Monday, October 16, 2017நாடாளுமன்ற ,


சட்டமன்ற , 


தேர்தல்கள் ...!!!

இந்தியா சுதந்திரமடைந்ததும் 1952ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு ,சட்டமனறத்திற்கும்  ஒரேசமயத்தில் தேர்தல் நடந்தது. 1967மாண்டுவரை இதேமுறையில் நடந்துவந்தது . ஆனால் 1971ம் ஆண்டு இதனை மாற்ற யோசனைகளை வந்தன . நாடாளுமன்ற தேர்தலின் பொது தேசிய அளவில் விவாதங்கள்  உருவாக்கிமுடிவுகள் எடுக்கப்படவேண்டும் அதனால் அதன் சட்டமன்ற தேர்தல்களோடு சேர்க்கவேண்டியதில்லை என்று சொல்லப்பட்டது. இதனை விவாதத்திற்கு கொண்டுவந்த காங்கிரஸ் கடசியின் நிலயை திமுக ஆதரித்தது. ஆனால் இதற்குப்பின்னால் இரண்டு கடசிகளின் சுய நலனே முன் நின்றது .


1977ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் பொது காங்கிரசை எதிர்த்து காங் (ஓ )லோக்தளம்,சோஷலிஸ்டுகள்,ஜெகஜீவன்ராம் கட்சி என்று பலகட்சிகள் நின்றன. இந்திரா அம்மையார்    தலைமையில் இருந்த காங்கிரஸ் தோற்றது. மொரார்ஜி யும்  சரண்சிங்கும்  9 மாநிலங்களில் இருந்த இ.காங் அரசுகளை நீக்கும்படி ஜனாதிபதியை கேட்டுக் கொண்டனர். அவசரநிலைக்காலத்தில் செய்த குற்றங்களுக்கு இந்த மாநில அரசுகளும் தண்டிக்கப்படவேண்டும் என்பது அவர்களுடைய வாதம். அதனால் 9 மாநிலங்களுக்கு 1978ம் ஆண்டு தேர்தல் நடத்தவேண்டுய நிலை  ஏற்பட்டது.

இதன் பிறகு நடந்த தேர்தல் எப்போது எப்படி நடக்குமென்று சொல்லமுடியாதநிலை தோன்றியது . பல்வேறு மாநிலங்களில் பலவகையான கட்சிகள்  உருவாகின .அவை இன்றிமையாதவை யாகவும் தோன்றின. மத்தியில் பலம் குறைந்த ஆட்சி  ( கூட்டணி )  வரலாயிற்று. 

2014ம் ஆண்டு தேர்தலில் இந்தநிலையை மக்கள்மாற்றினர். பா.ஜ.க தனி பெரும்பான்மையுடன் ஆட்ச்சியை கைப்பற்றியது. மாநிலங்களில் வேறு கட்சிகள் ஆட்ச்சியை பிடித்தன .


நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் எதிர்க்கட்ச்சிகள் இணைந்து பா.ஜ.கவை  சந்திக்கும் நிலை ஏற்படலாம் . அதன் "பத்தாம்பசலி " கொள்கையை அனுபவித்த மக்கள் எதிரகடசிகளை  ஆதரிக்கும் வாய்ப்பு அதிகமாகிக்கொண்டு வருகிறது.இதனை  கண்டு கொண்ட பா.ஜ.க, ஆர் எஸ் எஸ்  தலைமை நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலையும் நடத்த வேண்டும் என்று ககூ வ ஆரம்பித்து விட்டது  .அவர்கள் ஆதரவு தேர்தல் கமிஷனும்  நாங்கள் தயார் என்கிறது.

சட்டமன்ற தேர்தலில் உள்ளூர் சண்டியர்களை மோதவிட்டு நாடாளுமன்றம்  பற்றிய விவாதத்தில் தான் தப்பி விடவேண்டும் என்று கருது கிறார்கள்.

