Monday, May 30, 2011

பாவலர் வரதராசன் ---என்ற பாடிப் பறந்த குயில்

பாவலர்வரதராஜன் --பாடிபறந்த குயில் ..........
அந்தக் குயில் தன் தம்பிகள் பாஸ்கர்,ராஜாசிங், அமர்சிங் என்ற மூன்ரு தம்பிகளை வளர்த்து தமிழ் திரைஉலகத்திற்கு தந்தது.
பாவலரோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டபொது அவருடைய தம்பிகள் சிறகு முளைத்து சென்னை சென்றிருந்தனர். அப்பொது நன் மதுரை பீபிள்ஸ் த்யெட்டர்ஸ் குழுவில் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். மதுரை அரசமரம் சந்தில் இருந்த பொதுத்தோழிலாளர் சங்கத்தில் தான் இரவு நாடக ஒத்திகை நடக்கும். இரவு வெகுநேரம் கழித்து மூன்று தொழர்களுடன் ஆர்மெனியப்பெட்டி,தபெலா ஆகியவற்றொடு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு படுக்க வருவார்.ஒடிசலான தேகம்,விரிந்த கண்கள், கூர்மையான நாசி .சட்டையின் மெல் ஒரு துண்டு .
1965ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு பொராட்டத்தில் உயிரிழந்த ராஜெந்திரன் தாயார் தன் மகனை இழந்த சொகத்தை வர்ணித்து அவர் பாட்டினால் கண்ணீர் சிந்தாதவர்கள் இருக்கமுடியாது.புதுப் புது பாடல்களை உருவாக்கி பாடுவார்."ரூப் தேரா மஸ்தானா " என்ற பாட்டின் மெட்டில் அவர் பொட்ட பாடல்மிகவும்பிரபலம் .
"லூப் தரான் சரீதானா-
மாட்டலைனா விடுறானா "
"ஆதித்தனாரும் பொதித்ததென்ன
போதித்த பின்னே சாதித்ததென்ன "
என்று பாடுவார்.
வறுமை அவரை பாடாய் படுத்தியது. பழக்கவழக்கங்கள் மாறின. இந்த மாற்றங்களை கட்சி ஏற்கவில்லை. நிகழ்ச்சிகள் இல்லை .அவருடைய ஆர்மெனியப் பெட்டியை
எங்கள் குழுவுக்கு கொடுத்தார். நாங்கள் கொஞ்சம் பணம் கொடுத்தொம்.
பண்ணைப்புரத்திலோ, கொடைக்கானலிலோ நிலத்தகாறாரில் சிக்கியுள்ளதாகவும் கே.டி. கே அவருக்காக வாதாடுவதாகவும் "ஜனசக்தியில் " செய்தி வந்தது. அவரை q பிரான்ச்விசாரிப்பதாக வதந்தி வந்தது. தி .மு.க. அவரை
மிரட்டியது. வேறு வழியில்லாமல் தி.மு.க.வில் சேர்ந்தார்.
1977ம் ஆண்டு .மார்க்ஸிஸ்டு கட்சியின் நாளேடான "தீக்கதிர்" பிரும்மாண்டமான கட்டிடம்கட்டி திறப்பு விழ நடத்த இருந்தது.
தி.மு.க.வில் செர்ந்திருந்த பாவலரின் முதல் நிகழ்ச்சி. மதுரை மில்லுக்கு எதிராக மேடை அமைத்திருந்தார்கள்.பிரும்மாண்டமான கூட்டம் .மார்க்ஸிஸ்ட் தொண்டர்கள் தான் அதிகம். பாவலர் பாடினார்."நீ இருக்கும்போது வரவில்லயே ---அண்ணா ' என்றபாடல் ஊனை உருக்கிவிட்டது.
"தீக்கதிர் " புதிய கட்டிடத் திறப்பு விழா. மதுரை ஜெயில் ரொடு வழியாக புறவழிச்சாலையை அடைந்து ஊர்வலம் செல்கிறது. அரசரடி திருப்பம் தாண்டி பள்ளிவாசல் அருகே ஊர்வலத்தில் தொழர்கள் "கசமுச"என்று பெசிக்கொண்டார்கள். விசாரித்தேன். பார்வையாளரகள் கூட்டத்தில் பாவலர் நின்று பார்த்துக்கொண்டிருப்பதாய் சொன்னார்கள். விலகி பார்வையாளர்கள் பக்கம் சென்றேன் .தலையில் துண்டை போட்டு முகம் மறைத்துக்கொண்டு செக்கச்சிவந்த கண்களொடு பரவசமாக பாவலர் பார்த்துக்கொண்டு நின்றார். என்னைப் பார்த்ததும் கூட்டத்துக்குள் மறைந்துவிட்டார்.
அது தான் நான் அவரைக்கடைசியாகப் பார்த்தது. .

