Friday, July 06, 2012

Vaaththiyaar raaman...

வாத்தியார் ராமன் என்ற ...... முப்பது நாற்பது வருடமாவது இருக்கும்.. மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் மாநாடு மதுரையில் ஏற்பாடாகியிருந்தது.. மதுரையில் பி..எம் குமார் செயலாளராக இருந்தார்..மாநாட்டில் இ..எம்..எஸ் பங்கு பெறுகிறார். பிரும்ம்மாண்டமான ஏற்பாடுகள்..அப்போது பிரபலமாக இருந்த ஸ்டேஜ் பிரண்ட்ஸ் குழுவின் "தண்ணீர்தண்ணீர் "நாடகம் நாடக ஆசிரியர்கோமல்சுவாமினாதன் எனக்கு ஆப்த நண்பர்.. நாடக இயக்குனர்.. திரைப்பட இயக்குனர்.. த..மு..எ..ச..வின் மாநிலக்குழு உறுப்பினர் நாடகக்க குழுவினரைவரவேற்று அவர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்புஎனக்கு அவர்களைமதுரைரயில்நிலையத்திற்கு பின்புறமிருந்த நகராட்சி பயனியர்விடுதியில்;தங்கவைத்தோம்.. அருகில்"திருப்தி" விடுதியில் உணவுஏற்பாடு.. காலைசிற்றுண்டிமுடிந்ததும்அரங்கைப்பார்க்கவிரும்பினார்..குறைந்தது ஐயாயி ரம்பேராவதுவருவார்கள்.. மிகஉயரத்தில்அரங்கம்அமைக்கஏற்பாடாகியிருந்தது..தமுக்கம்மைதானத்தில்..லாரியில்வந்த லாரியில்வந்தநாடகசாமான்களைஎப்படிஎப்படிவைக்கவேண்டும்,, என்றுகோமல்சொல்லிக்கொண்டிருந்தார்..மணிஇரண்டுஆகப்போகிறது..சாப்பிடவேண்டும்..நேரமாகிறதுஎன்றுநான் கோமலைவிரட்டிக்கொண்டுஇருந்தேன்..செயலாளர்பி,,எம்..குமார்வந்தார்.. என்னத்தனியாக அழைத்தார்.."காஸ்யபன்! பெரியசிக்கல்வந்துவிட்டது""என்றர்.. :"என்னதோழர்"" என்றுகேட்டேன்.. " "ஒரதுயரச்செய்தி! வாத்தியார்ராமனுடையதாயார்இறந்துவிட்டார்.. என்னசெய்யலாம்.. இதனைஅவரிடம்சொல்லவேண்டுமேநிங்கதான்இதனைசமாளிக்கணும்" என்றார்..எனக்குகைகால் ஒடவில்லை.என்னசெய்ய?? யாரகலந்துஆலோசிக்க!! தென்மாவட்டங்களிலிருந்துஏராளமானதோழர்கள்வருவார்களே!!நடகத்தைரத்துசெய்யமுடியாதே!! மிகமுக்கியமான;பாத்திரமாச்சே!! மாற்று;ஏற்பாடுமுடியுமா!!யாரக்கலந்து.கொள்ள நேராகக்கோமலைஅடைந்தேன்.. சொன்னேன்".முடிவுஎடுக்கவேண்டியவர்ராமன்&அவரிடம்;விடுவோம்..என்றார்..கோமல்.. ராமன் வந்தார்.. அவரிடம் கூறினேன். ஒரு நிமிடம் யோசித்தார் கோமலைப் பார்த்தார்" கோமல் நாடகம் நடக்குது!.நான்தான் நடிக்கிறேன்! கலைதுறைக்குஜனங்கள்;தன்யாதாயி;தந்தை;எல்லாம்!! காஸ்யபன்! நேரா ரூ,,முக்கு போறோம்.. தாயில்லா! ஒருமுழுக்குப் போடவேண்டாமா!.வா ரும்"" என்றார்..குமாரும் நானும்விக்கித்துநின்றோம்..உடனடியாக காரில் அவரோடு சென்றேன் அறைக்கு சென்று குளித்தார்.. உடைமாற்றி விபூதி பூசிக்கொண்டார்" வயதானவர்..என்தம்பியிடம்;சொல்லியிருக்கிறேன்! அவன்காரியங்களைசெய்வான்..எனக்குகொடுப்பினை;இல்லை!" பேசவில்லை.குரல்தழுதழுத்தது! "பருப்புபாயசத்தோட;சாப்பிடனும்கிறதுசம்பிரதாயம்.. வாரும் அம்மாவுக்குஜிலேபி பிடிக்கும் சொல்லும்!!சாப்பாடோடசேத்தசொல்லும வாத்தியார் ராமன்நடிகர் மட்டுமல்ல .....

4 comments:

hariharan said...

முதல்ல குடும்பமா? ஜனங்களா? என்ற கேள்விக்கு ஜனங்கள் தான் என்று நிற்பவர்கள் தான் அசாதாரண மனிதர்கள். வாத்தியார் ராமன் என்பவரை இப்போது தான் கேள்விப்படுகிறேன். நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

அவரைப் பற்றி அறியாத தகவல்கள் .. தொடர வாழ்த்துக்கள் ! நன்றி சார் !

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மிக எளிமையால் வாழ்பவர்களின் பின்னால் மிக அசாதாரணமான நிகழ்வுகள் இருக்கும். ஆனாலும் அவையும் அவரைத் தெரிந்தவர்களால் சொல்லப்பட்டால் மட்டுமே உலகுக்குத் தெரியும்.

மிகவும் ஆடம்பரமான மனிதர்களின் பின்னால் மிகச் சாதாரணமான உளுத்துப்போன சம்பவங்கள் மட்டுமே இருக்கும்.சொல்லிக் கொள்ள எதுவும் பெரிதாக இருக்காது. ஆனாலும் அடிப்பொடிகளின் அளவுக்கதிகமான காற்றடிப்பால் உப்பிப் போய் பூதாகாரமாய் காட்சிதரும்.

இப்படி இருக்கிறது வரலாறின் பின்புலம் எப்போதும்.

ராமனுக்கு ஒரு சல்யூட்.பகிர்வுக்கு உங்களுக்கும்.

veligalukkuappaal said...

மனதை நெகிழச்செய்யும் சம்பவம். பழம்பெரும் கலைஞர்கள், குறிப்பாக நாடக நடிகர்கள் இப்படியான ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு வாழ்க்கையை நடத்தியதை பல நேரங்களில் படித்துள்ளேன். நாடகமேடையிலேயே உயிர்நீத்த தியாகி விஸ்வனாததாஸ்! அதே முருகன் வேடத்திலேயே அவரது இறுதி ஊர்வலம் நடந்ததாம்! தொடர்ந்து எழுதுங்கள்! உங்கள் பதிவுகள் வரலாற்றின் சுவடுகள்!...இக்பால்