Sunday, October 24, 2010

பாம்புப் பிடரனும் எம்.பி.எஸ் அவர்களின் இசையும்---3

பாம்புப் பிடாரனும் இசையும்.


மானாமதுரை(M) பாலசுப்பிராமணியம்(B) சீனிவாசன்(S) என்பது அவருடைய முழுப்பெயர்.வசதியான குடும்பம்.சென்னை பி.எஸ் உயர் நிலைப் பள்ளியில் படிப்பு. பின்னர் மதறாஸ் மாகாணக் கல்லுரியில் உயர்கல்வி.படிக்கும் காலத்திலேயே கம்யூனிசத்தில் ஈடுபாடு. மதறாஸ் மாணவர் அமைப்பை கட்டி வளர்ப்பதில் முன்னணியில் நின்றார்.அவருடைய செயல் திறனையும் செய்நேர்த்தியையும் பார்த்த கட்சி அவரை டெல்லிக்கு .அனுப்பியது அங்கு பணியாற்றி கொண்டிருந்தார். பின்னர் மதறாஸ் மாகாணத்தில் மாணவர் அமைப்பை பலப்படுத்த மதுரைக்கு வந்தார்.மதுரை கட்சிவாழ்க்கை பற்றி அவர் கூருவதை கேளுங்கள்.

" மண்டையன் ஆசாரி சந்தில்தான் கட்சி அலுவலகமிருந்தது.குருசாமிநாயனாவும் மற்றொரு தோழரும் அங்கேயே தங்கி இருந்தார்கள். அவர்களோடு நானும் செர்ந்து கொண்டேன். முழுநெர உழியருக்கு மாதம் புத்து ரூ அலவன்சு. கட்சி கஷ்டத்தில் இருந்த நேரம். அலவன்சு கூட மாதாமாதம் கொடுக்க முடியாது. அங்கு நாந்தன் இளவ ரசன் எனக்கு பதினந்து.ரூ அலவன்சு.நான் மத்திய கமிட்டியால் அனுப்பப்பட்டவன். ஒவ்வொரு மாதமும் டெல்லியிலிருந்து டாண் என்று பத்தாம் தேதி மணியார்டர் வந்துவிடும்.வந்தால் எங்களுக்கு ஒரே ஜாலிதான்" என்று விவரித்தார் எம்.பி.எஸ்.

"மண்டயன் ஆசாரி சந்திலிருந்து டவுண் ஹால்ரொடு போனால் சுல்தானியா ஹோட்டல் வரும் .ஒரு பிளெட் பிரியாணி எட்டணா.அரை பிளெட் நாலணா. நாங்கள் கட்சிக்காரர்கள் என்பது கடை முதலாளிக்குத் தெரியும். எங்களுக்கு மட்டும் கால் பிளெட் இரண்டணாவுக்கு கொடுப்பார். குஷ்காவுக்குக் கீழே இரண்டு துண்டு கறி கூடுதலாக வைத்திருப்பார் இரவு குதிரை வண்டி லாயத்திற்கு போவோம்.ஆச்சி ஒருவர் காலணாவுக்கு இரண்டு இட்லி தருவார். தலைக்கு ஆறு இட்லி தின்போம். என் அலவன்சு கரைந்து விட்டால் சிக்கல்தான்":என்று தொடர்ந்தார்.

" மண்டையன் ஆசாரி சந்து முக்கில் கிருஷ்ணாகாபி இருந்தது.காபி கொட்டையை வருத்து அரைப்பார்கள்.வசனை மூக்கைத்துளைக்கும்.குருசாமி நாயனா ஒரு ஈய டம்ளரில் வெந்நீரைக்கொடுப்பார். வாசல்ல பொய் "வாசனையை பிடி.வெந்நீரைக் குடி அதுதான் இன்னய காப்பி" எம்.பி.எஸ் நிறுத்தினார். "எவ்வளவு இனிமையான காலம்" அவர் குரல் தழுதழுத்தது.கண்கள் கலங்கின.அவருடைய தொடையை இருகைகளாலும் பற்றி அழுத்தினேன்."நான் அழவில்லை காஸ்யபன் அது ஒரு சுகானுபவம்"என்றார் அந்த கம்யூனிஸ்ட்..