Sunday, May 29, 2011

majrooh sultanpuri......

மஞ்ரு சுல்தன்புரி ......
1945ம் ஆண்டிலிருந்து2000 வரை இந்தி திரைப்படத்துறையை தன் கவிதை வரிகளால் அழகு படுத்தியவர்.அஸ்ரர் உல் ஹாஸன் கான் என்ற மஞ்ரு சுல்தான் புரி என்ற உருதுக்கவிஞர் ஆவார் .
1918ம் ஆண்டில் பிறந்த வர். உ.பி.யில் உள்ள சுல்தான் புரியில் பிறந்தவர் ஆங்கில
கல்வி படிக்க வசதியில்லாததால் அரபி மொழியும்,பாரசீகமும்கற்று புலமை பெற்றார் .
1936ம் ஆண்டு கான்பூரில் காங்கிரஸ் மாநாடு நடந்தது, அப்பொதுதான் இந்தியமுற்பொக்கு எழுத்தாளர் சங்கமும் உருவானது. (நேருவின் ஆதரவோடு.) .இ.எம்.எஸ்,முன்ஷி பிரேம்சந்த் ,மூல்க் ராஜ் ஆனந்த் ஆகியொர் கலந்து கொண்டனர். இளம் மஞ்ரு வும் சென்றிருந்தார். இடதுசாரிகளுக்கும் அவருக்குமானதொடர்பு ஆரம்பமானது. கவியரங்கங்களில் அவருடைய கவிதைகள் புகழ் பெற்றன . மும்பைக்கு அழைத்தபொது அங்கு கவி அரங்கத்தில் கலந்து கொண்டார். கர்தார் என்ற இடதுசாரி இயக்குனர் அவர் தயாரிக்கும் ஷாஜகான் படத்திற்கு பாட்டெழுதச்சொன்னார். இசைஅமைப்பு நவுஷாத். இது 1945ல் நடந்தது.
கவி அரங்கங்களில் திவிர இடதுசார் கருத்துக்களை பாடுவார் .கஜல் பாடினால் கூட அது அரசை எதிர்த்துப்பாடியதாகவே இருக்கும் .மற்ற இடது சாரி கலைஞர்களான பால்ராஜ்
சஹானி ஆகியொரோடு கைது செய்யப்பட்டார். மன்னிப்பு கெட்கச்சொன்னார்கள். மறுத்துவிட்டார். இரண்டு ஆண்டுகள் சிறை என்று தீர்ப்புவந்தது. குடும்பம் தத்தளித்தது .அவர் சிறையில் இருக்கும் போதுதான் அவருடைய முதல் மகள் பிறந்தாள் .ராஜ்கபுர் அவரை சந்தித்தார். 1000ரூ கொடுத்து ஒரு கவிதை கேட்டார்."இவர்கள் இந்த மண்ணையும் விற்றுவிடுவார்கள் ஒருநாள் " (ஏக் தின் பிகே ஜாயெகா மட்டி கி மோல் ) என்று எழுதிக் கொடுத்தார்.
கிட்டத்தட்ட 8000 பாடல்களை எழுதியுள்ள அவர் 2000ம் ஆண்டு மே மாதம்24ம் தேதி மாரடைப்பு எற்பட்டு காலமானார்.நவுஷாத்திலிருந்து ரஹமான்வரை அவர் பாடல் எழுதியுள்ளார். கே.எல் .சைகால் முதல் உதித்நாராயண் வரை அவருடையபாடல்களைப் பாடியுள்ளனர்.

