Monday, June 25, 2012

குடியரசுத் தலைவர் .............

 குடியரசுத் தலைவர் .............

குடியரசுத்தலைவர் தேர்தல் நடக்கப் போகிறது. சங்மா    நினைத்து  பார்க்கமுடியாது.கலாம்    நினைக்கவே இல்லை என்று அறிவித்து விட்டார். இருந்தாலும் பத்திரிகைகள்  ஏதோ போட்டி இருப்பது போல்
எழதுகின்றன.

பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது போல் தோற்றம் . உண்மையில்முடிவு செய்தது நம்ம ஊர் முதலாளி மார்கள் !!  அவர் வந்தால் அவர்களுக்கு நல்லது செய்வார் என்பதால் அல்ல!

நிதி அமைச்சகத்தில் அவர் கிழித்தது போதும் என்பதுதான் காரணம்..வரி போடும் பொது எந்தத் தேதியிலிருந்து வரி போடவேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன் என்கிறார் முகர்ஜி .இவர்களோ பின் தேதியிட்டுத்தான் போடவேண்டும் என்கிறார்கள்.சட்டத்தில் வரி  எய்புக்கான ஓட்டைகளை அடை க்க நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் கருப்புப் பணத்தை கொண்டுவரவது இருக்கட்டும். உள்நாட்டில் அது உருவாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.  நிதி அமைச்சகத்திலிருந்து இந்த மனுஷனை தூக்க நோகாமல் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்டார்கள்.

அந்நிய முதலாளிமார்கள் முட்டைச்சொரிந்து கொண்டிருப்பார்களா! வோடாபோன் கம்பெனி விவகாரத்தில் பிரிட்டனும் ,நெதர்லாந்தும் பண்ணிய அழிச்சாட்டியம் உலகமறிந்தது

இரானோடு வர்த்தகம் கூடாது. சிலரை வியாபாரத்தில் அந்நிய முதலீட்டு ஆகியவற்றை அமல்படுத்த திருமதி கிளிண்டன் வந்தார்.

ஏர்செல்-மாக்சிஸ் இணைப்பு ,ஐரோ யுத்தவிமானம் வாங்குவது என்று பிரிட்டனும் மற்ற நாடுகளும் ஆலாய் பறக்கின்றன .

போபர்ஸ் பிரங்கி உழ்லில்  சிக்கிய குத்ரோசி யப்பிடிகமுடியவில்லை .
அவர் எங்கிருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று சி.பி.ஐ 
சொல்லிவிட்டது  பத்திரிகையில் மட்டும் அவரூடைய பெட்டி தினம் வருகிறது.

புதிய செய்தி ஒன்று வந்திருக்கிறது.பிரணாப் முகர்ஜிக்கு ரொம்பபிடித்த தகலைவர் டெங் சியோ பிங் என்ற செய்தி தான் அது..

சாமிகளா! எங்கள கொல்லாதீங்கடா!!

6 comments:

'பரிவை' சே.குமார் said...

'ஜன' அதிபதியா இருப்பாரா... ரப்பர் ஸ்டாம்ப் யாரா இருந்தா என்ன...

vasan said...

பிர‌னாப் அலுவ‌ல‌கத்தில் ப‌ப்பிள் க‌ம் ஒட்டினார்க‌ள்,
சோனியாவின் அடிமைக‌ளில், க‌வ‌னமாக‌ க‌ண்காணிக்க‌ப்
பட‌ வேண்டிய‌வ‌ராய் தான் த‌ன‌னைக் காட்டிக் கொண்டார்.
'அம்பானி ஆள்' என்ப‌தும் ஒரு நெருட‌லான‌ முடிச்சு.
எப்ப‌டியோ, ம‌ம்தா மேடம் புண்ணிய‌த்தில் குன்றுக்கு செல்லும் வ‌ழியில் ப‌யணிக்க‌த் தொட‌ங்கி விட்டார். நாடு பாத‌ள‌த்தை நோக்கி ந‌க‌ர்த்த‌ப்ப‌டுகிற‌து.

சிவகுமாரன் said...

இவ்வளவு பேசும் நீங்கள் (மார்க்சிஸ்ட்) பிரணாப்பை ஆதரிப்பது ஏன்? பழங்குடி இனத்தைச் சேர்ந்த சங்மாவை ஏன் ஆதரிக்கவில்லை? பாஜக ஆதரித்தால் கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பது தான் தங்கள் கொள்கையா?
சாக்கடையில் குளிச்சுக்கிட்டு 'அவன் மேல நாறுதுன்னு" நல்லா அரசியல் பண்றீங்க அய்யா.

kashyapan said...

சிவ குமரன் அவர்களே!சிறுவயதில் சேட்டைசெய்தால் என் தத்தா "நடையடி அடிகணம்ல உங்களை" என்பார். இரண்டுபேர் கையில புளியம்விளார கொடுத்து ஒருத்தன் வலது கால்ல நிக்காதல,நிக்காதலன்னு விளாசுவான்.இன்னொறுத்தன் இடதுகால்ல நடக்காதல நடக்காதலன்னு அடிப்பானாம். பிரணாப் வந்தாலும் சங்மா வந்தாலும் நீரும் நானும் நக்கித்தான் குடிக்கணும்.சரி! ஒதுங்கிருவம்னா அதுக்கும் சண்டைக்கு வருவீரு. ramaniceuvellore பிளாக்ல பிரகாஷ் காரத் விளக்கியிருக்கிறார்.என்ன விளக்கி என்ன பிரயோசனம்! மேயப்போற மாட்டுக்கு கொம்புல வைக்கல கட்டி அனுப்ப முடியுமாவே! அதுதான மேஞ்சுகிடணும்---காஸ்யபன்.