"முத்தையா! என்னை ஏன் முன்னாலயே அழைக்கவில்லை. இப்படி ஒரு அமைப்பு இரு ப்பது தெரியாம போச்சே." என்று கே.எம்.இடம் அங்கலாய்த்தார்" முப்பது பையங்களை.என்னிடம் அனுப்பு.மிகச்சிறந்த சேர்ந்திசைக்குழுவை உருவாக்குகிறென்" என்றார்

டெல்லியில் இருக்கும் போது ஜபிதா என்ற காஷ்மீரத்து முஸ்லீம் பெண்ணை காதலித்து மணந்தார். சுதந்திரப் போராட்டவீரரும்,காங்கிரஸ் தலைவருமான டாக்டர்.சைபுதீன் கிச்சுலுவின் மகள்தான் ஜபிதா.

ஏப்ரல் மாதம் குழு பயிரற்சிக்கு வரச் சொல்லியிருந்தார் எப்ரல் முதல் வாரம் நிகழ்ச்சிக்காக லட்சத்தீவு சென்றார். மாரடைப்பு ஏரற்பட்டு மரணமடந்தார்.(1988).அவர் மனைவி ஜபிதா 2002ல் இறந்தார் மகன் கபீர் 2009ம் ஆண்டு மறைந்தார்

பின் குறிப்பு:இது என்னுடைய ஐம்பதாவது இடுகை என்னுடைய முதல் இடுகைக்கு முதல் பின்னூட்டமிட்ட இ.எம்.ஜொசஃப் அவர்களுக்கு என் நன்றி. மற்றும் ராம்ஜி யாஹூ, ஹரிஹரன் ஆகியொருக்கும் நன்றி.பதிவர்களுக்கு இது சோதனையா? வேதனையா?சாதனையா? என்பதற்கு தொழர்கள் காமராஜ், மாதவராஜ் ,எஸ்.வி.வேணுகோபால் ஆகிய மூவர்தன் பொறுப்பு---அன்புடன் காஸ்யபன்.

8 comments:

மாதவராஜ் said...

ஐம்பதாவது இடுகைக்கு வாழ்த்துக்கள் தோழர்.

நிறைய தகவல்களைத் தந்து கொண்டு இருக்கிறீர்கள். இவைதாம் உங்கள் வலைப்பக்கச் சிறப்பு.

தொடருங்கள் எங்கள் தோழரே!

hariharan said...

வாழ்த்துக்கள் தோழரே!

உங்களுடைய பதிவுகள் அனுபவத்தின் ஊடேயும்,தொடராக வருவதும் சிறப்பு.

நீங்கள் குறிப்பிட்ட பதிவர்களால் தான் நானும் எழுத முயற்சிக்கிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது, பதிவர்கள் ஊடகங்கள் மறைத்த விவரங்களை மக்களுக்கு தெரிவிக்கின்றனர், மறக்காமல் இருக்கவும் நினைவு படுத்துகின்றனர். பதிவுலகம் ஒரு Alternative Media என்பதில் ஐயமில்லை, dont hate the media; be the media என்று ஒரு பதிவர் குறிப்பிட்டிருந்தார்.

சிவகுமாரன் said...

ஐம்பது பதிவுகளையும் முழு மூச்சில் படிக்க இயலவில்லை. .ஒவ்வொன்றும் படித்த பிறகு
நிறைய யோசிக்க வைக்கிறது. அடுத்த பதிவை படிக்க அவகாசம் தேவைப்படுகிறது மனசுக்கு

அப்பாதுரை said...

மானாமதுரை.... யா?சரியாப் போச்சு போங்க. நிஜமாவே வெட்கப்படுறேன். அவர் இசையை அத்தனை ரசிச்சுக் கேட்டு ஒரு விவரமும் தெரியாமல் இருந்திருக்கேனே!

எம்பிஸ்ரீ பத்தின இத்தனை விவரங்களைத் தேடிக் கொடுத்தமைக்கு நன்றி. குடும்பத்து tragic end மனதைப் பிசைகிறது. உங்க பதிவு அவருக்கு ஒரு நல்ல அஞ்சலி. படித்ததும் கனத்தது:>>>"எவ்வளவு இனிமையான காலம்" அவர் குரல் தழுதழுத்தது

ஐம்பதுக்கு மேல் தான் ருசியே. வாழ்த்துக்கள்.

venu's pathivukal said...