பாஜ.க வின் இந்த திட்டத்தை மார்க்சிஸ்ட் கடசி எதிர்க்கிறது.திரிணமுல் காங்கிரஸ்,மற்றும்சில கடசிகள் எதிர்க்கின்றன. திமுக,தெலுங்கு தேசம், இன்னும் சில கடசிகள் ஆதரிக்கலாம் என்று கூறப்படுகிறது.


பாஜக.வின் கூட்டணியில் உள்ள சிலகாட்சிகள் எதிர்ப்பதால் மோடியும், அமிடன் ஷாவும் பம்முகிறார்கள். 


நாடாளுமனற ,சட்டமன்ற தேர்தலை ஒரே சமயத்தில் நடத்துவதில் மூலம்,எதிர்க்கட்ச்சிகள் ஒன்றுபடாமல் செய்யவும்,அவர்களுக்குள் அடித்துக்கொண்டு அந்த அமளியில் தன வெற்றியை சாதிக்கவும் பா.ஜ .க திட்டமிடுகிறது .


Thursday, October 12, 2017வேலை இன்மை ,ஆக்ரமிப்பு , 


இந்த இரண்டு வார்த்தைகளும் ,

ஐ. நா வால் வரையறைக்கப்படவில்லை !!!

இரண்டாம் உலக யுத்தம் முடிந்ததும் ,1945ம் ஆண்டு வாக்கில் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கியது .இன்றுவரை வேலையின்மை என்றால் என்ன  ?  ஆக்ரமிப்பு என்றால் என்ன  ? என்ற இந்த இரண்டு வார்த்தைகளும் இந்த சபையால் வரையறுக்கப்படவில்லை.


பொதுவாக ஒருநாட்டின் சகல மானவர்களுக்கும்  வேலை இருந்தால் அந்த நாடு நூறுசதம் வேலை வாய்ப்பு பெற்றதாக கருதப்படவேண்டும் என்று சோவியதோண்றியம் உட்பட பெரும்பான்மையான நாடுகள்றகூறி . ன.இதனை அமேரிக்கா மற்றும் அதனை ஆதரவு நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்தன . 70 % லிருந்து 800 % சத்தமிருந்தாலே அது முழுமையாக வேலை வாய்ப்பு அடைந்த நாடாக கருதப்பட்ட வேண்டும் என்று அவை கூறின .அப்போது தான் முதலாளி மார்களுக்கு , பேரம் பேச வாய்ப்புஉண்டு. இல்லையென்றால் தொழிலாளர்கள் கை  ஓங்கி விடும் என்பது அவர்கள் நிலையாக இருந்தது. இன்றும் விவாதிக்கப்பட்டு வரும் இந்த வேலையின்மை அப்படியே தொங்கி கொண்டிருக்கிறது . 


அதே போன்று ஆக்ரமிப்பு என்பதும் வரையாரைக்கப்படவில்லை. 


தென் அமெரிக்க நாடுகளில் தலையிட்டு அமெரிக்க செய்த அட்டூஷியம் உலகமறிந்த ஒன்று . தென் அமெரிக்க நாடுகளுக்கான ஒரு சங்கத்தை வைத்துக் கொண்டு அமேரிக்கா அதன்  வேண்டுகோளுக்கு இயங்க ஒருநாட்டில் நான் தலையிடுவேன். அது ஆக்ரமிப்பு அல்ல என்று கூறுகிறது. இதனை "மன்றோ வழிகாட்டுதல் " என்று கூ றி மார்தட்டுகிறது.   


சோஷலிசநாட்டின் ஸ்திரத்தன்மையை குலைக்க எந்த சக்தி முயற்சித்தாலும் அதில் தலையிட  மற்ற சோஷலிச நாடுகளுக்கு உரிமை உண்டு என்று சோவியத் ஒன்றியம் உறுதியான நிலை எடுத்தது . இதனை "பிரஸ்னோவ் வழிகாட்டுதல் " என்றும் அறிவித்து அன்று "டப்செக் " எதிர் புரட்சியை  அடக்கியது செஞ்செனை !


