Tuesday, May 10, 2011

அல் கொய்தாவை உருவாக்கியது யார்?......

அல்கொய்தாவை உருவக்கியது யார்?.....
"அல்கொய்தாவை உருவாக்கியது யார்?பின் லெடன் என்ற மாயத்தை கொண்டுவந்ததுயார்?" என்று அவர் உரத்தகுரலில் கேட்டார்.கேட்டவர் பெயர் ரியாஜ் கிலானி. பாகிஸ்தானின் பிரதமர் .கேட்ட இடம் பகிஸ்தானின் நாடாளுமன்றத்தில்.
பகிஸ்தானின் தலைநகரம் இஸ்லாமாபாத்திலிருந்து எண்பது கி.மீட்டரி இருக்கிறது அபொதாபாத். அங்கு தான் பாகிஸ்தன் ராணுவத்தின் பயிற்சி பள்ளி இருக்கிறது. அதன் அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்திருக்கிறான் பின் லேடன். அமெரிக்க பாகிஸ்தான் வான் எல்லையைமீறி புகுந்து அவனைக் கொன்று சடலத்தை கருமாதி செய்து கடலில் எறிந்துவிட்டது.
நாடாளுமன்றத்தில் உருப்பினர்கள் ராணுவத்தையும், உளவுத்துறையையும் கண்டனம்செய்யும் போது பிரதமர் கிலானி தலயிட்டு பெசினார். "அவர்களுடைய தவறான கொள்கைகளாலும்,நடவடிக்கை களாலும் உருவாகும் விளைவுகளுக்கு பாகிஸ்தான் எப்படி பொருபேர்கமுடியும்" என்றார்
அதொடு அவர் நிற்கவில்லை சில ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பான பனிப்போர் பற்றிய தொடர் ஒன்றையும் சுட்டிகாட்டினார்.அதில் அமெரிக்க அதிகாரிகள் ஆப்கன் நாட்டிலிருந்து மற்ற அரபு நாடுகளில் பணியாற்றுபவர்களிடமும் முஜாகிதீங்களிடமும் பெசியதையும் குறிப்பிட்டார்."நண்பர்களே! உங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள். மசூதிகளுக்குச் செல்லுங்கள்.உங்கள் மதத்திற்கு ஆபத்து. அந்தப் புனிதப்போரில் கலந்து கோள்ளுங்கள்" என்று அல்கொய்தாவுக்கு ஆள்செர்த்ததையும் கூறினார்.பின் லேடன் கொல்லப்பட்டதை"நிதி வென்றது"என்று அமெரிக ஜனாதிபதி அறிவித்தார். ' "அரபு மக்களுக்கு நீதி வேண்டும்"என்ற கேள்வியோடு தான் பின் லேடன் ஆட்களைச் செர்த்தான்.அவன் மறந்துவிட்டான். அவன் ஈழுப்பிய கேள்விமரையவில்லை." என்றார் கிலானி.

2 comments:

hariharan said...

பாகிஸ்தானின் நிலைமை பரிதாபகரமாக உள்ளது. அந்நாட்டின் மக்களோ அமெரிக்காவுடன் கூட்டு வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆளுகிரவர்களுக்கு அமெரிக்காவை ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை, அப்படி மக்கள் வழியில் நின்று யோசித்தால் உடனே அந்த நாட்டின் ராணுவம் ஆட்சியை பிடிங்கிக் கொள்ளும். அவர்கள் எல்லாம் அமெரிக்காவில் பயிற்சி எடுத்தவர்களாயிற்றே!!

suvanappiriyan said...

உசாமா இறந்தும் பல கேள்விகளை விட்டு சென்றுள்ளார். அமெரிக்கா பணம் பண்ணுவதற்காக மற்ற நாடுகளில் மூக்கை நுழைப்பதை நிறுத்திக் கொண்டால் தீவிரவாதம் தானாகவே ஒழிந்து விடும். அதுவரை ஒரு உசாமா போனால் பத்து உசாமாக்கள் உருவாவார்கள்.