காஷ்யபன்அன்புத் தோழர் காஸ்யபன்

ஐம்பதாவது இடுகைக்கு வந்தனங்கள்....

இன்று காலை உங்களிடமிருந்து வந்த குறுஞ்செய்திக்குப் பயந்து இதை எழுதுவதாக நினைத்துப் பெருமை கொள்ள வேண்டாம். ஏதோ நான் பதில் பதிவு செய்தால்தான் அடுத்த இடுகை செய்வேன் என்றீர்களே..."தோழமை என்றவன் சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ, ஏழைமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ" என்றான் கம்ப மாக்கவி. காலம் தாழ்ந்து செய்யும் எனது பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

முதன் முதலில், அரையும் குறையுமாக வானொலியில் கேட்க நேர்ந்து, இந்த சேர்ந்திசை பற்றியே கேவலமான கருத்தை உட்கொண்டது எவ்வளவு தவறு என்பதை அடுத்த சில மாதங்களில் தற்செயலாக எல் எல் ஏ பில்டிங்கில் (இந்தக் கட்டிடத்தில் ஆயிரம் கூட்டங்களாவது போய்க் கலந்திருப்பேன் இதுவரை என்று நினைக்கிறேன்...). அங்கே யாரோ ஒரு பேச்சாளர் எம் பி எஸ் பற்றிப் புகழக் கேட்டவன் அசந்து போய் உற்றுக் கேட்கப் பழகினேன்.
பின்னர் வங்கிப் பணியில் சேர்ந்த காலத்தில், அவரது பாடல்கள் ஒளிபரப்பும் மதிய நேரத்தில் எனது சின்னஞ்சிறிய டிரான்சிஸ்டரில் வைத்து அவற்றைக் கேட்கவென்றே கிளையிலிருந்து நான்காவது தெருவில் இருக்கும் எனது அறைக்கு வந்து போவேன். ஞாயிறு காலைகளில் ஒன்பது மணிக்கு வேறு வேளை வைத்துக் கொள்ள மாட்டேன். பாடல் பயிற்சி. சலில் சவுத்திரி இயக்கமாக இருக்கும், அல்லது எம் பி எஸ். அதை தாளம், லயம் குன்றாமல் எப்படி படிப்படியாக எழுதிக் கொள்ளுங்கள், இப்போது படியுங்கள், பாடுங்கள் என்று சொல்வது வரை ஏன் நெஞ்சில் நிற்கிறது இன்னமும். பில்லல்லாரா, பாபல்லாரா, ரேபபடி பாரத பவுரல்லாரா. ...என்ற தெலுங்குப் பாடல் எப்படி இன்னமும் எனக்கு நினைவில் நிற்கிறதாம்? அப்படியே, ஹிந்து தேஷ் கி நிவாசி சபீ ஜன் ஏக ஹை என்ற பாடலும்...ஓடி விளையாடு பாப்பா பாடலை எங்கே எப்படி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை இப்போது கேட்டாலும் தலைகீழாகச் சொல்வேன்...
இருக்கட்டும், எம் பி எஸ் அவர்களின் மிகப் பெரிய கொடை, முற்போக்கு உலகில் இசை மேதைகள் ஜொலிக்க முடியும் என்பதை பல நூறு பேரைக் கொண்டு காலகாலத்திற்கும் நிரூபித்துச் சென்றிருப்பது....அவரது தலைமை மாணவி, டீச்சர் ராஜராஜேஸ்வரி பாடினால் வருஷக் கணக்கில் அமர்ந்து கேட்கலாம். பிரளயனின் உபகதையில், தீம் பாடலாக அடிக்கடி வரும் பன்னெடுங்காலம் மமதையின் ஓலம் என்ற பாடல் என்னைப் பித்துப் பிடிக்க வைப்பது. எம் பி எஸ் எப்போதும் வாழ்வார்...

பாம்புப் பிடாரன் வசன கவிதை என்னை எப்போது படித்தாலும் வசப்படுத்துவது. அதை நீங்கள் சிறப்பிக்கும் வண்ணம் இடுகை செய்திருப்பது அசத்திவிட்டது.

