Sunday, March 13, 2011

காளி தாசனும் தர்க்கவியலும்.....

காளி தாசனும் தர்க்கவியலும்....


உலகம் புகழும் கவிஞர்களில் காளிதாசனும் ஒருவர். அவருடைய உவமைகளை பண்டிதர்கள் இன்றும் ஆச்சரியத்தோடு அனுபவித்துப் பேசுவார்கள். காளிதாசனின் சாகுந்தலம், படித்திருக்கிரீற்கள?காளிதாசன் விக்ரமோர்வசியத்தில் இவ்வாறு கூறுகிறான்,காளிதாசனின் மெகதூதம் ஒரு போக்கிஷம் என்று சிலாகிப்பார்கள். அத்துணையும் உண்மை. ஒவ்வொரு வார்த்தையும் உளியால் செதுக்கிய சிலை போன்ற வெலைபாடுகளைக் கொண்டவை..ஆனாலும் காளிதசனுக்கு இவை போதவில்லை.

ராமாயணம் இப்பாடி சொல்கிறது,மகா பாரதம் இவ்விதம் விளக்குகிறது என்கிறார்கள். அங்கு வால்மீகியின் படைப்பையே குறிப் பிடுகிறார்கள்.வியாசனைஅல்ல, மகாபாரதத்தை சொல்கிறார்கள். அதே போல் தன்னை மீறி தன் படைப்பு நீற்கவில்லயே என்ற ஆதங்கம் அந்த கவிஞனுக்கு உண்டு.

இதற்கான காரணம் என்ன? தன் படைப்புகள் எந்த வகையில் குறையுள்ளதாக இருக்கிறது என்று கேட்டான். வால்மீகியும் வியாசனும், இதிகாசத்தைப் படைத்தார்கள்.அவர்கள் படைப்பு புராணமாகி மக்களால் தெய்வீக நிலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது என்பதைப் பார்த்தான்.நானும் ஒரு இதிகாசத்தைப் படைப்பேன். என்படைப்பும் புராணமாகும். என்பெயரையும் வால்மீகியையும்,வியாசனையும் முந்தி நீற்கச்செய்வேன் என்று ஆரம்பித்தான். பிரும்மாண்டமாக "ரகு வம்சத்தை" ஆரம்பித்தான்.

புலவர்கள் காவியங்களைப் படைக்கு முன் கடவுள் வாழ்த்துப் பாடுவது முறையாகும். காளிதாசன் தன் தாயும் தந்தயுமாகப் பாவிக்கும் பார்வதியையும்(காளி) பரமேஸ்வரனையும் பாட ஆரம்பித்தான். அவர்கள் இருவரும் எவ்வளவு அன்பு பரஸ்பரம் வைத்திருந்தார்கள். அவர்கள் காதல் எவ்வளவு உன்னதமானது. அதனை எப்படி வர்ணிக்க.அவர்களின் அன்புக்கும் காதலுக்கும் உவமையாக எதைச்சொல்வது? என்று யோசித்தான். "வானும்நிலவும்" இல்லை ..வான் வேறு நிலவு வேறு. நிலவிலா வான் உண்டே...மலரும் மணமும்..இல்லை மலர் வாடிவிட்டால் மணம் இருக்காதே " என்று சிந்தித்துக் கொண்டே அத்துணையையும் நீராகரித்தான்.

நதிக்கரையில் அரசமரத்தடியில் அமர்ந்திருக்கும் போது ஒரு கல்லை எடுத்து வீசினான். கல் என்பது ஒரு சொல். அதேசமயம் கல் என்பது ஒரு பொருள்.அந்தப் பொருள் இல்லை என்றால் அந்த சோல் வந்திருக்காது. அது மட்டுமல்ல அந்த சொல் தான் அந்தப் பொருளை மற்றவர்க்கு அடையாளப் படுத்துகிறது. சொல் இல்லையேல் பொருள் இல்லை பொருள் இல்லையேல் சொல் இல்லை ஒன்றை ஒன்றிடமிருந்து பிரிக்கமுடியாது. பிரிக்கமுடியாத சொல்லையும் பொருளையும் போன்றவர்கள் என் தாய் பார்வதியும் எந்தந்தை பரமேஸ்வரனும். "வாகர்த்தாவிவ சம்ஹிருத்தவ்" என்று காளிதாசன் பாட ஆரம்பித்தான். .