Thursday, May 26, 2011

arrested.....

அன்றும் கைது நடந்தது.....
1996ம் ஆண்டு.டிசம்பர் மாதம்.7ம் தேதி இரவு-8ம் தேதி அதிகாலை.போயஸ் தோட்டத்திற்குசெல்லும் பாதைகளில் காலை நான்கு மணியிலிருந்தே பொலீசார் நிற்கிறார்கள். ஏற்கனவே அவருடைய ஆதரவு அரசியல் பிரமுகர்களை தடுப்பு காவல் சட்டத்தில் உள்ளே தள்ளியாகிவிட்டது.7மணிக்கு பொலீசார் வீட்டினுள் சென்று செல்வி.ஜெயலலிதாவிடம் கூறுகிறார்கள். பூஜையில் இருக்கிறேன்.பத்து நிமிடத்தில் வருகிறேன் என்கிறார்.
பொலிசார் கொண்டுவந்த வானில் ஏறுகிறார் அருகில் நின்ற பத்திரிகையாளரிடம்"இது பழிவாங்கும் செயல்" என்றுமட்டும் கூறுகிறார்"(ஐயோ! அடிக்கிறாங்க! கொல்றாங்களே! என்று கதறவில்லை).நிதிபதியின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.அவர் 15நாள் காவலில் வைக்க உத்திரவிடுகிறார்.
அவரைப்பார்க்க அவருடைய தாய் விமானத்தில் வரவில்லை. இரண்டு நாள் கழித்து அவருடைய தந்தை வரவில்லை.ஏனன்றால் அவர்கள் உயிரோடு இல்லை.அவர் திருமணமாகாதவர் அதனால் அவருடையகணவர் வர வில்லை.நிர்க்கதியான அவருக்கு நெஞ்சிலே எம்.ஜி.ஆர் பனியனோடு வாழும் அப்பாவிமக்கள்தான் ஆதரவு அளித்தனர்.
அவர் மிது 8கோடி ஊழல் வழக்கு. கிட்டத்தட்ட 48000 பஞ்சாயத்துகளுக்கு தொலைகாட்சி பெட்டி வாங்க கொள்கைரீதியாக ஒப்புதல் அளித்தார். அதனை செல்வகணபதி என்ற அமைச்சர்.நிறைவெற்றினார்.(இப்பொது செல்வகணபதி எங்கிருக்கிறார்)
(ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ராகவன் அவர்கள் கூறினார்."தார்மீக அடிப்படையில் சரியான் நேரத்தில் சரியான ஆலோசனை கூற ஜெயலலிதாவுக்கு யாருமே இல்லதது துரதிர்ஷ்டம்தான்" என்றார்)

Wednesday, May 25, 2011

girls shine in H.S.C

அவள்குதித்துகொண்டுவந்தாள்."அக்கா! நான் பாஸ்".
"எவ்வளவுடீ?"
"1117"
"என்ன செய்யப்போற?"
"ம்..லண்டன் போப்போறென்'
"கொன்னுருவேன்"
"பின்ன ஏன் கேக்க"
'நம்ம ஒண்ணு நினைக்கோம்"
"ஆத்தா வேற நினைக்கு"
"என்ன நினைக்கு?"
"மில்லுக்கு போ.. ங்கா"
அக்கா என்று அழைக்கப்பட்ட பக்கத்து வீட்டு அக்கா அவள் அருகில் வந்தாள்.ஆதுரமாக அவள் கை களைப் பற்றிக் கொண்டாள்."நீ என்னடி செய்யப்பொற?"
அவள் அக்காவை கட்டிக் கொண்டாள்.அக்காவின் காதருகில் சொன்னாள்."ஆத்தா....முக்கியமக்கா...அவதான் எல்லாம்.."
அக்கா அவளை விட்டு விலகினாள்.அக்காவின் கண்களில் வழிந்த கண்ணீரை இவள் துடைத்தாள்

Thursday, May 12, 2011

அவர் புத்திசாலி......வாயைத்திறக்க மாட்டார்.....

