Sunday, December 30, 2012

 2012ம் ஆண்டு பிரசுரமாகாத 

செய்திகள் சில ........!!


கொல்கத்தாவில்  பார்க் தெருவில் ஒரு கற்பழிப்பு நடந்தது . பத்திரிகையில் செய்தியாக வந்தது .
மேற்கு வாங்க முதலமைச்சர் இதற்கு பதில் சொன்னார் ." விலை மாது ஒருவருக்கும்,அவருடைய வாடிக்கையாளர் ஒருவருக்கும் பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தகறாரினை மார்க்சிஸ்டுகள் கற்பழிப்பு என்று கதைக்கிறார்கள் "என்றார்.

குத்து சண்டை வீரர் மேரி கோம் ஒலிம்பிக் போட்டியில் வென்றார். அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் (லண்டனில் ) கேட்டார்" மணிபூர் வீரர்களுக்காக மத்திய அரசு அனுப்பும் விளையாட்டு பொருட்களை
அதிகாரிகள் டெல்லியில் அமுக்கிவிட்டு, மணிப்பூரில் கள்ள  மார்க்கெட்டில் விற்கிறார்களா  ? என்று கேட்டார் . பின்னல் அமர்ந்திருந்த ஒருவர் "ஆமாம்! இனி ஒலிம்பிக்  போட்டிக்கு செல்லும் ,  நிர்வாகிகள் அதிகாரிகள் ஆகியோரின் எச்சில் தட்டுகளை வீரர்கள்   கழுவும் கேவலத்தையும் நிறுத்துவோம்" என்றார். அவர் விளையாட்டு அமைசகத்தின் சார்பில் வந்தவர்.

2ஜி  அலைக்கற்றை ஊழலில் சிறையிலிருந்தவர் பானட் என்ற அதிகாரி. இவர் இந்திய ஒலிம்பிக் கமிட்டிபோட்டியில்    வெற்றி பெற்றார். "அடுத்து நான்  சர்வ   தேச   ஒலிம்பிக் கமிட்டிக்கு  போட்டி இடுவேன். இந்தியாவை ஒதுக்கி வைத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியையே ஒதுக்கி வைப்பேன் " என்றார் . 

என்.டி . திவாரி என்பவர் மத்திய அமைச்சராக இருந்தார். உ.பி ,மற்றும் உத்தராஞசல் மாநிலத்தில் முதல் அமைசராக இருந்தார். ஆந்திராவின்
கவர்னராகவுமிருந்தார்.வயது.80 . மனுஷன் ஒரு மாதிரி. விடியோ எடுத்துட்டாணுக . கவர்னர் பதவியை ராஜினாமா  செய்தார்.அவர்மேல  டெல்லி வக்கீல் கேசு போட்டார். திவாரி தானென் தந்தை என்று. திவாரி மறுத்தார். நீதி மன்றம் டி என்.  எ பரிசோதனைக்கு உத்திரவிட்டது .பத்திரிகைல இதெல்லாம் வந்தது..ஒரு நிருபர் ஏன் பரிசோதனைக்கு மாட்டென்கரீங்க ? நுகேட்டார்.  "ஒரு ஆளுக்கு சரின்னேன அப்புறம் வர்றவனுக்கு என்ன பதில்சொல்ல ? என்று அவர் திருப்பிகேட்டது பத்திரிகைல வரவில்லை.


பரிசோதனை நடந்தது. திவாரி தான் டெல்லி வக்கீலோட உண்மையான தந்தை என்று தீர்ப்பு வந்தது. அந்த அம்மா காங்கிரஸ் கட்சியின் குட்டிதலவரின் மனைவி .

குடியரசுதலவர் பிரணாப் முகர்ஜியின் மகன் "தெள்ளுமணி" !பேரு  அபிஜித் முகர்ஜி . டெல்லியில் ஓடும் பஸ்ஸில் கற்பழிக்கப்பட்டு  வீசி  எறியப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு  பெண்கள் போராடினார்கள். :'இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் அழகாக இருந்தார்கள், நான் வாலிபனா இருந்த போது இப்படி அழகான பெண்கள் போராட
 வரூவதில்லை . எங்கப்பாவுக்கு என்னதான் அவசரமோ " என்றான் !
 பத்திரிகைகள் மூச்சுவிடவில்லை .


ஆதாரம் : டைம்ஸ் ஆப் இந்தியா ( 30 -12 -12 )









ஞ்சல் ஆகிய

3 comments:

hariharan said...

இப்போது செய்தித்தாட்கள் மறைத்தாலும் மறைக்க்கப்பட்ட செய்திகள் எல்லாம் சமூக வலைத்தள்த்தில் வந்துவிடுகின்ற்ன என்பது நல்ல் செய்தி. இன்னும் ம்றைக்கப்பட்ட செய்திகள் மானியங்கள் எத்தனையோ உள்ளன!

hariharan said...

வணக்கம் தோழரே,
நான் மார்க்கண்டேய கட்ஜு வ்லைத்தளத்தில் சில கட்டுரைகளை வாசித்தேன். எல்லா கட்டுரைகளிலும் அவர் மனித நேயம், மக்கள் ஒற்றுமை, அடித்தட்டு மக்கள் பற்றி கவலைப்படுகிறார். ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு பற்றிய அவரது கருத்து, குஜராத் தேர்தலில் மோடி வெற்றி பற்றிய அவரது கருத்து எல்லாம் இடதுசாரிகளோடு ஒத்துப் போகிறது. இந்தியாவின் வரலாறு என்பதை மக்களின் குடியேற்றத்தை விளக்கியுள்ளார். எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது! என்னவென்றால் சம்ஸ்கிருதம் மொழியை அறிவியல் மொழி என்கிறார், அதற்கு நிறைய ஆதாரத்தையும் கொடுக்கிறார். நீங்கள் அதை படித்துவிட்டு அதுகுறித்து ஒரு பதிவு மூலம் விளக்கினால் நன்றாக இருக்கும்.5% மட்டுமே மதம் மீதி 95 % கலை, இலக்கியம், தத்துவம், அறிவியல், கணிதம் இருகிறதாக சொல்கிறார்.
அந்த கட்டுரைகளை பாருங்கள்.

vasan said...

ஜ‌னாதிப‌தி ம‌க‌னது (மேற்கு வ‌ங்க‌ காங் எம்பி) ஆபாச‌ பேச்சுக்க‌ள், முன்ன‌னி ஆங்கில‌த் தொல‌காட்சிக‌ளின் விவாத்திற்கே வ‌ந்த‌து.
அவ‌ர்து ச‌கோத‌ரியே அத‌ற்காக‌ ம‌ன்னிப்புக் கேட்டார். இவரும் க‌டைசியில் ந‌ழுவினார். அப்பா இதற்கு ஒரு வ‌ரியும் பேச‌வில்லை.