ஆக "ஆக்ரமிப்பு "  என்ற வார்த்தையும் வரையறுக்கப்படாமல்  தொங்கி கொண்டிருக்கிறது.


Monday, October 09, 2017


பா . ஜ . க  -

குறுக்கு ஒடிந்த 

விஷ பாம்பு ...!!!
கோடை  விடுமுறையில் நாங்கள் எங்கள் கிராமத்திற்கு செல்வோம். கிராமத்திலிருந்து ஒன்று அல்லது ஒன்றரை மைல்  துரத்தில் தாமிரவருணி ஆறு ஓடிக்கொண்டிருக்கும் .  சிறுவர்களாகிய எங்களை ஆற்றில் சென்று குளித்துவர சொல்வார்கள். 

வெள்ளி,செவ்வாய், அமாவாசை,மாசப்பிறப்பு என்றால் விடிவதற்கு முன்பே எழுப்பி ஆற்றுக்கு போக எழுப்பி விடுவார்கள்.நாங்களும் கப்பி சாலையில் புழுதி பறக்க  விளையாடிக்கொண்டே செல்வோம் . பாரவண்டிகள் சென்று நொண்டும்  நொடியுமாக சாலை இருக்கும்.

இருபுறமும் வயல் வெளி. சாலையின் பக்கமாக இரண்டு புறமும் தென்னைமரங்களிருக்கும்.அருப்புமுடிந்த வயல்கள் வெரிச்சோடி  இருக்கும் .

விடிவதற்கு முன்பே கிளம்பிவிட்டால்  தாத்தா எச்சரிப்பார் ! " ஏல ! பாத்து   போங்கல ! ரோட்ல  குறுக்கு   ஒடிஞ்ச  பாம்பு  கிடக்கும் !  சாக்கிரதை  !" என்பார்.

    காய்ந்த வயக்காட்டில் இறை கிடைக்காதபாம்புகள்ரோட்டைத்தாண்டி வந்து தவளை,எலியை  விழுங்கும் . வேகமாக ஊர்ந்து  செல்லமுடியாமல் சாலையின்  குறுக்கே கிடக்கும் . பாரவண்டிகளின் சக்கரத்தில் அடிபட்டு குறுக்கு ஒடிந்து     ரோட்டில் ஒட்டிக்கொண்டு இருக்கும் ,இதில் விஷ பாம்புகள் என்றால் அதிர்வுகளை உணர்ந்து சீரிக்கொண்டிருக்கும் .அருகில் சென்றால் கொத்திவிடும்.

எங்கள் செட்டில் "சுப்பா "  பெரியவன் . "ஏல !சுப்பா  ! கைல  ஒரு குச்சி வச்சுக்க ! பாம்பு சீ ரித்துநா  குச்சியால   தூக்கி  " வாருகால்ல "  போட்டுடூ " என்பார்  .


குறுக்கொடிந்த விஷ பாமபை வாருகாலில்  தூக்கி எறியும் நேரம் வந்துவிட்டது .!!!


  

Sunday, October 01, 2017


"காலந்தோறும் ,


தர்ம நியாயங்கள் ....!!! "

மனிதன் தோன்றிய போதே சமூகமனிதனாக உருவாகவில்லை. தாங்கள் மனிதர்கள் என்ற பிரக்ஞை  கூட  இல்லாமல் இருந்தார்கள். சிறுத்தை போல ஒருவருக்கொருவர் சிறுவதும்,நாய்களைப்போல கடித்துக் குதறுவதுமாகவே இருந்திருக்கிறாரகள் . எந்தவித கட்டுப்பாடு,நியா தர்மங்கள் பற்றிய புரிதல் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள்.


அப்போது தான் அவர்களிடையே ஒரு மகான் தோன்றினார்.நாம் காட்டுமிராண்டிகளல்ல.நாம் கடவுளின் குழந்தைகள்.நமக்கு என்று  வகுத்த வழியில் வாழ்வோம் என்று உபதேசித்தார்


அந்தமகான் தான் ஆபுறகாம்   .