அவர் புத்திசாலி...வாயைத்திறக்கமாட்டார்.....
வெள்ளிக்கிழமை காலை தெரிந்துவிடும்.என்று நினத்தோம். ஆனால் எண்ணும் முறைமையில் சில மாற்றங்கள் செய்திருப்பதால் மதியத்திற்கு மேல்தான் தேர்தல் முடிவுகள் தெரியவரும் என்று அறிவித்துள்ளார்கள்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மாநில தெர்தல் அதிகாரியைச்சந்தித்து எண்ணும்
பொது நடைபெறலாம் என்று கருதப்படும் சில தில்லிமுல்லுகள் பற்றி கூறிியிருக்கிறார்.2009ல் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் நின்றார்.அவரை எதிர்த்து ராஜ கண்ணப்பன்(அ.தி.மு.க) நின்றார். என்னிக்கை முடிந்து ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் இருந்தனர். திடிரென்று சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.120 வது வாக்குச்சாவடியில் ராஜ கண்ணப்பனுக்கு 196 வாக்குகள் என்று பதிவு இயந்திரம் காட்டியுள்ளது. ப.சிதம்பரத்திற்கு 84. அதன் இறுதியாக கம்ப்யூட்டரில் பதிவு செய் யும்போது ராஜ கண்ணப்பனுக்கு 84 என்றும் ப.சிதம்பரத்திற்கு 196 என்றும் பதிவாகியுள்ளது.
இப்படி ஆலங்குடி தொகுதியில் மாற்றி பதிவு செய்துள்ளார்கள் என்று வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சிவகங்கை ஃபார்முலாவை இப்பொது கையாள முடிவு செய்துள்ளதாக நம்பகமாக தெரியவ்ந்துள்ளது என்று ரங்கராஜன் மாநில தேர்தல் அதிிகாரி பிரவீன் குமாரிடம் கூறியுள்ளார்.இது பற்றி அ.தி.மு.க பொதுச்செயலாளர் செல்வி. ஜெயலலிதா அவர்களும் தேர்தல் கமிஷன் தலைவர் குரேஷிக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளார். நேற்று ஜெயா தொலைக்காட்சியில் ரவி பெர்னாடும் , பழ.கருப்பையா அவர்களும் இதுப்ற்றிி விவாதித்ததையும் பார்த்தேன்.. பாவம்! பழ.கருப்பையா "இப்படி ஒரு வெற்றியா! நாட்டின் உள் துறை அமைச்சர் செய்யலாமா? உலக நாடுகள் நம்மைப்ற்றி என்னநினைக்கும்" என்று ஆதங்கப்பட்டார்.
இதனைப் போய் இடுகை யிடவேண்டுமா? என்று சிலர் நினைக்கலாம். சிகாகோ தமிழனும், சிங்கப்புர் தமிழனும் தெரிந்து கொள்ள இது ஒன்று தானே வழி!
அமைச்சர் கோபப்படமாட்டாரா! வழக்குப் போடமாட்டாரா? என்று கெட்கலாம்.
அவர் புத்திசாலி...வாயைத்திறக்க மாட்டார்....

Tuesday, May 10, 2011

அல் கொய்தாவை உருவாக்கியது யார்?......

