Tuesday, December 14, 2010

நகர்வாலா ஊழல்.....

நகர்வாலா ஊழல்.....


டில்லிப்பட்டண வங்கியிலே,

கொள்ளைபோன அறுபதுலட்சம்,

கள்ளப்பணமா வெள்ளைப்பணமா?

காங்கிரஸ்காரன் கருப்புப்பணமா?

டில்லிராணியே இந்திராவே!

அல்லிராணியே என்ன பதில்?

என்ற தணிகைச்செல்வனின் கவிதைவரிகளைக் குரலெழுப்பி மதுரையின் நான்கு மாசிவீதிகளிலும் ஊர்வலம் வந்த ஆயிர்க்கணக்கானவர்களில் நானுமொருவன்.நகர்வாலா ஊழல் என்று பத்திரிகைகள் வர்ணித்தாலும் நகர்வாலா என்பவன் அம்பு.

பிரதமர் மறைந்த இந்திரா காந்தியின் இரண்டாவது மகன் சஞ்சய் காந்தி.பெரிய படிப்பாளி என்று சொல்லமுடியாது.கார்களை ரிப்பெர் பார்க்கத்தெரியும். இந்தியமக்களுக்கு 40000ரூ கார்கொடுக்க அரசு ஒருதிட்டம் பொட்டது.சஞ்சய் மாருதி கார் தாயாரிக்கிறேன் என்று ஆரம்பித்தார்.அரசு அதற்கான அனுமதியைக் கொடுத்தது. சஞ்சய் இன்ஞ்சின் தயாரிக்கும் பொறுப்பை எற்றுக்கொண்டார்.

இதற்கிடையே டெல்லி சர்வதேச விமானநிலயத்தில் ஒரு சம்பவம் நடந்தது.சந்தெகப்படும்படி இருந்த ஒருவனை போலீஸ் பிடித்தது. அவனைபொட்டு உலுக்கியதில் உண்மையைக்கக்கிவிட்டான். அவனுடைய பெட்டியில் அறுபது லட்சம் ரூ இருந்தது.விமானத்தில் மொரிஷியஸ் செல்லும் பயணி ஒருவரிடம் கொடுப்பதற்காக வந்துள்ளான்.

உள்குட்டு வேறு. அந்த விமானத்தில் சஞ்சய் மொரிஷியஸ் பொவதாக டிக்கெட் எடுக்கப்பட்டுள்ளது அவர் கடைசினிமிடத்தில் பயணத்தை ரத்து செய்துள்ளார்.மொரிஷியஸ்,பெய்ரூட்,போன்ற இடங்களில் கள்ளப் பண பரிவர்த்தனை சர்வசாதாரணம்.பிரச்சினை பெரிதாகியது.

முக்கியமான கேள்வி அறுபதுலட்சம் யாருடையது? எங்கிருந்து வந்தது?

டெல்லி நாடளுமன்ற விதியில் இருக்கும் ஸ்டேட் வங்கியில் எடுக்கப் பட்டுள்ளது. வங்கியில் குரலை மாற்றிபேசி பணத்தை மொசடியாக எடுத்தவன் இவந்தான் என்று நகர்வாலா என்பவனைக் காட்டினார்கள். மாருதி கம்பெனிக்காக சஞ்சயிடம் கொடுக்க விமானனிலயம் வந்த பணம் இது. கொடுக்க வந்தவனை போலீஸ் பிடித்துவிட்டது. அதன மறைப்பதற்காக பிடிபட்டவனை மறைத்து அப்பாவி நகர்வாலாவைக் காட்டுகிறார்கள் என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.நகர்வாலாவுக்கு "திக்குவாய்". அவன் குரலை மாற்றி பெசியிருக்க முடியாது.

வழக்கு நடந்தது. வழக்கு நடக்கும் பொதே நகர்வாலா இறந்தான் இந்த வழக்கை புலன்விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் காஷ்யப் விபத்தில் இறந்தார்.காஷ்யப் மரணத்தை விசாரிக ராமநாதன் வந்தார். விசாரணை சம்பந்தமாக டெல்லியிலிருந்து ஆக்ரா போகும் பொது லாரி மோதி இறந்தார். இந்த ஊழலை நாடளுமன்றத்தில் அம்பலப்படுத்தியவர் மார்க்சிஸ்ட் உறுப்பினர் ஜோதிர்மயி பாசு அவசரநிலைக்காலத்தில் அவரக் கைது செய்து.சித்திரவதை செய்தார்கள். குற்றுயிரும் குலை உயிருமாக வெலியே வந்து இறந்தார்.

பின்னாளில் மாருதி கம்பெனி "மாருதி உத்யோக் " ஆனது. நாடளுமன்ரவீதி ஸ்டேட் வங்கியில் அறுபதுலட்சம் ரூ தூக்கிக் கொடுத்த அதிகாரி மாருதி உத்யொக் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனரானான்.

