Sunday, October 10, 2010

கற்பணை என்று கிடையாது.(There is no Fiction)

கற்பனை என்று உண்டா?




" வண்ணக்கதிரில்" காஸ்யபன் எழுதிய" எங்கேஅவர்கள்?"என்ற சிறுகதையை பதிவிட்டிருந்தேன்.பின்னூட்ட்ங்கள் மூலமும்,தொலைபெசிமுலமும் பல நண்பர்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.இது உண்மையா? புனைவா? என்று பலர் கேட்டிருந்தனர்.இது உண்மையாக இருக்க வேண்டுமே என்ற ஆதங்கம் பலரிடம் வெளிப்பட்டது.RVS என்ற பதிவர் இது புனைவா? எப்பெடியானாலும் சவாரசியமாக இருந்த்தது என்கிறார்.இதன் கட்டமைப்பினைப் வைத்து இதனை சிறுகதை என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறர் தொழர் S.V.V. இந்தக் கேள்விகளுக்கு பதில் இரண்டுவகைகளில் சொல்லலாம்.ஒன்று இந்தியத் தத்துவ மரபு.மற்றொன்று மார்க்சீய வழி.

மாயாவாதம்.

பதிவர்கள் இதனைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.நீங்கள் படித்துக் கொண்டிருப்பதாக நினைக்கிறீர்கள்.ஆகவே படிக்கிறிர்கள்.நீங்கள் உங்கள் நண்பரோடு பெசிக்கொண்டிருப்பதாக நினைக்கிறீரகள் ஆகவே பெசிக்கொண்டிருக்கிறீர்கள் உண்மையில் அப்படி எதுவும் நிகழவில்லை.எல்லாமே உங்கள் மனமாயைதான்.என்கிறது ஒருமரபு..சர்ப்ப கந்த யோகம் என்று இதனை விளக்குவார்கள். இருட்டில் பாதையில் செல்கிறோம். குறுக்கே பாம்பு இருக்கிறது.விலகி ஓரமாகச் செல்ல முற்படுகிறோம்..அருகாமை அடந்ததும், அது பாம்பல்ல கயிறு என்று தெரிகிறது. பாம்பு நம் நினைவில் இருந்தது.உண்மயில் பாம்பு இல்லை.இங்கு பாம்பு என்பது வேறும் மாயை.அதேபோல் கயிறு என்று நினைத்து பாம்பு தீண்டுவதும் வாய்ப்புக்குறியதே..இங்கு கயிறு மாயை.உலகமே மாயை.எல்லாமே நம் மனம் காட்டுவதுதான். உண்மையில் அவையில்லை. என்பது தத்துவம்.

மார்க்சீயவாதியான காலம் சென்ற தலைவர் பி.ராமமூர்த்தி அவர்கள் அற்புதமான உதாரணத்தோடு மறுப்பார் இந்த பூமி,மரம்,குளம்,நீ,நான் எல்லமே உண்மை என்று அடித்துச் சொல்லுவார்.கயிறை பாம்பு என்று நினைப்பவன் பாம்பைப் பார்த்திருக்க வேண்டும்..பாம்பையே பார்க்காதவன் பாம்பைப் பற்றிய பிம்பமே தெரியாதவன் மனதில் எப்படி பம்பின் நினைவு வரும்.கயிறு பற்றிய பிரக்ஞையே இல்லாதவன் மனதில் கயிறு என்ற உருவம் எப்படித்தோன்றியது. ஆக அவன் பாம்பைப் பார்த்திருக்கிறான். கயிறையும் பார்த்திருக்கிறான். பாம்பம், கயிறும் இருந்தது உண்மை. மாயை அல்ல.என்று தன்னுடைய வகுப்புகளில் விளக்குவார்.

மார்க்ஸ் அவர்கள் (Ther is no fiction) கற்பனை என்று ஒன்று கிடையாது என்று கூறுவார்.(தொடரும்)

6 comments:

அப்பாதுரை said...

சர்ரியலாக இருக்கிறது.. கொஞ்சம் பயம்தான் இந்த ரீதி சிந்தனை எங்கே கொண்டு விடும் என்று எண்ணும் பொழுது.

kashyapan said...

அப்பாதுரை அவர்களே!சர்ரியல் இருக்கட்டும். ஏன் பயப்பட வேண்டும்.விவாதிப்போம்.ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வோம். I submit myself for correction.O.K---காஸ்யபன்

ராம்ஜி_யாஹூ said...

பறவையை கண்டான், விமானம் கற்பனை செய்தான் (அது வரை அவன் விமானம் பார்த்தது இல்லை) , விமானம் படைத்தான்

எதிரொலி கண்டான், வானொலி கற்பனை செய்தான், வானொலி படைத்தான்.


வீட்டில் பணம் காய்த்து கொட்டும் மரம் நான் பார்த்தது இல்லை, அனால் என் கற்பனையில் அது இருக்கிறது.

பிடித்த கதாநாயகியை நான் அரை குடரி ஆடையில் பார்த்தது இல்லை, ஆனாலும் கற்பனையில் இருக்கிறது.

எனவே கற்பனை என்பது உண்டு. அந்த கற்பனைக்கு ஊன்றுகோல் அல்லது அடிப்படை, நாம் பார்த்த கேட்ட விஷயங்கள் உதவி புரியும் என்று வேண்டுமானால் கொள்ளலாம்.


Lot of new chemical, creations are based on imaginations only. (new color paints too)

hariharan said...

தோழரே, தத்துவங்களின் பக்கம் சென்றதும் நல்லது தான்.

Quantative change leads to qualitative change என்பதை கொஞ்சம் விளக்குங்கள்.

kashyapan said...

அளவு மாறுபாடு குண மாறுபாடைத் தோற்றுவிக்கும்.புளியமரம் அதிகமாக இருந்து வேப்ப மரம் ஒன்று இருந்தால் அதனை புளியந்தோப்பு என்று தான் கூறுவோம்.புளியமரம் பட்டுப்போய் அங்கு வேப்பமரம் அதிகமாக வளர்ந்துவிட்டால் அது வேப்பந்தோப்பாக மாறிவிடும்.
ஹரி! நீங்கள் மட்டுமே உங்கள் குடும்பத்தில் முற்போக்கான எண்ணங்கள் உள்ளவர் என்று வைத்துக்கோள்வோம். உங்கள் வீட்டில் அமாவசை,பௌர்ணமி,திதி என்று கொண்டாடுவதில் தலையிட முடியாது.நீங்கள் மட்டும் ஒதுங்கி நிற்கலாம்.உங்களப்பார்த்து ஆதர்சமாகி உங்கள் சகோதரர்கள்,அண்ணியார்,மனைவி,என்று முற்போக்காளர்களின் எண்ணிக்கை கூடினால் இத்தகைய கொண்டாட்டங்கள் நின்றுவிடும்தானே
அடுப்பில் நீர் கொதிக்கிறது.60டிகிரி,70,80,90 என்று வெப்பம் கூடிக்கொண்டே பொகிறதுதண்ணீர் அப்படியேதான் இருக்கிறது.வெப்பத்தினளவு 100 டிகிரி ஆனவுடன் நீர் ஆவியாகிறது திரவத்தின் குணம் மாறி வாயுவாகிறது.
அளவு மாறுபாடு குணமாறுபாட்டை தோற்றுவிக்கிறது.போதும்தானே ஹரி---காஸ்யபன்.

hariharan said...

நன்றி! இயங்கியல் தத்துவத்தைப் பற்றி எளிய முறையில் விளக்கிய படைப்புகள் தமிழில் இருந்தால் அறிமுகம் செய்யுங்கள்.