அல்கொய்தாவை உருவக்கியது யார்?.....
"அல்கொய்தாவை உருவாக்கியது யார்?பின் லெடன் என்ற மாயத்தை கொண்டுவந்ததுயார்?" என்று அவர் உரத்தகுரலில் கேட்டார்.கேட்டவர் பெயர் ரியாஜ் கிலானி. பாகிஸ்தானின் பிரதமர் .கேட்ட இடம் பகிஸ்தானின் நாடாளுமன்றத்தில்.
பகிஸ்தானின் தலைநகரம் இஸ்லாமாபாத்திலிருந்து எண்பது கி.மீட்டரி இருக்கிறது அபொதாபாத். அங்கு தான் பாகிஸ்தன் ராணுவத்தின் பயிற்சி பள்ளி இருக்கிறது. அதன் அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்திருக்கிறான் பின் லேடன். அமெரிக்க பாகிஸ்தான் வான் எல்லையைமீறி புகுந்து அவனைக் கொன்று சடலத்தை கருமாதி செய்து கடலில் எறிந்துவிட்டது.
நாடாளுமன்றத்தில் உருப்பினர்கள் ராணுவத்தையும், உளவுத்துறையையும் கண்டனம்செய்யும் போது பிரதமர் கிலானி தலயிட்டு பெசினார். "அவர்களுடைய தவறான கொள்கைகளாலும்,நடவடிக்கை களாலும் உருவாகும் விளைவுகளுக்கு பாகிஸ்தான் எப்படி பொருபேர்கமுடியும்" என்றார்
அதொடு அவர் நிற்கவில்லை சில ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பான பனிப்போர் பற்றிய தொடர் ஒன்றையும் சுட்டிகாட்டினார்.அதில் அமெரிக்க அதிகாரிகள் ஆப்கன் நாட்டிலிருந்து மற்ற அரபு நாடுகளில் பணியாற்றுபவர்களிடமும் முஜாகிதீங்களிடமும் பெசியதையும் குறிப்பிட்டார்."நண்பர்களே! உங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள். மசூதிகளுக்குச் செல்லுங்கள்.உங்கள் மதத்திற்கு ஆபத்து. அந்தப் புனிதப்போரில் கலந்து கோள்ளுங்கள்" என்று அல்கொய்தாவுக்கு ஆள்செர்த்ததையும் கூறினார்.பின் லேடன் கொல்லப்பட்டதை"நிதி வென்றது"என்று அமெரிக ஜனாதிபதி அறிவித்தார். ' "அரபு மக்களுக்கு நீதி வேண்டும்"என்ற கேள்வியோடு தான் பின் லேடன் ஆட்களைச் செர்த்தான்.அவன் மறந்துவிட்டான். அவன் ஈழுப்பிய கேள்விமரையவில்லை." என்றார் கிலானி.

Saturday, May 07, 2011

ரத்தம் தண்ணீரைவிட அடர்த்தியனது.....