சனாதனிகள் தினம் ராமாயணம், மகாபாரதம் அகியவ்ற்றில்லிருந்து பாடல்களை படித்து தோழுவார்கள். ஆனால் அதற்கும் முன்பாக "வாகர்த்தாவிவ ஸ்ம்ஹிருத்தவ்" என்று கடவுள்வாழ்த்தைபாடிவிட்டுத்தான் ஆரம்பிப்பார்கள் காளிதாசன் முந்திவிட்டான்..

7 comments:

சிவகுமாரன் said...

ஆகா .
ஒரு உவமைக்காக எப்படி எல்லாம் யோசித்திருக்கிறான்.
காளிதாசனின் படைப்புகள் தமிழில் வந்திருக்கிறதா ?
படிக்க ஆவலாய் உள்ளேன்.
சிறுவயதில் தனியாக நான் இந்தி படித்தேன் . கூடவே என் அப்பா சமஸ்கிருதம் படிக்கச் சொன்னார்கள். தமிழுக்கு ஈடாக அதில் இலக்கியப் பொக்கிஷங்கள் இருப்பதாகவும் என் கவியார்வத்துக்கு அது வெகு தீனி போடும் என்றும் சொன்னார்கள். நான் ஏனோ அதில் ஆர்வம் காட்டவில்லை. (அது பிராமணர்களின் மொழி. நான் ஏன் படிக்க வேண்டும் என்று தர்க்கம் செய்தேன்).இப்போது வருந்துகிறேன்.
தங்களின் ஞானம் எனக்கு பொறாமையை தருகிறது .

சமுத்ரா said...

பகிர்வுக்கு நன்றி

'பரிவை' சே.குமார் said...

ஆகா... ஆகா..!

ரிஷபன் said...

நாம் பாரதி போல குறிப்பிட்டு சொல்லும்போது அவர் பல மொழிகளை அறிந்திருந்தார் என்போம். ஆனால் பிற மொழி அறிவு வாய்க்காமல் போனது பெரும்பாலான நம் சமூகத்தின் துரதிர்ஷ்டமே. இங்கு மொழி என்பது தொடர்புக்கு என்பது பின் தள்ளப்பட்டு உணர்வின் கூச்சலாய் ஆகிவிட்டது. அவரவருக்கு அவரவர் மொழி தாய் மொழிதானே? தமிழையும் படி பிற மொழிகளும் கற்றுத்தேர் என்பதுதானே பகுத்தறிவு.. ஆனால் அப்படியா இங்கு நிகழ்கிறது?

Unknown said...

காளிதாசன் பற்றி தெரியாதது எல்லாம் சொல்றீங்க. மிக்க நன்றி!

சிறு வயதில் சமஸ்கிருதத்தை கற்க வைத்தார் என் தந்தை - ரொம்ப இல்லை என்றாலும் ஓரளவுக்கு புரியும். பிறகு, ஐரோப்பாவில் பணி காரணமாக ஜெர்மனும் கற்க நேர்ந்தது. அதே ஓரளவு. என்றாலும், ஒப்புமைகள் நிறைய: ஒருமை, இருமை, பன்மை இரண்டிலும் உண்டு..

தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்: எழுத்துப் பிழை நிறைய இருக்கு. ("படித்திருக்கிரீற்கள?", "வெலைபாடு", "மெகதூதம்", "போக்கிஷம்"...) எழுத்தில் பிழை ஏற்பட நீங்கள் பயன்படுத்தும் தமிழ் எழுதுகருவி காரணமா? நீங்கள் http://www.higopi.com/ucedit/Tamil.html அல்லது nhm writer முயற்சி செய்யுங்களேன்.

இன்னும் நிறைய எழுதுங்கள்.. நன்றி.

அப்பாதுரை said...

கம்பனையும் காளிதாசனையும் ஒப்பிட்டு மறைமலையடிகள் எழுதியதைப் படித்திருக்கிறீர்களா? மறைமலையடிகள் எழுதிய 'சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பும் ஒரு ஆராய்ச்சியும்' கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

இராஜராஜேஸ்வரி said...

காளிதாசன் முந்திவிடான்.சிறந்த வாழ்த்துப் பாடலை அறிமுகம் செய்த்தற்கு நன்றி.