக்கே சிங்கம்புணரியிலிருந்து தெற்கே சாத்தூர் வரை பரவியிருந்தது! மாவட்ட மாநாடு கமப்ம் நகரில்  நடநதது  காலம்  சென்ற கவிஞர் புத்தூரான் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டார்!

மாநாட்டில் முக்கியமான விஷயம் முதன்முதலாக இளையராஜா குழுவினர் இசை  நிகழ்ச்சி! ராஜா வரவில்லை! பாஸ்கரன் அவர்களும்,கங்கை அமரன் அவர்களும் வந்திருந்தார்கள்!  

நாங்கள் தங்கியிருந்த விடுதியில் இரவு பத்து மணிக்கு நண்பர்கள் என்னை தனியாக அழைத்துச் சென்றார்கள் ! நாங்கள் வேறொரு அறைக்குச்  சென்றோம்!அங்கு,காலம் சென்ற கவிஞர் செம்மலர் செல்வன்,கமேலாண்மை பொன்னுச்சாமி,,மேலூர் சொக்கர், டி ..செவ்வ்ராஜ்  இருந்தார்கள்! இயக்குனர் ஜெய பாரதி அவர்களும் இருந்தார்கள் 

ஏற்கனவே யுகசக்தி என்ற கம்பெனி ஆரம்பிக்கப்பட்டு தாகம் நாவல் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது! அதில் நான் நடித்துக்கொண்டிருந்தேன்! செல்வராஜின்  தேநிர் நாவல் படமாக்கப் போவதாகவும் என்னுடைய அபிப்பிராயத்தையும் கேட்டார்கள்  ஏற்கனவே ஒரு முயற்சியில் ஈடுபட்டிருப்பதால் அதனை முடித்த பிறகு தயாரிப்பில் ஈடுபடலாம் என்று என் கருத்தைச் சொன்னேன் 

இறுதியில் தேநீர் தயாரிப்பது என்றும் ஜெயபாரதி இயக்குவது என்றும் முடிவாகியது! நான் ஒதுங்கிக் கொண்டேன் 

பிரும்மாண்டமான முறையில் தயாரிக்க முன் வேலைகள் ஆரம்பமாகின ! கம்பெனி இயக்குனர்களாக செம்மலர் செல்வன்,மேலாண்மை தணிகை என்று செயல்பட்டனர் !

கதாநாயகனாக பாக்கியராஜ் ,கதாநாயகி பிரிதா விஜயகுமார் ,மற்றும் 
அறந்தை நாராயணன்,சமீபத்தில் காலமான பத்திரிகையாளார் செல்லப்பா,சரத்பாபு,கோபாலகிறுஷ்ணன் என்று முடிவாகியது இசை கங்கைஅமரன்! கண்ணதாசன்,தணிகை, செம்மலர் செல்வன்,சொக்கர் ஆகியோர் பாடல் எழுத தீர்மானிக்கப்பட்டது! பிரபஞசன் வசனம்!

பிரிட்டிஷ் காலத்து படம் என்பதால் ராஜாமுத்திரை போட்ட நாணயங்கள், உடைகள் , வீடுகள் என்று இயக்குனர் தேடி  அலைந்தார் !
 
செல்வராஜ் அவர்கள் பாடல்களடங்கிய காசெட் கொண்டுவந்து போட்டுக்கண்பித்தார்!

கே.முத்தையா அவர்களின் "செவ்வானம் "நாடகத்திற்காக தணிகை எழுதிய பாடல் அப்போது பிரபலமான ஒன்று!  

      கீழ்வானில் செம்பரிதிக் கோலம் --இது 
      கிழக்கெல்லாம்  சிவப்பாகும் காலம் 
      தாழ்வான மனித குலம் வெல்லும்--மக்கள் 
      தர்மத்தின் கை ஓங்கி  நில்லும் !

இந்தப்பாடலும் அதிலுண்டு ! 

சரியான நிதி ஏற்பாடு இல்லாமல் தயாரிப்புப்பணி சுணங்கியது ! ஒருகட்டத்தில்முழுமையாக பாக்கியராஜ் அவர்களிடம்விட்டு விடுவது என்று முடிவாகியது 

கதையில் மாற்றங்கள் வந்தன ! படம் பெயர் மாறியது! "ஊமை ஜனங்கள் " என்றாகியது ! 

படம் வெளியிடதேதியும் முடிவாகியது ! படம் பார்க்க ஆவலாயிருந்தோம் 1என் சொந்தபணிகாரணமாக ஒருவாரம் டெல்லி செல்லவேண்டியதாகியது! நொந்து கொண்டே போனேன்! 

ஒருவாரம் கழித்து வந்தேன்! ரயிலடியில் படம் எங்கு ஓடுகிறது என்று கேட்டேன் ! எந்த படம் என்றார்!" ஊமை ஜனங்கள் " என்றேன்!
"உத்திக்கிட்டுச்சு சார்! எடுத்துட்டாங்க!" என்றார்!

நல்ல காலம் ! விளம்பரத்திலோ படத்திலோ "தேநீர்" என்ற வார்த்தை பயன் படுத்தப் படவில்லை!

கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு ! உழக்கு வட்டமாக இருக்கும் !

"ஏல! உழக்கில கிழக்கு மேற்கு பாக்கலாமாடா " என்பார்கள் !

நாம் பார்த்தோம் !!!

.




2 comments:

S.Raman, Vellore said...

இப்படி ஒரு திரைப்படம் வந்ததாகவே தெரியவில்லை. இத்தனைக்கும் இந்த காலத்தில் மதுரையில் படித்துக் கொண்டிருந்தேன். வெளியாகும் திரைப்படங்களில் பெரும்பாலானவற்றை பார்த்துக் கொண்டிருந்த காலகட்டம்.

Unknown said...
This comment has been removed by the author.