ரத்தம் தண்ணீரைவிட அடர்த்தியானது.....
" தீக்கதிர்" பத்திரிகையின் ஆசிரியராக தற்பொது பணியாற்று பவர் தோழர் வீ பரமெஸ்வரன் படிக்கும் காலத்திலேயே மாணவர் அமைப்பைக் கட்டமைபதில் ஈடுபாடு கொன்டிருந்தார்.படிப்பில் கெட்டிக்காரர். படு சேட்டைகாரரும் கூட..
திருச்சி நெஷனல் கல்லுரியில் தான் படித்தார். S.F.I ன் முன்னணி செயல் வீரர். திruச்சியில் ஒரு கல்லூரிப் பெராசிரியர் விடைத்தாள்களைத் திruத்துவதற்கு மாணவர்களிடம் பணம் வாங்குவார் . பணம் கொடுக்காத மாணவர்களைப் "பெயில்" ஆக்கிவிடுவார். பிரச்சினை S.F.I யிடம் வந்தது.வி.பி திட்டம் போட்டார். ஒரு மாணவனை செட்டப் செய்தார். லஞ்ச ஒழிப்பு துறைக்கும் தகவல் சொன்னார். இருவருமாக செர்ந்து அந்த பெராசிரியரை trap செய்து கைது செய்ய வைத்தனர்.
திருச்சியில் தோழர் அனந்தன் நம்பியாரின் தலைமையில் . பொன்மலை ரயில்வே ஊழியர் சங்கத்தில் செயல்பட ஆரம்பித்தார். அதன் பத்திரிகையான "தொழில் அரசு" இதழின் ஆசிரியராக பணியாற்றினார். தூத்துக்குடியி நடந்த ரயில்தொழிலாளர் கூட்டதிற்கு சென்றிருந்தார். கூட்டம் முடிந்து தொழிர்சங்க அலுவலகத்தில் படுத்திருந்தபொது."அவசரநிலைகாலம் " அறிவிக்கப்பட "கொழியை" அமுக்குவது போல போலீஸ் கைது செய்தது.M.I.S.A. வில் மிக இளம் வயதில் சென்றவர்களில் வி.பி யும் ஒருவர்.
அதன் பிறகு தான் தீக்கதிரில் சேர்ந்தார். சிறந்த பெச்சாளர். வி.பரமெஸ்வரன், வடலூர் சிதம்பரம், திருமங்கலம் ராமச்சந்திரன் ஆகியொர் அன்று கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள். அவரோடு செயல் படும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
சென்னை ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் செரியன் புகழ் பெற்ற இதய சிகிச்சை நிபுணர். ஒருமுறை மதுரயில் நடந்த மருத்துவ முகாமுக்கு வந்திருந்தார். "காஸ்யபன்! வரீங்களா! நாமும் போய் "செக்" பண்ணிக்கலாம்" என்றார் வி.பி. நாங்கள் இருவரும் சென்றோம். எல்லாம்முடிந்து கிளம்பும் போது உதவியாளர் ஒருவர் "வி.பி அவர்களை டாக்டர் ராஜன் பார்க்க விரும்புவதாக"க் கூறினார்.
டாக்டர் ராஜன் மிகச்சிறந்த இதய மருத்துவர். டாக்டர் செரியனுக்கு அடுத்தபடியாக புகழ் பெற்றவர். நங்கள் இருவரும் அவருடைய அறைக்குள்நுழைந்தோம். டாக்டர் எழுந்து இருகைகூப்பி எங்களை வரவேற்றார். "ஐயா! உங்களுக்கு என்னை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் உங்களை அறிவேன் என்பெயர் ராஜன். சுத்ந்திரப் பொராட்டத்தின் போது சிறையில் போலிஸாரல் சுட்டுக்கொல்லப்பட்ட ரயில் தொழிற்சங்க் தலைவர் பரமெஸ்வரனின் பேரன். உங்களைப் பார்த்ததில் எனக்கு எந்ததவைப் பார்த்த மாதிரி உணர்வு ஏற்படுகிறது. என்னுடைய "கார்டு" இது. எப்போது தெவப்பட்டாலும் உதவக் காத்திருக்கிறேன். என் பணி காரணமாக நேரிடையாக செயல் பட முடியவில்லை" என்றார்.
விடை பெற்று வெளியே வந்தோம். இருவருமே பேசிக் கொள்ளவைல்லை
ரத்தம் தண்ணிரைவிட அடர்த்தியானது !
Blood is thicker than water !

Friday, May 06, 2011

Nokia என்றால் தெரியும்.....