9 comments:

பாரதசாரி said...

மிக்க நன்றி ஐயா.உண்மைகள் பதைபதக்க செய்கிறது...
வேளை பளு சற்று அதிகம், சில நாட்களில் முழுவீச்சில் வருவேன்.

அப்பாதுரை said...

இந்த வழக்கு நினைவிருக்கிறது. இன்றைய ஊழல்களின் முன்னே இதெல்லாம் சாதாரணமாகி விட்டதோ? எனக்கு முதல் முதலாக வேலை கிடைத்தது பொஃபொர்ஸ் கம்பெனியில் தான் - சுவையான கதை.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மறக்கமுடியாத வழக்கு.

இன்று போல சதா சர்வ காலமும் அடுத்தவனை மோப்பம் பிடிக்காத ப்ரஸ் இல்லாத காலம்.

ராம்நாத் கோயங்கா-குல்தீப் நய்யார்-எம்.ஜே.அக்பர்-பின்னாளில் அந்துலேயின் சிமெண்ட் ஊழலில் பிரபலமான அருண்ஷோரி உள்ளிட்ட சிலர் மட்டுமே அரசுக்கு எதிரான குரலை ஒலித்தார்கள்.

பெரி சாஸ்திரி என்ற கைப்பாவை தேர்தல் கமிஷனரை வைத்துத் தன்னிஷ்டப்படி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் புகுந்து விளையாடினார் இந்திரா.

ஜேபி யின் அலை எமெர்ஜென்ஸிக்குப் பின் தனது செல்வாக்கைச் சரிவரப் பயன்படுத்தாது போனது இந்திய அரசியலின் போக்கை மாற்ற்க்கூடிய யூகங்களையும் சாத்தியங்களையும் கைகழுவியது.

ஊழலின் வீச்சு இன்று சாதாரண மனிதன் வரை பூதாகாரமாய் பரவியிருப்பது அருவெறுப்பானது.

நேற்று நகர்வாலா இன்று ஸ்பெக்ட்ரம் நாளை ?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பல பழைய விஷயங்களை நினைவு படுத்தி விட்டீர்கள்,ஸார்!

சிவகுமாரன் said...

அடேங்கப்பா ஒரு 60 லட்சம் கையூட்டை மறைக்க எத்தனை கொலைகள். இன்று ஒரு கவுன்சிலர் 60 லட்சம் கொள்ளையடிக்கிறான். உண்மைகளை பதிவிட்டதற்கு நன்றி அய்யா. ஒரு பின்னூட்டத்தில் அப்பாத்துரை அவர்கள் காஷ்யபன் வலைப்பூவின் வரப்பிரசாதம் என்று சொல்லியிருந்தார். அதை நான் இங்கு வழிமொழிகிறேன்.

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! உங்கள் சுவையான ஃபோபர்ஸ் கதையைச்சொல்லுங்களேன்---காஷ்யபன்

kashyapan said...

சுந்தர் ஜி! கே.டி.கெ, உமாநாத், துவை வேதி, நாத் பாய் ஆகியொர் நாடாளுமன்றத்தில் அதகளம் புரிவார்கள்.இந்திராஅம்மையாரின் கணவர் ஃபெரோஸ் காந்தி மாமனார் என்றும் பார்க்காமல் முந்திராஊழலை அம்பலப் படுத்தி நேருவை கிடுக்கிப்பிடி போட்டு மடக்கினார்.நிதி அமைச்சர் கிருஷ்ணமாச்சாரியை ராஜினாமா செய்யவைத்தார். அப்போது ஆளும் தரப்பில் "கொஞ்சூண்டு" நாணயம் இருந்தது.---காஸ்யபன்.

அழகிய நாட்கள் said...

தோழர் காஸ்யபன் !
சுதந்திர இந்தியாவின் முதல் ஊழல் குறித்த தங்களின் பதிவு நன்று!
அப்போது கூட கொலைபாதகம் செய்துதான் அதை ஒன்றுமில்லாமல் செய்ய நேர்ந்திருக்கிறது அவர்களால். அதே போன்ற அவர்களின் நகர்வல நாற்றம் இன்றைக்கு போக்கவே முடியாது என்ற மிகப்பெரிய நிலைமைக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது

kashyapan said...

தொழர் திலீப்!நகர்வாலா ஊழல் முதல் அல்ல.மத்தாய் ஊழல், கோயம்புத்தூர் கிருஷ்ணன் கள்ள நோட்டு ஊழல்,விவியன் போஸ் கமிஷன் விசாரித்த பட்நாயக் ஊழல்,சாக்ளா கமிஷனின் எல்.ஐ.சி ஊழல் இவை எல்லாம் நேரு காலம்.---காஸ்யபன்.