 உபதேசங்களை பலர் ஏற்றனர். கொஞ்சம்  கொஞ்சமாக  இவர்கள் வளர்ந்தனர். ஒருகட்டத்தில் இவர்கள் பேரவாரியாகவுக் நம்பிக்கையாளராகினர் .நம்பிக்கையற்று ஆப்றக்காமை ஏற்காதவர்கள் காட்டுமிராண்டிகளாக திரிந்தனர்.


அவர் காலத்திற்கு பிறகு நம்பிக்கையாளர்கள் தங்களை மேம்பட்டவர்களாக கருதிக்  கொண்டு  மற்றவர்களை அழித்து தாக்க ஆரம்பித்தனர்.இது அன்றய தர்மமாக கருதப்பட்டது.


இந்த நிலையை போக்க ஒருமகான் தோன்றினார். இனகு ழு  க்களாகஇருந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் கூட்டம் கூட்டமாக அடித்து சாவதை தடுக்க விரும்பினார்.ஒரு குழு வை சேர்ந்தவன்  செய்த தவறுக்காக அந்தக்வைகுழுவையே  கொன்று குவிப்பது தவறு  என்று போதித்தார் ."ஒருவன் உன் கண்ணை காயப்படுத்தினால் அவன் கண்ணை சேதப்படுத்து. ஒருகண்ணுக்கு  ஒருகண்.ஒருக்காலுக்கு  ஒருகால் " என்று உபதேசித்தார் . அவர்தான் "மோசஸ் ". சில நூற்ராண்டுகல் கடந்தன.


மீண்டும்  ஒருமகான் தோன்றினார். "உன் எதிரியையும் நேசி>ஒருகன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டு.அமைதிவழி அகிம்சை வழியில் செல் " என்றார். அவர்தான் ஏசுபிரான்.

மனித வாழ்க்கையின்  உன்னதமான வழிமுறையை மனிதகுலம் கண்டெடுத்தது. ஆனால் வாழ்க்கையில் கடைப்பிடிக்க கடினமாக இருந்தது. அதில் ஒரு சிறு மாறுதலை கொண்டுவந்து அமைதி மார்க்கத்தை கொடுத்தார் மகான் நபிகள்நாயகம்.

ஆயிரம் ஆண்டுகளாகி விட்டது.இந்தமாற்றங்கள் ஏற்பட்டு 


அமெரிக்காவிலிருந்து ஜோன் என்ற தத்துவமேதை இந்தியாவந்தார்> இங்கேயே ஆசிரமம் கட்டி வாழ்ந்தார் .காந்தி அடிகளின் உபதேசங்களைக்கேட்டார்> ஆசிரமம் அமைத்து இங்கேயே தங்கினார்

காந்தியோடு விவாததித்தார் " காந்தியிடம் "ஐயா 1 உங்கள் அஹிம்ஸை வழியில் புதியதாக என்ன இருக்கிறது . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏசுபிரான் உன் எதிரியையும் நேசி "என்று கூறிவிட்டார் ! அதைவிட நீங்கள் என சொல்லப்போகிறீர்கள். " என்று கேட்டார்.

அண்ணல் கைராட்டையை சுற்றிக்கொண்டு இருந்தார்>மெதுவாக நிமிர்ந்து ஜோன் அவர்களை பார்த்தார் .தூரத்து  அடிவானத்தை பார்த்துக்கொன்டே கூறினார் '

"எங்கண்ணுக்கு எதிரி யாருமே தெரியவில்லையே ! நான் என்ன செய்ய ? !"என்றார் அண்ணால்காந்தி அடிகள்

Thursday, September 28, 2017சரசுவதி பூஜையும் ,


முற்போக்கு இலக்கியமும் ...!!!