Nokia என்றால் தெரியும்.....
Nokia என்றால் நம்மில் பலருக்குத் தெரியும்.E-kiaஎன்றால் தெரியுமா? E-kia என்பது அமெரிக்க ராணுவத்தின் குறியீட்டுச்சொல்.E- kia என்றல் enemy-killed in action. பின் -லேடன் கொல்லப்பட்டதும் வாஷிங்க்டனில் உள்ள ஒபமாவுக்கு " Gerinomo E-kia" என்று செய்தி வந்தது
பின்-லேடனின் மரணத்திற்காக நாம் துக்கம் அனுசரீக்க வேண்டாம் அமெரிக்காவுடனான ரணுவக். கூட்டு என்பது அதன் மரியாதையை குலைத்து,முதுகில் குத்திவிடக்கூடியது என்பதை உலகிற்கு வெட்டவெளிசமாக்கிய ஒன்றாகும் இதில் பாகிஸ்தனும் சரி, அமெரிக்காவும் சரி துரோகமிழைப்பதில் சளைக்கவில்லை.
இதற்கானவித்து இந்தியா பாகிஸ்தன் உருவான போதே போட்டாயிற்று. அன்றய இந்தியா அமெரிக்காவின் பூட்ஸ் கால்களை நக்க மறுத்துவிட்டது.பாகிஸ்தனை தன்னூடைய கூட்டளியாக அமெரிக்கா அறிவித்துக் கொண்டது.பனிப்போர் காலத்திலிருந்தே அமெரிக்க தன்னுடைய ரத்தவெறியை மறைத்துக் கொண்டதில்லை.தன்னுடைய ஈவு இரக்கமற்ற அடாவடிதனத்தின் மூலம் லட்சகணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளது.
வியட்னாமில் அமெரிக்கனுக்கு என்ன வேலை? அங்கு அவன் கிழித்தது என்ன?ஈராக்கில் செய்த அட்டூழியம்...?இஸ்ரேல் முளம் பாலஸ்தீனத்தில் நடத்திய கொடுமைகள்...?பாவம்.... அப்பாவி அமெரிக்க மக்கள்...அவர்களுடைய மனநிலையையே சுயநலம் சார்ந்தாக மாற்றி விட்டார்கள் அவர்களுடைய ரத்தம் சிந்தவில்லை என்றால் அமெரிக்க மக்கள் மற் ற நாட்டவர்கள் கொன்ரு குவிக்கப்படுவதை பற்றி கவலைப்படமாட்டார்கள் என்பது. வரலாறு. . வில்லியம் காலி என்பவன் " மைலே"என்ற வியட்நம் கிரமத்து மக்களை அங்குள்ள ஆடு,மாடு,குழந்தைகள், பெண்கள் என்று பார்க்காமல் கொன்று குவித்தான். அவர்கள் வட வியட்நாம் கொரில்லக்களுக்கு பதுகாப்பு அளிப்பதாக அவன் நினைத்ததால்... அமெரிக மக்கள் அவனை ஒரு நாயகனாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.சர்வதேச அளவில் ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக வில்லியம் காலே ராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான்..
அ.மெரிக்கவை எதிர்க்கும் எந்த தலைவனையும் C.I.A விட்டு வைக்காது.பின் லேடனைக் கொன்றதிலும் பங்கு உண்டு.
.. பின்லேடன் பெயரை "கெரினொமோ "என்று சங்கேத வார்த்தையில் குறிப்பிட்டுள்ளனர் .
ஸ்பானியர்களையும். ஐக்கிய அமெரிக்க நாட்டவர்களையும் விரட்டி தன் சிவப்பிந்திய மக்களுக்கு விடுதலை வேண்டும் என்று பொராடிய மாவீரனுடைய பெயராகும் அது. அது பற்றி தனியாக ஒரு இடுகை போடுவேன்..

Sunday, May 01, 2011

அந்தப் பொன்மலை தீரர்கள்......