அவரை அற்புதமாக அறிமுகப் படுத்துகிறது உங்களது இடுகைகள்...உணர்வு பூர்வமான மொழி நடை உங்களுக்கு எப்போதும் பலமாக வைத்திருப்பது...
ஆனால் நீங்கள் ஏன் நூலாக்கம் செய்யக் கூடாது...
தொடங்கட்டும் உங்களது பணி...
சரி, ஐம்பத்து ஒன்றாவது இடுகை எப்போது?

எஸ் வி வேணுகோபாலன்

kashyapan said...

எஸ்.வி.வி தொழா! உங்கள் பின்னூட்டத்தை படிக்கமுடியாமல் நீர்த்திவலைகள் மறைத்துக் கோண்டிருக்கின்றன. உணர்வு பூர்வமான உங்கள் எழுத்து மட்டுமல்ல.அந்த ஒப்பற்ற கலைஞனின் நினைவும் செர்ந்து என்னை அழுத்துகிறது. எம்.பி.எஸ்,சலீல் சவுத்திரி,யிலிருந்து பாவலர் வரதராஜன், முத்துமாரி என்று அவர்கள் வாழ்ந்த வாழ்க்கயைப் பதிவுசெய்ய வெண்டும் ஆசை. அவர்களின் கட்சித்தொடர்பு ஒரு மகத்தான அனுபவம்.---காஸ்யபன்.

venu's pathivukal said...

அன்புத் தோழருக்கு

எனது பின்னூட்டத்திற்கு நீங்கள் எழுதிய பதிலையும் பார்த்தேன்..நன்றி!

இந்திராவைப் பற்றியது என்று குறிப்பிடும் பாட்டை எழுத மறந்து போயிருந்தேன். அனுமதியோம், அனுமதியோம் நாட்டைத் துண்டாட அனுமதியோம் என்ற சேர்ந்திசைப் பாடலைத்தான் குறிப்பிடுகிறீர்களோ? அதில் தான், நாட்டின் அன்னை இந்திரா காந்தி தியாகத்தை மறப்போமா.. என்ற வரி வருகிறது. அதை மீறியும் அந்தப் பாடல் லயமிக்க சுந்தர கீதம்.

அம்மா, நீ தான் இந்தியத் தாய், எங்கள் அத்தனை பேரையும் ஈன்றெடுத்தாய். ...என்பது இன்னொரு அற்புத கானம்.
தமிழன்பன் எழுதியிருந்த

ஆடும் அலைகடல்
சூழும் எரிமலை
ஈடு இணை இல்லாத
எங்கள் பகத் சிங்....
எங்கள் பகத் சிங்...
என்று துவங்கி,
கனவுக் கொடியில் கொய்ததல்ல சுதந்திரம் - பல
தியாகம் செய்து பறித்து வந்த மலரிது - ஒரு
தானமாகக் கிடைத்ததால் சுதந்திரம் - உயர் மானம் கொண்டோர் மரணம் தந்த பரிசிது...

என்று ஆவேச படிக்கட்டுகளில் இறுதிக் கட்டம் எட்டும் பாடலும் அருமையாக ஒலிக்கும்...

அண்மைக் காலச் செய்தி: ஆசிரியை ராஜராஜேஸ்வரி வழிகாட்டுதலில், போதிப்பில் BEAT என்ற வங்கி ஊழியர் கலைக் குழு ஒன்று இயங்கி வருகிறது. இரண்டாண்டுகளுக்கு முன், மலேசியா சென்று திரும்பிய பெருமைக்குரிய குழு அது. சென்னை இளைஞர் சேர்ந்திசையையும் ஆசிரியை இயக்கி வருகிறார்.

காட்டில் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும்
பாட்டின் சுவையதனைப்
பாம்பறியும் என்றுரைப்பார்..
என்றானே மகாகவி, அதனால் தான் அவன் மகாகவி!

எஸ் வி வேணுகோபாலன்

kashyapan said...

எஸ்.வி.வி ! நீங்களே ஒரு புத்தகம் போடலாம்.அவ்வளவு சரக்கு உங்களிடம்.உள்ளது.BEAT கலைக்குழுவின் நிகழ்ச்சிகளை கெட்டிருக்கிறேன். தொழர் ரவிசங்கர்(புல்லாங்குழல் வாசிப்பார்) அவரையும் தெரியும். "பாம்புப் பிடாரன்" கிடைத்தால் வலையில் போடுங்கள்---காஸ்யபன்