Tuesday, January 22, 2013

"தர்ம யுத்தம் " தொடர்

முடிந்து விட்டதா.............?



ஒளியும் ஒலியும் இணந்த தொழில் நுணுக்கப் புரட்சியின் செல்லப்பிள்ளைதான் திரைப்படமாகும் ! அதன் சவலைபிள்ளைதான் தொலைக் காட்சி ஆகும்! இரண்டுக்கும் வித்தியாசம் உண்டா? உண்டு !வித்தியாசம் இல்லையா ? இல்லை ! 

அந்தக் காலத்தில் lawrence of Arebia என்று ஒரு படம் வந்தது.! அதில் பாலைவனத்தின் அடிவானத்தில் ஒரு கரும் புள்ளி தெரியும் ! நெருங்க நெருங்க அது குதிரையில் வரும் போர்வீரனாகதெரிய ஆரம்பிக்கும் ! longshot  என்பதை விட longestshot   என்று பாராட்டப்பட்ட காட்சியாகும்.!   தமிழில் ஆபாவாணன் தன படத்தில் அதே போன்று ஒரு காட்சியை  சித்தரித்து இருப்பார் .!தொலைக்காட்சியில்  இப்படி எல்லாம்  காட்சிப்படுத்தக்  கூடாது என்பது விதியாகும்1

20 x 30 திரையில் தெரியும் காட்சி 14" பெட்டியில் ரசிக்க முடியாது ! Midshot க்கு மேல் தொலைகாட்சியில் எடுக்கக் கூடாது   என்பது  விதி ! இந்திய அலைவரிசையில் வரும் தொடர்எதுவும் இந்த விதிகளை பின்பற்றுவது
கிடையாது !  இசை நிகழ்ச்சிகள்,நேரடி ஒளிபரப்பு என்று தொங்கும் காமிராக்களைவைத்து 
கண்களை குருடாக்குகிறார்கள் !

இதன் மத்தியில் தான் ஸ்டார் தொலைக்காட்சியில்"தர்ம யுத்தம் " தொடர் ஒளிபரப்பானது ! அழுகுணி தொடர்களுக்கு மத்தியில், அற்புதமான படப்பிடிப்பு, அருமையான இசையமைப்பு, கதையமைப்பு, .அலட்டலில்லாத, அழுத்தமான நடிப்பு என்று மனதை திருப்திப்படுத்திய நிகழ்ச்சி யாகும் அது!

அந்த தொடர் முடிந்து விட்டாலும் அந்த குழுவினர் தமிழ் தொலைக்காட்சியில் தங்கள் முத்திரையை பதித்துள்ளனர் என்பது உண்மையாகும் 1






1 comments:

kashyapan said...




முக்காலும் உண்மை தோழர் காஸ்யபன் அவர்களே
பிரியா தம்பியின் வசனத்தையும் சேர்த்துக் கொள்ளவும்.