பொன்மலை தீரர்கள்....
1946ம் ஆண்டு நான்முதன் முதலாக நாகபுரி வந்தென். ஸ்ரீவில்லிபுத்துரிலிருந்து சென்வரை S.I.R ரயிலில் வந்தோம்.அதன் பின்னர் சென்னையிலிருந்து M.S.M/B.N.R. நாகபுரி வந்தொம். எல்லா ரயில்களுமே தனித்தனி பிரிட்டிஷ் முதலாளிகளுக்குச் சொந்தமானது.
1946ம் ஆண்டு நேருவின் தலைமையில் இடைக்கால அமைச்சரவை பதவியேற்றது.தமிழ்நாட்டைச்செர்ந்த என்.கொபலசாமி அய்யங்கார் ரயில்வே அமைச்சரானார். பிரிட்டிஷ் முதலாளிகளிடமிருந்து ரயிலைப்பிடுங்கி நாட்டுடமையாக்கினார். உலகமே வியக்கும் பிரும்மாண்டமான இந்திய ரயிவே உருவானது.
தென் இந்திய ரயில்வே(S.I.R) யின் வொர்க்ஷ்ப் நகபட்டினத்தில் இருந்தது.அதனை திருச்சி பொன்மலைக்கு அப்போதுதான் கொண்டுவந்தார்கள். அங்குதான் தென் இந்திய ரயிவே தொழிலாளர் சங்கம் உதயமானது. அதன் தலைவர்களாக எஸ். பரமசிவம், எம்.கல்யாணசுந்தரம், அனந்தன் நம்பியார் ஆகியொர் செயல்பட்டனர்.
பிரிட்டிஷ் அரசு ,கல்யாணசுந்தரத்தையும், பரம்சிவத்தயும் கைது செய்து சிறையில் அடைத்தது. அனந்தன் நம்பியார் சங்கத்தைக் கவனித்துக் கொண்டார்.. பிரிட்டிஷ் அரசு சிறைஇருக்கும்போதே பரமசிவத்தைச்சுட்டுக்கொன்றது.
இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்க முடிவு செய்யப்பட்டதும் இந்த சமயத்தில் தான். இந்திய சுதந்திரம் என்பது சுகப் பிரசவமல்ல. ஆயிரம் ஆயிரம் இந்து,முஸ்லீம், சீக்கிய தாய்மார்களின் கர்பப்பை கிழிக்கப்பட்டு பிறந்ததாகும். மதக்கலவரம் இரண்டுபக்கமும் மூண்டது. பாகிஸ்தானில்ல இந்துக்களும் சீக்கியர்களும் விரட்டப்பட்டனர். இந்தியப்பகுதியிலிருந்து முஸ்லீம்கள் விரட்டப்பட்டனர்.
இரண்டு பகுதியிலும் சிக்கிய அகதிகளை பாகிஸ்தானுக்கோ,இந்தியாவுக்கோ அனுப்ப ரயிலை ஒட்டமுடியவில்லை.ரயில் ஊழியர்கள் வெட்டிச்சாய்க்கப்பட்டனர். மராட்டியம்,உபி,பஞ்சாப், ம.பி குஜராத் பகுதியில் நடக்கும்கலவரங்களால் அவர்களை அனுப்ப முடியவில்லை.
நேரு கவலைப் பட்டார். அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசோடு ஆரம்பகாலத்திலிருந்தே தொடர்ப்பு கொண்டிருந்த வி.வி.கிரியைக் கலந்து ஆளொசித்தார்..ரயிலை ஓட்ட டிரௌவர்கள் வேண்டூம்.அவர்கள் வடநாட்டவர்களாக இருக்கக் கூடாது.தென் பகுதியிலிருந்து அனுப்பப் படவேண்டும் என்று முடிவாகியது.
வி.கிரி , பொன்மலைத்தொழர் அனந்தன் நம்பியாரைபேச. நம்பியார் தொழிலாளளை அழைதுப் பெசினார்."தொழர்களே! பணி ஆபத்தானது. ஆயிரம் ஆயிரம் மக்களின் உயிரைக் காக்கும் பணி. இதில் பணியாற்றும் தொழர்களின் உயிருக்கு உத்திரவாதம் கொடுக்க முடியாத நிலை." என்றார்.
அந்தப் புண்ணிய பூமியின் மைந்தர்கள் பதிமுன்று பெர் புரப்பட்டனர் அவர்களின் பெயர் எனக்குத்தெரியாது. ஒர்வர் மதுரையச்செர்ந்த நாராயணசாமி நாயுடு என்று கெள்விப்பட்டிருக் கிறேன். பெயர் .....
இன்றும் "வைகை" யில் செல்லும்பொது திருச்சி அருகில் அந்த மஞ்சள் பலகையில் "பொன்மலை" என்ற கருத்த எழுத்தை பார்க்கும் போது நெஞ்சம்விம்ம கைகளை குவிப்பேன்.