நான்வசிக்கும் அடுக்ககத்தில்  நாற்பது குடும்பங்கள் உள்ளன . வங்காளிகள், பிஹாரி, எம்.பி ,உபி ,மராட்டி,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்.என்று இந்தியாவின் சகலப்பகுதி மக்களும் உள்ளனர்.இங்கு வசிக்கும் பெண் களில் முத்துமீனாட்ச்சி முக்கியமானவர்.


காரணம் வயது 75 +  ! அது தவிரஅவர்இந்தி,தமிழ்,ஆங்கிலம்,சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் எழுத படிக்க  சரளமாகப்பேச முடிந்தவரும்கூட.  மேலும் வங்காளி,மராட்டி மொழிகளில் பேசி சமாளிக்கும் அளவுக்கு தெரிந்தவர். அதனால் அவர் இந்த குடும்பங்களின் "டார்லிங் " எனலாம்.


இந்த பெண்கள் நன்றாக படித்த நல்ல  பணியில் இருப்பவர்கள் ! இருந்தவர்கள். என் வீட்டிற்கு எதிராக இருக்கும் அம்மையார் பொறியியற் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர். காலையில் முத்துமீனாடசியைப்பார்த்ததும் காலை தொட்டு வணங்குவார். அப்படி ஒரு sentiment உள்ள வர்கள் இவர்கள்.


இவர்கள்  கூட்டு வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர்கள். எந்த பண் டிக்கையானாலும் குறிப்பாக விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, என்று வந்தால் ஆட்டம் பாட்டம் தான்.


முது மினாடசியை ஒவ்வொரு வீட்டிலும் அழைத்து ஆர்த்தி குங்குமம் அளிப்பார்கள். அதோடு ஏதாவது பரிசுப்பொருளும் கொடுப்பார்கள்.   கடந்த 15 வருடமாக இது நடந்து வருகிறது. எங்கள் வீட்டில் நீத்தார் நினைவு நாள்கூட கிடையாது . 


முத்து மீனாட்ச்சிக்கு இப்போதெல்லாம் ஒவ்வொருவீட்டுக்கும் செல்வது ஆயாசமாக இருக்கிறது.முதுமையும்,இயலாமையும் காரணம்.இந்த ஆண்டு மற்றவர்களை வரவழைத்து ஆர்த்தி குங்குமம் கொடுக்கலாமென்று ஆசைப்பட்டார். அதனை சரசுவதி பூஜை அன்று நடத்தலாம் என்று அபிப்பிராயப்பட்டார். கொலுவைப்பதில்லை அதனால் சரசுவதி பூஜையை எப்படி கொண்டாடுவது என்று யோசித்தோம்.


சரசுவதி பட்த்தினை மாட்டி கொண்டாடலாம் என்று முடிவாகியது.பரிசுப்பொருள் என்ன வாங்குவது என்று இரவு முழுவதுமயோசித்தோம்.


"ஏனுங்க ! செம்மலரில் வந்த கதைகளை இந்தி,ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து செய்த புத்தகங்கள்கொடுத்தால்  என்ன ?"என்றார்   முத்துமீனாட்ச்சி .


"இது தவிர வங்க மொழியில்  ஐந்து,மராத்தியில் நான்கு ,தெலுங்கி பத்துக்கதைகள்  பிரசுரமாகியுள்ளன அவற்றின் ஜெராக்ஸ் நகலை எடுத்து ஒருவடிவமாக்கி கொடுக்கலாம் 'என்றும் கூறினார்.


இந்த யோசனை சரியாக தெரிந்தது. காரியங்கள்  வேகமாக நடந்தன.


இந்த ஆண்டு  செம்மலர் தமிழ்கதைகள் அவரவர் தாய் மொழியில் சரசுவதி அம்மனின் பிரசாதமாக கிடைக்கும் .


"ஏன் மாமா ! சரசுவதி அம்மனை முற்போக்கு எழுத்தாளர் சங்க உறு ப்பினராக்கிவிடுவீர்கள் போல் இருக்கு" என்று என் மைத்துனர் கேட்டார். 


"அதுவும் நடக்கலாம் " என்றேன் நான் !